தி.மு.க.,வின் கபட நாடகம்: அண்ணாமலை தாக்கு

தினமலர்  தினமலர்
தி.மு.க.,வின் கபட நாடகம்: அண்ணாமலை தாக்கு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

சென்னை : 'தி.மு.க.,வின் பயங்கரமான கபட நாடகத்தால், எங்களை வியக்க வைக்க முடியாது' என, தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை தெரிவித்தார்.

அவரது அறிக்கை: முதல்வர் ஸ்டாலின், போதையில்லா தமிழகத்தை உருவாக்கப் போவதாக, ஆக., 11ல் உறுதிமொழி எடுத்தார்.தமிழக அரசுக்கு சொந்தமான, 'டாஸ்மாக்' நிறுவனம், ஆக., 14ம் தேதி, ஒரே நாளில், 274 கோடி ரூபாய்க்கு மது பானங்களை விற்பனை செய்து சாதனை படைத்துள்ளது. தி.மு.க.,வின் பயங்கரமான கபட நாடகத்தால், எங்களை வியக்க வைக்க முடியாது. இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.



அண்ணாமலையின் மற்றொரு அறிக்கையில் கூறியுள்ளதாவது: தில்லை நடராஜரை களங்கப்படுத்திய கயவனை, சிவனடியார்கள் நடத்திய போராட்டத்திற்கு பின்பும், கைது செய்யாமல் காப்பாற்றி வருகிறது, தி.மு.க., அரசு.மறுபுறம், கனல் கண்ணன் தெரிவித்த கருத்திற்கு, உடனே கைது செய்துள்ள அரசின் நடவடிக்கை வாயிலாக, கருத்து சுதந்திரத்திலும் இவர்களது இரட்டை நிலைப்பாட்டையும், மக்கள் விரோத போக்கையும் வெளிப்படுத்தி விட்டனர்.இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

சென்னை : 'தி.மு.க.,வின் பயங்கரமான கபட நாடகத்தால், எங்களை வியக்க வைக்க முடியாது' என, தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை தெரிவித்தார்.அவரது அறிக்கை: முதல்வர் ஸ்டாலின், போதையில்லா தமிழகத்தை

சமரசத்துக்கு இடமளிக்காமல்... அதிகாரத்துக்கு அடிபணியாமல்... நேர்மையான முறையில் துணிச்சலான செய்திகளை மக்களிடம் கொண்டு சேர்க்கும் இணையத்தள செய்தி ஊடகங்களுக்கு, விளம்பர வருவாயே உயிர்நாடி. அதுவே, நீங்கள் விரும்பி வா(நே)சிக்கும் தினமலர், இணையதளத்துக்கும்...

ஆகவே அன்பிற்கினிய வாசகர்களே,‘ஆட்பிளாக்கர்’ உபயோகிப்பதை தவிர்த்து, துணிச்சலான ஊடகத்தின் நேர்மைக்கு தோள் கொடுங்கள். உங்கள் பார்வைக்கு இடையூறாக வரக்கூடிய விளம்பரத்தை மட்டும், ’ஸ்கிரீன் ஷாட்’ எடுத்து எங்களுக்கு அனுப்புங்கள். உங்களின் சிரமத்துக்கு தீர்வு காணுகிறோம்.

நன்றி. தினமலர்

இங்கு வெளியாகும் விளம்பரங்கள், வாசகர்களுக்கு பயனளிக்கும் என்பதாலேயே சேர்க்கப்படுகின்றன. Ad blocker போடுவதன் மூலம், பயனுள்ள பல தகவல்களை நீங்கள் தவறவிடவும் வாய்ப்புண்டு. Ad blocker ஐ தவிருங்கள்.

You’ll usually find this icon in the upper right-hand corner of your screen. You may have more than one ad blocker installed.

You may have to select a menu option or click a button.

மூலக்கதை