சின்சினாட்டி ஓபன் முதல் சுற்றில் ராடுகானு, ஹாலெப்,மெட்வெடேவ் வெற்றி

தினகரன்  தினகரன்
சின்சினாட்டி ஓபன் முதல் சுற்றில் ராடுகானு, ஹாலெப்,மெட்வெடேவ் வெற்றி

சின்சினாட்டி: அமெரிக்காவில் சின்சினாட்டி ஓபன் டென்னிஸ் தொடர் நடந்து வருகிறது. இதில் மகளிர் ஒற்றையர் பிரிவில் இன்று காலை நடந்தமுதல் சுற்று போட்டியில் இங்கிலாந்தின் எம்மா ராடுகானு , 6-4,6-0 என்ற செட்கணக்கில் அமெரிக்காவின் 40வயதான செரீனா வில்லியம்சை வீழ்த்தினார். ருமேனியாவின் சிமோனா ஹாலெப், 6-3,3-6,6-3 என  ரஷ்யாவின் அனஸ்தேசியாவை வென்றார். எஸ்டோனியா அனெட் கொண்டவீட் 3-6,7-5,6-4 என செக்குடியரசின் தெரேசா மார்ட்டின் கோவாவையும், லாத்வியாவின் ஜெலீனா  ஓஸ்டாபென்கோ 6-4,6-4 என  பிரேசிலின் ஹடாட் மியாவையும் வென்றனர். அமெரிக்காவின் மேடிசன் கீஸ் 7-5,6-3 என கஜகஸ்தானின் யூலியா புடின்ட்சேவாவை வீழ்த்தி 2வது சுற்றுக்குள்நுழைந்தார்.  பிரான்சின் கரோலினா கார்சியா  7-6,6-7,6-1 என கிரீசின் மரியா சக்கரியை வென்றார். ஆடவர் ஒற்றையரில் ரஷ்யாவின் டேனியல் மெட்வெடேவ் 6-4,7-5 என நெதர்லாந்தின் வான்டியை வென்றார்.

மூலக்கதை