தலிபான் ஆட்சியின் ஓராண்டு நிறைவு: துயரத்தின் பிடியில் ஆப்கானிஸ்தான்

தினமலர்  தினமலர்
தலிபான் ஆட்சியின் ஓராண்டு நிறைவு: துயரத்தின் பிடியில் ஆப்கானிஸ்தான்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

காபூல் : ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் ஆட்சி அமைந்து ஓர் ஆண்டு ஆன நிலையில், அந்நாட்டில் நோயும், பசியும், துயரும் மட்டுமே நிறைந்துள்ளது.

கடந்த ஆண்டு ஆகஸ்ட் 15ல் ஆப்கனில் ஆட்சியைப் பிடித்த தலிபான்கள், இஸ்லாமியர்களின் ஷரியத் சட்டத்தின்படியே ஆட்சி என்று அறிவித்தனர். இந்நிலையில், தங்களது ஓராண்டு ஆட்சி நிறைவடைந்ததைக் கொண்டாடும் வகையில், துப்பாக்கி ஏந்திய தலிபான்கள் தலைநகர் காபூல் தெருக்களில் மோட்டார் சைக்கிள்களில் நேற்று வலம் வந்தனர். அப்போது, 'இஸ்லாம் வாழ்க; அமெரிக்காவுக்கு மரணம்' போன்ற கோஷங்களை முழங்கினர்.

தலிபான்களை உலக நாடுகள் புறக்கணித்ததால் ஆப்கானிஸ்தானுக்கு கிடைத்து வந்த பொருளாதார உதவிகள் தடைப்பட்டன. இதனால், அடிப்படை வசதிகளின்றி அந்நாடு கடும் நெருக்கடியில் சிக்கித் தவிக்கிறது.


மேலும், பெண்களுக்கு கல்வி மற்றும் வேலைக்கு செல்வதில் கடும் கட்டுப்பாடுகளை விதித்ததால், ஒரு வருடத்திற்குப் பிறகும், சிறுமிகள், டீன் ஏஜ் பெண்கள் இன்னும் பள்ளிக்கு செல்ல முடியவில்லை. மேலும், பெண்கள் பொது இடங்களில் தலை முதல் கால் வரை மூடி, தங்கள் கண்களை மட்டுமே காட்ட வேண்டும் போன்ற கட்டுப்பாடுகளால் நாட்டில் அசாதாரண சூழ்நிலை நிலவுகிறது.

அதே சமயம், அரசு வானொலி மற்றும் 'டிவி'க்களில் 'ஊழல் ஒழிப்பு, மேம்படுத்தப்பட்ட பாதுகாப்பு மற்றும் தடை செய்யப்பட்ட போதைப் பொருள் சாகுபடி போன்றவை தலிபான்களின் ஓராண்டு சாதனைகள்' என தெரிவிக்கப்பட்டது.

காபூல் : ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் ஆட்சி அமைந்து ஓர் ஆண்டு ஆன நிலையில், அந்நாட்டில் நோயும், பசியும், துயரும் மட்டுமே நிறைந்துள்ளது.கடந்த ஆண்டு ஆகஸ்ட் 15ல் ஆப்கனில் ஆட்சியைப் பிடித்த

சமரசத்துக்கு இடமளிக்காமல்... அதிகாரத்துக்கு அடிபணியாமல்... நேர்மையான முறையில் துணிச்சலான செய்திகளை மக்களிடம் கொண்டு சேர்க்கும் இணையத்தள செய்தி ஊடகங்களுக்கு, விளம்பர வருவாயே உயிர்நாடி. அதுவே, நீங்கள் விரும்பி வா(நே)சிக்கும் தினமலர், இணையதளத்துக்கும்...

ஆகவே அன்பிற்கினிய வாசகர்களே,‘ஆட்பிளாக்கர்’ உபயோகிப்பதை தவிர்த்து, துணிச்சலான ஊடகத்தின் நேர்மைக்கு தோள் கொடுங்கள். உங்கள் பார்வைக்கு இடையூறாக வரக்கூடிய விளம்பரத்தை மட்டும், ’ஸ்கிரீன் ஷாட்’ எடுத்து எங்களுக்கு அனுப்புங்கள். உங்களின் சிரமத்துக்கு தீர்வு காணுகிறோம்.

நன்றி. தினமலர்

இங்கு வெளியாகும் விளம்பரங்கள், வாசகர்களுக்கு பயனளிக்கும் என்பதாலேயே சேர்க்கப்படுகின்றன. Ad blocker போடுவதன் மூலம், பயனுள்ள பல தகவல்களை நீங்கள் தவறவிடவும் வாய்ப்புண்டு. Ad blocker ஐ தவிருங்கள்.

You’ll usually find this icon in the upper right-hand corner of your screen. You may have more than one ad blocker installed.

You may have to select a menu option or click a button.

மூலக்கதை