2 ரயில்கள் மோதி 60 பேர் காயம்; மகாராஷ்டிராவில் பரபரப்பு

தினகரன்  தினகரன்
2 ரயில்கள் மோதி 60 பேர் காயம்; மகாராஷ்டிராவில் பரபரப்பு

கோண்டியா: கோண்டியாவில் சரக்கு ரயில் மீது பயணிகள் ரயில் மோதியதில், ரயிலின் மூன்று பெட்டிகள் தடம் புரண்டதில் 60க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.  மகாராஷ்டிரா மாநிலம் கோண்டியாவில் இன்று அதிகாலை 2.30 மணியளவில் சரக்கு ரயில் மீது பயணிகள் ரயில் மோதிய விபத்தில் மூன்று பெட்டிகள் தடம் புரண்டன. பயணிகள் ரயிலின் எஸ்-3 பெட்டிகள் தடம் புரண்டதால் அதில் இருந்த பயணிகள் 60க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். அவர்கள் அங்கிருந்து மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இதுகுறித்து ரயில்வே அதிகாரிகள் கூறுகையில், ‘சட்டீஸ்கர் மாநிலம் பிலாஸ்பூரில் இருந்து ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூருக்கு பயணிகள் ரயில் சென்று கொண்டிருந்தது. அப்போது கோண்டியா பகுதியில் ரயில் சென்று கொண்டிருந்த போது எதிரே வந்த சரக்கு ரயில் மீது பயணிகள் ரயில் மோதியது. இந்த விபத்தில் 60க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். அவர்கள் கோண்டியா அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இச்சம்பவத்தில் உயிரிழப்பு எதுவும் ஏற்படவில்லை. தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது’ என்றனர்.

மூலக்கதை