சீனாவில் வறட்சி, வெயில்: குடிநீர், விவசாயத்திற்கு சிக்கல்

தினமலர்  தினமலர்
சீனாவில் வறட்சி, வெயில்: குடிநீர், விவசாயத்திற்கு சிக்கல்

பீஜிங்: சீனாவில், வழக்கத்திற்கு மாறாக வெயில் அதிகரித்து வருவதுடன் வறட்சி ஏற்பட்டுள்ளது. இதனால், அங்கு பல இடங்களில் குடிநீருக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளதுடன், விவசாயமும் பாதிக்கப்பட்டுள்ளது.

மலை மற்றும் ஆறுகள் நிறைந்த பகுதியான சோங்குயிங் மழை குறைந்தளவே பெய்துள்ளது. வழக்கமான பெய்யும் மழையின் அளவில் பாதி அளவே இந்த ஆண்டு பெய்துள்ளது. இதனால், அங்குள்ள சிறிய நீர்நிலைகள் வறண்டு காணப்படுகிறது. இதனால், சில கிராமங்களில், குடிநீருக்காகவும், விவசாய பணிகளுக்காகவும் தீயணைப்பு வாகனங்கள் மூலம் குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது.

இந்த பகுதியில் நிலவும் வறட்சி காரணமாக 6 லட்சம் பேர் பாதிக்கப்பட்டதுடன், 36,700 ஹெக்டேர் பரப்பளவில் சாகுபடி செய்யப்பட்டுள்ள பயிர்களுக்கும் சிக்கல் ஏற்பட்டுள்ளது.இதன் அருகில் உள்ள ஹியுபே மாகாணத்தில் மாகாணமும் மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது. இங்கு, சில இடங்களில் பயிர்சாகுபடி முற்றிலும் நாசமடைந்துவிட்டதாக செய்தி வெளியாகி உள்ளது.

அதேநேரத்தில் பருவநிலை மாற்றம் காரணமாக சீனாவில், ஒரு சில இடங்கள் காட்டாற்று வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டுள்ளது.

பீஜிங்: சீனாவில், வழக்கத்திற்கு மாறாக வெயில் அதிகரித்து வருவதுடன் வறட்சி ஏற்பட்டுள்ளது. இதனால், அங்கு பல இடங்களில் குடிநீருக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளதுடன், விவசாயமும்

சமரசத்துக்கு இடமளிக்காமல்... அதிகாரத்துக்கு அடிபணியாமல்... நேர்மையான முறையில் துணிச்சலான செய்திகளை மக்களிடம் கொண்டு சேர்க்கும் இணையத்தள செய்தி ஊடகங்களுக்கு, விளம்பர வருவாயே உயிர்நாடி. அதுவே, நீங்கள் விரும்பி வா(நே)சிக்கும் தினமலர், இணையதளத்துக்கும்...

ஆகவே அன்பிற்கினிய வாசகர்களே,‘ஆட்பிளாக்கர்’ உபயோகிப்பதை தவிர்த்து, துணிச்சலான ஊடகத்தின் நேர்மைக்கு தோள் கொடுங்கள். உங்கள் பார்வைக்கு இடையூறாக வரக்கூடிய விளம்பரத்தை மட்டும், ’ஸ்கிரீன் ஷாட்’ எடுத்து எங்களுக்கு அனுப்புங்கள். உங்களின் சிரமத்துக்கு தீர்வு காணுகிறோம்.

நன்றி. தினமலர்

இங்கு வெளியாகும் விளம்பரங்கள், வாசகர்களுக்கு பயனளிக்கும் என்பதாலேயே சேர்க்கப்படுகின்றன. Ad blocker போடுவதன் மூலம், பயனுள்ள பல தகவல்களை நீங்கள் தவறவிடவும் வாய்ப்புண்டு. Ad blocker ஐ தவிருங்கள்.

You’ll usually find this icon in the upper right-hand corner of your screen. You may have more than one ad blocker installed.

You may have to select a menu option or click a button.

மூலக்கதை