இலவசங்களுக்கு எதிரான வழக்கு: சுப்ரீம் கோர்ட்டில் தி.மு.க., மனு

தினமலர்  தினமலர்
இலவசங்களுக்கு எதிரான வழக்கு: சுப்ரீம் கோர்ட்டில் தி.மு.க., மனு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

புதுடில்லி : தேர்தலின் போது இலவசங்கள் வழங்குவதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் தொடரப்பட்டுள்ள வழக்கில் தங்களையும் எதிர்தரப்பில் சேர்க்குமாறு, தி.மு.க., சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

'தேர்தல் பிரசாரங்களின் போது பல்வேறு கட்சிகளும் இலவசங்களை அறிவிக்கின்றன. வெற்றி பெற்ற பின் அந்த வாக்குறுதிகளை நிறைவேற்ற போதிய நிதி இல்லாமல் மாநில அரசுகள் திணறுகின்றன' என, பா.ஜ.,வை சேர்ந்த வழக்கறிஞர் அஸ்வினி உபாத்யாய் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். மனுவை விசாரித்த நீதிமன்றம், இலவச அறிவிப்புகள் பொருளாதார சீரழிவை ஏற்படுத்துவதாக கருத்து தெரிவித்தது.

இந்த வழக்கில், தி.மு.க., தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் நேற்று மனு தாக்கல் செய்யப்பட்டது. அதன் விபரம்: நாட்டில் உள்ள ஒவ்வொரு மாநிலத்துக்கும் தேவைகள் வெவ்வேறாக உள்ளன. அனைத்து மாநிலங்களுக்கும் ஒரே மாதிரியான திட்டம் என்பது நிச்சயம் பொருந்தாது. இதனால் மாநிலங்களுக்கு ஏற்ப மாநில அரசுகள் திட்டங்களை அறிவிக்கின்றன. இதை இலவசங்களாக கருத முடியாது.

வருமானம், அந்தஸ்து, வசதி வாய்ப்புகளில் உள்ள ஏற்றத்தாழ்வுகளை குறைக்கவும், சமூக ஒழுங்கு மற்றும் பொருளாதார நீதியை பாதுகாக்கும் நோக்கத்துடன் இந்த நலத்திட்டங்கள் அறிவிக்கப்படுகின்றன. எனவே, தேர்தலில் இலவச திட்டங்களை எதிர்க்கும் வழக்கில் தங்களை எதிர்தரப்பினராக சேர்த்துக் கொள்ள வேண்டும். இவ்வாறு மனுவில் கோரப்பட்டுள்ளது.

புதுடில்லி : தேர்தலின் போது இலவசங்கள் வழங்குவதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் தொடரப்பட்டுள்ள வழக்கில் தங்களையும் எதிர்தரப்பில் சேர்க்குமாறு, தி.மு.க., சார்பில் உச்ச நீதிமன்றத்தில்

சமரசத்துக்கு இடமளிக்காமல்... அதிகாரத்துக்கு அடிபணியாமல்... நேர்மையான முறையில் துணிச்சலான செய்திகளை மக்களிடம் கொண்டு சேர்க்கும் இணையத்தள செய்தி ஊடகங்களுக்கு, விளம்பர வருவாயே உயிர்நாடி. அதுவே, நீங்கள் விரும்பி வா(நே)சிக்கும் தினமலர், இணையதளத்துக்கும்...

ஆகவே அன்பிற்கினிய வாசகர்களே,‘ஆட்பிளாக்கர்’ உபயோகிப்பதை தவிர்த்து, துணிச்சலான ஊடகத்தின் நேர்மைக்கு தோள் கொடுங்கள். உங்கள் பார்வைக்கு இடையூறாக வரக்கூடிய விளம்பரத்தை மட்டும், ’ஸ்கிரீன் ஷாட்’ எடுத்து எங்களுக்கு அனுப்புங்கள். உங்களின் சிரமத்துக்கு தீர்வு காணுகிறோம்.

நன்றி. தினமலர்

இங்கு வெளியாகும் விளம்பரங்கள், வாசகர்களுக்கு பயனளிக்கும் என்பதாலேயே சேர்க்கப்படுகின்றன. Ad blocker போடுவதன் மூலம், பயனுள்ள பல தகவல்களை நீங்கள் தவறவிடவும் வாய்ப்புண்டு. Ad blocker ஐ தவிருங்கள்.

You’ll usually find this icon in the upper right-hand corner of your screen. You may have more than one ad blocker installed.

You may have to select a menu option or click a button.

மூலக்கதை