மதுரையில் சுதந்திர தின அமுதப்பெருவிழா கோலாகலம்

தினமலர்  தினமலர்
மதுரையில் சுதந்திர தின அமுதப்பெருவிழா கோலாகலம்

மதுரை-மதுரை மாவட்டத்தில் 75 வது சுதந்திர தின அமுதப்பெருவிழா பள்ளி, கல்லுாரிகள், பொது நல அமைப்புகள் சார்பில் நேற்று கோலாகலமாக கொண்டாடப்பட்டது.

அலுவலகங்கள்
மதுரை மாநகராட்சி மைய அலுவலகத்தில் நடந்த விழாவில் மேயர் இந்திராணி கொடியேற்றினார். துணை மேயர் நாகராஜன், கமிஷனர் சிம்ரன் ஜீத் சிங் காலோன், பி.ஆர்.ஓ., மகேஸ்வரன் மண்டல தலைவர்கள், உதவி கமிஷனர்கள் பொறியாளர்கள், சுகாதார அலுவலர்கள், கவுன்சிலர்கள் பங்கேற்றனர். சிறப்பாக பணியாற்றிய அலுவலர்களுக்கு சான்றிதழ்,மாநகராட்சி பள்ளி மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.காந்தி மியூசியத்தில் கலெக்டர் அனீஷ்சேகர் காந்தி சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் மதுரை சார்பில் நடந்த விழாவில் மேலாண் இயக்குனர் ஆறுமுகம் கொடியேற்றினார். தியாகி திருநாவுக்கரசு, தொழிலாளர் நலத்துறை உதவி மேலாளர் கலாதேவி, முதுநிலை துணை மேலாளர் இளங்கோவன், இணை இயக்குனர் பாஸ்கரன், பி.ஆர்.ஓ., சந்தானகிருஷ்ணன் பங்கேற்றனர்.மதுரைதொழிலாளர் இணை கமிஷனர் சுப்பிரமணியன் தலைமையில் சுதந்திர தின விழா நடந்தது.தொழிலாளர் துணை, உதவி கமிஷனர்கள், ஆய்வர்கள், பணியாளர்கள் பங்கேற்றனர். மதுரை சவுராஷ்டிரா கூட்டுறவு வங்கி விழாவில் வங்கி தலைவர் சாரதி, துணைத்தலைவர்சந்திர பிரகாஷ், நிர்வாகக்குழு உறுப்பினர்கள் ரமேஷ்நாத், ஹீராசந்த்பாபு, சித்ரா, ஜீவன் பாபு, பழனிச்சாமி, பிரதீப், வங்கிமேலாளர் சாந்தி, பொது மேலாளர் கண்ணன் பங்கேற்றனர்.மதுரை முதன்மைக் கல்வி அலுவலர் (சி.இ.ஓ.,) அலுவலகத்தில் சி.இ.ஓ., கார்த்திகா கொடியேற்றினார். நேர்முக உதவியாளர்கள் கந்தசாமி, செந்தில்குமார், டி.இ.ஓ., நேர்முக உதவியாளர் விஸ்வநாதன், உதவி திட்ட அலுவலர் குருநாதன், கூடுதல் திட்ட அலுவலர் கார்மேகம், சுற்றுச்சூழல் ஒருங்கிணைப்பாளர் மகாலிங்கம், கண்காணிப்பாளர்கள் முத்துராஜா, வெங்கடேஷ், அலுவலர்கள் சரவணன், மணிமாறன், கண்ணன் பங்கேற்றனர். மதுரை எல்லீஸ்நகர் தமிழ்நாடு வீட்டுவசதி வாரியம் அலுவலகத்தில் மேற்பார்வை பொறியாளர் மூர்த்தி கொடியேற்றினார். செயற்பொறியாளர்கள் இருளப்பன், பழனிகுமார், கண்காணிப்பாளர்கள் சாதிக்பாட்ஷா, தமிழ்ச்செல்வி, உதவி செயற்பொறியாளர் அலுவலக அதிகாரிகள் பங்கேற்றனர்.தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கி சுதந்திர தின விழாவில் நிர்வாக இயக்குனர் ராமமூர்த்தி கொடியேற்றினார். பொது, துணை, உதவி மேலாளர்கள் பங்கேற்றனர்.நெடுஞ்சாலைத் துறை தெற்கு கோட்டம் சார்பில் நடந்த விழாவிற்கு கண்காணிப்பாளர் ஜெயலட்சுமி தலைமை வகித்தார். உதவி கோட்ட பொறியாளர் ராஜாராம் கொடியேற்றினார். சாலை ஆய்வாளர்கள் கார்த்திகேயன், பத்மகணேசன், தை.ராஜூ மற்றும் சாலைப்பணியாளர்கள் பங்கேற்றனர்.

பள்ளிகள்
மதுரை பெருங்குடி அமுதம் மெட்ரிக் மேல்நிலை பள்ளியில் எஸ்.என்.,கல்லுாரி பேராசிரியர் ஜெயக்கொடி கொடியேற்றினார். தாளாளர் ஜெயவீரபாண்டியன், முதல்வர்கள் சொர்ணம் பிராங்களின், ஜெயஷீலா முன்னிலை வகித்தனர். ஆசிரியர்கள் ஆனந்தவள்ளி, செல்வி உள்ளிட்ட ஆசிரியர்கள் பங்கேற்றனர். பட்டிமன்றம் கலைநிகழ்ச்சி நடந்தது. ஆசிரியைகள் ரூபா,அம்பிகா பங்கேற்றனர். பீபிகுளம் தனபால் மேல்நிலைப்பள்ளியில் தாளாளர் தனபால் ஜெயராஜ் கொடியேற்றினார். தலைமையாசிரியர் தினேஷ் சேவியர் முன்னிலை வகித்தார். ஆசிரியர்கள் வெள்ளைத்தாய், மாசில் ஆனந்தி, சுரேஷ்பாபு பங்கேற்றனர். மாணவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது. ஆசிரியை நிஷா நன்றி கூறினார்.வேடர்புளியங்குளம் அரசு உயர்நிலைப் பள்ளியில் தலைமையாசிரியர் தென்கரை முத்துப்பிள்ளை தலைமையில் ஊராட்சி தலைவர் கண்ணன் கொடியேற்றினார். மேலாண்மை குழுவினர் பரிசு வழங்கினர். ஆசிரியைகள் நாகேஸ்வரி, இந்துமதி, விஜயசாரதி, ஜெயலட்சுமி பங்கேற்றனர்.திருமங்கலம் மெப்கோ ஸ்லெங்க் மெட்ரிக் மேல்நிலை பள்ளியில் முதல்வர் ஈஸ்டர் ஜோதி தலைமையில் முன்னாள் ராணுவ வீரர் ரவி கொடியேற்றினார். சுதந்திர போராட்ட வீரர்கள் வேடமணிந்து மாணவர்கள் பங்கேற்றனர். திருப்பாலையில் உள்ள மதுரை பப்ளிக் பள்ளியில் சேர்மன் நாச்சியப்பன் கொடியேற்றினார். 75 மாணவர்கள் பல்வேறு கலை நிகழ்ச்சிகளை நடத்தினர். முதல்வர் கவுரி, ஆசிரியைகள் ஏற்பாடு செய்தனர். செல்லுார் மனோகரா நடுநிலைப் பள்ளியில் துணைமேயர் நாகராஜன் கொடியேற்றினார். தலைமையாசிரியர் தினேஷ்பால் வரவேற்றார். குறிஞ்சி மலர் அரிமா சங்க முன்னாள் கவர்னர் சண்முகசுந்தரம் தலைமை வகித்தார். மண்டல தலைவர் சரவணபுவனேஸ்வரி, கவுன்சிலர் குமாரவேல் பங்கேற்றனர். திருவள்ளுவர் மெட்ரிக் பள்ளியில் நிர்வாகி ராமகிருஷ்ணன் தலைமையில் சுப்பிரமணியன் கொடியேற்றினார். சக்கிமங்கலம் அரசு உயர் நிலைப்பள்ளியில் தலைமையாசிரியர் ஆத்மநாதன் தலைமையில் ஊராட்சி தலைவர் நாகலட்சுமி கொடியேற்றினார். ஒன்றிய கவுன்சிலர் நுார்முகமது பங்கேற்றனர். சிலைமான் போலீஸ் எஸ்.ஐ., அர்ஜூன், ஆரோ லேப் அதிகாரி மகாலட்சுமி மாணவர்களுக்கு பரிசு வழங்கினர்.மதுரை கேப்ரன்ஹால் பெண்கள் மேல்நிலை பள்ளியில் தாளாளர் அருள்தாஸ் கொடியேற்றினார். தலைமையாசிரியை பார்சூன் பொன்மலர் ராணி முன்னிலை வகித்தனர். உதவி தலைமையாசிரியை சாந்தி ஷகிலா பேசினார். என்.எஸ்.எஸ்., திட்ட அலுவலர் சாந்தி செல்வியா, உதவி தலைமயைாசிரியைகள் ஜான்சிராணி, சித்ரா பங்கேற்றனர். மதுரை எல்.கே.பி., நகர் அரசு நடுநிலைப்பள்ளியில் ஊராட்சி தலைவர் நாகலட்சுமி கொடியேற்றினார். தலைமையாசிரியர் தென்னவன் முன்னிலை வகித்தார். லயன்ஸ்கிளப் தலைவர் ராமதாஸ், ஆசிரியர்கள் ராஜவடிவேல், அனுசுயா, அருவகம், சித்ரா, தமிழ்செல்வி, அகிலா, அம்பிகா, விஜயலட்சுமி பங்கேற்றனர். சீலநாயக்கன்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் தலைமையாசிரியை இந்திராகாந்தி கொடியேற்றினார். மாணவர்களுக்கு பேரையூர் சுப்புராஜ் குடும்பத்தினர் பரிசு பொருட்கள் வழங்கினர்.அத்திபட்டி ராமையா நாடார் மேல்நிலைப் பள்ளியில் தலைவர் கிருபாநிதி கொடியேற்றினார். செயலாளர் மாரியப்பன், துணைத் தலைவர் சுந்தரமூர்த்தி பங்கேற்றனர்.மதுரை கூடல்நகர் புனித அந்தோணியார் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் போலீஸ் இன்ஸ்பெக்டர் வசந்தா தலைமை வகித்தார். போட்டிகளில் வென்ற மாணவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது. லயன்ஸ் கிளப் ஆப் மதுரை கிரீன் சிட்டி தலைவர் சுந்தர், சங்க தலைவர் முத்துப்பாண்டியன், செயலாளர் துரை விஜயபாண்டியன், பொருளாளர் ஸ்ரீதரன் பங்கேற்றனர். கே.புதுார் அல் அமீன் மேல்நிலைப்பள்ளியில் நகர் அரிமா சங்கம் இணைந்து நடத்திய விழாவில் சங்க தலைவர் அண்ணாமலை கொடியேற்றினார். தலைமை ஆசிரியர் ஷேக்நபி தலைமை வகித்தார். உதவித் தலைமையாசிரியர்கள் ஜாகீர் உசேன், ரகமத்துல்லா முன்னிலை வகித்தனர். ஆசிரியர்கள் தவுபிக்ராஜா உள்ளிட்டோர் பங்கேற்றனர். ஒத்தக்கடை தொடக்கப்பள்ளியில் ஊராட்சி மன்றத் தலைவர் முருகேஸ்வரி கொடியேற்றினார். மாணவிகள் நிவேதா, ரதிதேவி வரவேற்றனர். டாக்டர் குணா, டர்னிங் பாயின்ட் நிர்வாகி ஹம்சி சுகன்யா, யங் இந்தியா இயக்கம் சேவுகன், ஆசிரியர் மோசஸ் உள்ளிட்டோர் பங்கேற்றனர். தலைமையாசிரியை ஜீவா நன்றி கூறினார்.சின்ன மாங்குளம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் ஊராட்சி தலைவர் வெள்ளைச்சாமி கொடியேற்றினார். தலைமை ஆசிரியர் சித்ரா, ஆசிரியர்கள் சுதா, அனுஷியா, சித்திஅலிமா, ஞானசவுந்தரி ஹேமா பங்கேற்றனர்.மதுரை பிள்ளைமார் சங்கம் மேல்நிலைப்பள்ளியில் நிர்வாக குழு தலைவர் சண்முகவேல், செயலாளர் முருகன், பொருளாளர் கல்யாணசுந்தரம், தலைமை ஆசிரியர் சாந்தி பங்கேற்றனர். கலை நிகழ்ச்சிகள் நடந்தது.மதுரை எஸ்.பி.ஓ.ஏ., பள்ளியில் தாளாளர் செந்தில்ரமேஷ், மெட்ரிக் பள்ளி முதல்வர் சீதாலட்சுமி, மேல்நிலைப் பள்ளி முதல்வர் சபுரால் பானு, மதுரை கல்லுாரி இணைபேராசிரியர் தீனதயாளன், ஆசிரியர்கள் ஏஞ்சலின் சகிலா, கிரிஜா, ராஜேஸ்வரி, மாணவர்கள் பங்கேற்றனர்.பிரிட்டோ பள்ளியில் பள்ளித் தாளாளர் சேவியர், தலைமை ஆசிரியர் ஜோசப், உதவி தலைமை ஆசிரியர் மரிய அருட்செல்வம், லயன்ஸ் சங்க துணை ஆளுநர் ராதாகிருஷ்ணன், ராபர்ட் கென்னடி, சகாயகுமார், கலை இலக்கிய செயலர் ஸ்டான்லி விக்டர் பங்கேற்றனர்.மதுரை அருப்புக்கோட்டை நாடார் உறவின்முறை மகளிர் பள்ளியில் செயலர் சிவக்குமார் தலைமையில், பள்ளித் தலைவர் பிச்சைப்பாண்டியன் கொடியேற்றினார். கீரைத்துறை போலீஸ் இன்ஸ்பெக்டர் ஸ்டெல்லா பாய், தலைமை ஆசிரியர் சரஸ்வதி, பொருளாளர் தாமரைச் செல்வன் பங்கேற்றனர்.ஜெயராஜ் நாடார் மேல்நிலைப்பள்ளியில் தாளாளர் தர்மராஜ் தலைமை வகித்தார். துணைச் செயலாளர் பாஸ்கரன், துணைத் தலைவர் செந்தில்குமார், விடுதிக்குழு செயலாளர்கள் குமார், ஆனந்த கிருஷ்ணன், ஜெயராஜ் நாடார் மகன் சுவாமிதாஸ், தலைமை ஆசிரியர் ரமேஷ் பங்கேற்றனர். கூடல்நகர் ஆல்வின் மெட்ரிக் பள்ளியில் காமராஜ் பல்கலை உதவி பேராசிரியர் ஜஸ்டின் செல்வராஜ் கொடியேற்றினார். பள்ளித் தாளாளர் தேவன்குமார், கல்வி குழும செயலாளர் சுரேஷ், பள்ளி முதல்வர் காஞ்சன பங்கேற்றனர்.அவனியாபுரம் எஸ்.பி.ஜெ., மெட்ரிக் பள்ளியில் டாக்டர் சங்கர் மோகன் கொடியேற்றினார். தாளாளர் அபர்ணா, செயலாளர் பழனிச்சாமி பங்கேற்றனர்.

கல்லுாரிகள்
மதுரை சுப்பலட்சுமி லட்சுமிபதி அறிவியல் கல்லுாரி, ஆர்.எல். இன்ஸ்டிடியூட்ஸ் ஆப் நாட்டிக்கல் சயின்ஸ் (ஆர்.எல்.ஐ.என்.எஸ்.,), ஆர்.எல். இன்ஸ்டிடியூட்ஸ் ஆப் மேனேஜ்மென்ட் ஸ்டடீஸ் இணைந்து நடத்திய சுதந்திர தினவிழாவில் கல்லுாரித் தலைவர் டாக்டர் ஆர்.லட்சுமிபதி தேசியக் கொடியை ஏற்றினார். அவர் பேசுகையில், "ஒழுக்கப்பாதையில் சுதந்திரத்தை பாதுகாப்பது நமது கடமை. வருங்கால தலைமுறை சுதந்திரக் காற்றை துாய்மையாக சுவாசிக்க வழிசெய்ய வேண்டும். பொருளாதாரத்தை மேம்படுத்தும் வகையில் புதிய தேசியக் கல்விக் கொள்கையை கல்வி நிறுவனங்கள் கடைபிடிக்க வேண்டும்" என்றார்.கல்லுாரி முதல்வர் சுஜாதா, துணை முதல்வர்கள் அர்ச்சுனன், குமார சாமி, டீன்கள் பிரியா, ராஜ்மோகன், ஆர்.எல்.ஐ.என்.எஸ்., முதல்வர் ஞானஎடிசன்ராஜ், கேப்டன் திருமூர்த்தி, துறைத் தலைவர் நீலா மாணவர்கள், ஆசிரியர், அலுவலர்கள் பங்கேற்றனர். உடற்கல்வி இயக்குனர் பாண்டியராஜன் உட்பட துறைத் தலைவர்கள் ஏற்பாடு செய்தனர். மதுரை காமராஜ் பல்கலையில் துணைவேந்தர் குமார் கொடியேற்றினார். தியாகி வீரணத்தேவருக்கு தியாக செம்மல் விருது வழங்கப்பட்டது. தியாகிகளின் புகைப்பட தொகுப்பு, வரலாறு, நுால், அஞ்சல் தொகுப்பு வெளியிடப்பட்டது. மரக்கன்றுகள் நடப்பட்டன. பதிவாளர் சிவக்குமார், சிண்டிகேட் உறுப்பினர்கள், பேராசிரியர்கள் பங்கேற்றனர்.மதுரை காமராஜ் பல்கலை கல்லுாரியில் முதல்வர் ஜார்ஜ் கொடியேற்றினார். பேராசிரியர்கள் மணி, முத்துக்கருப்பன், மகேந்திரன், கண்காணிப்பாளர் முத்துக்கிருஷ்ணன் பங்கேற்றனர். மதுரை அமெரிக்கன் கல்லூரியில் முதல்வர் தவமணி கிறிஸ்டோபர் கொடியேற்றி, என்.எஸ்.எஸ்., என்.சி.சி., அணிவகுப்பு மரியாதையை ஏற்றார். சத்திரப்பட்டி கல்லூரி கூடுதல் வளாகத்திலும் கொடியேற்றப்பட்டது. மதுரை லேடி டோக் கல்லுாரியில் இணை பேராசிரியை கீதா கொடியேற்றினார். முதல்வர் கிறிஸ்டியானா சிங் வரவேற்றார். பேராசிரியைகள் சித்ரா, மவுன சுந்தரி, ஜெமிமா ஜெயப்பிரியா, எஸ்தர் எலிசபெத் கிரேஸ் ஒருங்கிணைத்தனர். திருவள்ளுவர் கல்வியியல் கல்லுாரியில் நிர்வாகி சென்னகிருஷ்ணன் தலைமையில் நிர்வாகி ராமராஜ் கொடியேற்றினார். திருவள்ளுவர் கலை அறிவியல் கல்லுாரியில் நிர்வாகிகள் சந்திரன் தலைமையில் பெருமாள் கொடியேற்றினார். முதல்வர் செல்வக்குமாரி உள்பட பலர் பங்கேற்றனர். திருவள்ளுவர் பாலிடெக்னிக் கல்லுாரியில் நிர்வாகிகள் செல்வராஜ் தலைமையில் லோகநாதன் கொடியேற்றினார்.எம்.ஏ.வி.எம்.எம். ஆயிர வைசியர் கல்லுாரி விழாவில் கல்லுாரி முதல்வர் சிவாஜி கணேசன், செயலாளர் ஜெயராமன், துணை முதல்வர் அசோக், டாக்டர் பிரியதர்ஷினி, திட்ட அலுவலர்கள் செல்வகுமார், பாண்டி, அழகர்சாமி, நுாலகர் பவானி, உடற்பயிற்சி இயக்குனர் ஜான்சிராணி பங்கேற்றனர்.பாண்டியன் சரஸ்வதி யாதவ் பொறியியல் கல்லுாரியில் தாளாளர்மலேசியா பாண்டியன் கொடியேற்றினார். நிர்வாக இயக்குனர்கள் சரவணன், வரதராஜன் கல்லுாரி முதல்வர் ராஜா பங்கேற்றனர்.செந்தமிழ் கல்லுாரி விழாவில் செந்தமிழ் இதழ் ஆசிரியர் சதாசிவம் கொடியேற்றினார். நான்காம் தமிழ் சங்க செயலாளர்,கல்லுாரி குழுத் தலைவர், ஆட்சிக் குழு உறுப்பினர்கள், பேராசிரியர்கள் பங்கேற்றனர். நாகமலைப்புதுக்கோட்டை வெள்ளைச்சாமி நாடார் கல்லுாரியில் பேரவை செயற்குழு உறுப்பினர் இம்பாலா, உறுப்பினர் சவுந்திர பாண்டியன், துணைத் தலைவர் சந்தோஷ பாண்டியன், நாடார் மகாஜன சங்க துணைத்தலைவர் சேகர் பாண்டியன், முதல்வர் சுரேஷ்குமார், துணை முதல்வர் செல்வமலர், சுயநிதி பிரிவு இயக்குனர் ஸ்ரீதர் பங்கேற்றனர்.

அரசியல் கட்சிகள்
மதுரை பா.ஜ., சார்பில் காந்தி மியூசியத்தில் இருந்து மாநில பொதுச் செயலாளர் ஸ்ரீனிவாசன் தலைமையில் ஊர்வலமாக சென்றனர். மாவட்ட துணைத் தலைவர் ஜெயவேல், மண்டல பொறுப்பாளர் கதலிநரசிங்கபெருமாள், பிரசார பிரிவு தலைவர் ரவி, வெளிநாடு, அண்டை மாநில தமிழ் வளர்ச்சிப் பிரிவு மாவட்ட தலைவர் ஜெய்கணேஷ், செயலாளர் வேலுப்பிள்ளை ஆறுமுகம் உட்பட பலர் திருவள்ளுவர் சிலை வரை சென்றனர்.பா.ஜ., பழங்காநத்தம் மண்டல் சார்பில் 72 ,71, 74 மற்றும் 69 வது வார்டுகளில் கொடியேற்றப்பட்டது. மண்டல் தலைவர் மணிவண்ணன் தலைமை வகித்து கொடியேற்றினார். மாநில அரசு தொடர்பு பிரிவு செயலாளர் ராஜரத்தினம், நிர்வாகிகள் ஹேமா, செல்வராஜ், ரமேஷ், ராக்கப்பன், சரவணகுமார், பிரகாஷ், லோகநாதன், கொடி சரவணன், கண்ணதாசன் பங்கேற்றனர்.

பொதுநல அமைப்புகள்
தாம்ப்ராஸ் ஜெய்ஹிந்துபுரம் கிளையில் செயலாளர் ராமகிருஷ்ணன் வரவேற்றார். மாவட்ட தலைவர் ரங்கராஜன் முன்னிலையில் தலைவர் கிருஷ்ணமூர்த்தி தலைமை கொடியேற்றினார். மகளிரணி செயலாளர் ராஜம்மீனாட்சி, ஆலோசகர்கள் கல்யாணி, வெங்கட்ராமன், செயற்குழு உறுப்பினர்கள் பாலசுப்ரமணியன், உமா, சித்ரா பங்கேற்றனர். துணைத் தலைவர் ஜெகநாதன் நன்றிகூறினார். ஊமச்சிக்குளம் கிளை சார்பில் தலைவர் வெங்கடாஜலபதி தலைமையில் கொடியேற்றப்பட்டது. கவுரவ ஆலோசகர்கள் ராஜாமணி, வெங்கடாசலம், சிவசுப்ரமணியன், இளைஞரணி செயலாளர் ஸ்ரீராம் பங்கேற்றனர்.மதுரை ராஷ்டிரபந்து எல்.கே.துளசிராம் நற்பணி மண்ற விழாவில் நிறுவன தலைவர் சாந்தாராம் கொடியேற்றினார். ராம பிரமேய ராமானுஜ ஜீயர் சுவாமிகள் பங்கேற்றார்.தமிழ்நாடு தொழில் வர்த்தக சங்கத்தில் தலைவர் ஜெகதீசன் கொடியேற்றினார். மதுரை வேளாண் உணவு வர்த்தக மைய சுதந்திர விழாவில் நிறுவன தலைவர் ரத்தினவேல் கொடியேற்றினார். தமிழ்நாடு உணவு பொருள் வியாபாரிகள் சங்கத்தில் தலைவர் ஜெயபிரகாசம் கொடியேற்றினார். செயலாளர் வேல்சங்கர், நிர்வாகிகள் பங்கேற்றனர்.தமிழக தகவல் அறியும் உரிமை சட்ட ஆர்வலர்கள் சார்பில் சுதந்திர தின விழா நடந்தது. துணை மேயர் நாகராஜன், தகவல் அறியும் சட்ட ஆர்வலர்கள் ஹக்கிம், தியாகராஜன், காசிமாயன், பாலு பங்கேற்றனர்.ஒருங்கிணைந்த அப்பளம் கிளஸ்டர் அலுவலகத்தில் ஐ.ஏ.சி. ஆலோசகர் ஞானசம்பந்தன் கொடியேற்றினார். தலைவர் திருமுருகன், இயக்குனர்கள் விஜயன், மாரிமுத்து, சந்துரு, கார்த்திகேயன், அறிவுமணி, ஜெ.கே.முத்து காயல் கிளஸ்டர் தலைவர் ராஜமூர்த்தி பங்கேற்றனர்.பொது அமைப்புகள்:மதுரை தெற்குவாசல் பள்ளிவாசலில் மாவட்ட ஐக்கிய ஜமாஅத் தலைவர் ராஜன் ஹசன் தலைமையில் டவுன் ஹாஜியார் காஜா முயினுதீன் கொடியேற்றினார். மாவட்டத்தில் 99 ஜமாத்களிலும் தேசியக்கொடியேற்றப்பட்டது. ஆனையூர் மஸ்ஜிதே இப்ராஹிம் பள்ளி வாசலில் முன்னாள் ராணுவ வீரர் ேஷர் அலி கொடியேற்றினார். பள்ளிவாசல் தலைவர் பாபுஜி தலைமை வகித்தார். நஸ்முதீன், சந்தார், நாசர் உசேன் முன்னிலை வகித்தனர். ஜமாத் நிர்வாகிகள் முகமது இப்ராஹிம் அக்பர் அலி, நுார்தீன், ஹம்ஷா மதரசா ஆசிரியர்கள் பங்கேற்றனர். மதுரை விஸ்வநாதபுரம் விரிவாக்கம் குடியிருப்போர் நலச்சங்கம் சார்பில் நிர்வாகி கிருஷ்ணகுமார் கொடியேற்றினார். தலைவர் ஞானகுரு பாண்டியன் தலைமை வகித்தார். முன்னாள் கவுன்சிலர் ேஷக் உசேன் முன்னிலை வகித்தார். மகேஸ்வரன் நன்றி கூறினார். கிருஷ்ணாபுரம் காலனி பாரதியார் நகர் அபுபக்கர் சித்திக் பள்ளிவாசலில் தணிக்கை துறை இணை இயக்குனர் சத்தார் மாலிக் கொடியேற்றினார். முகமது எகியா தலைமை வகித்தார். ேஷக் உசேன் முன்னிலை வகித்தார். ஆரிப், இமாம், அப்பாஸ் பங்கேற்றனர்.

திருப்பரங்குன்றம்
ரயில்வே ஸ்டேஷனில் நிலைய மேலாளர் சந்தோஷ் குமார் கொடி ஏற்றினார். மதுரை ரயில்வே கோட்ட பயணிகள் ஆலோசனை குழு உறுப்பினர் சிவசுந்தரம், முன்பதிவு மேலாளர் மாரியப்பன், கேட் கீப்பர் ஜீவா, சுமையாபானு, சிவானந்தன் பங்கேற்றனர்.மாநகராட்சி மண்டல அலுவலகத்தில் மேற்கு மண்டல தலைவர் சுவிதா விமல் தேசிய கொடி ஏற்றினார். உதவி கமிஷனர் சையது முஸ்தபா கமால், கவுன்சிலர்கள் பங்கேற்றனர். ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் சேர்மன் வேட்டையன் கொடி ஏற்றினார். கமிஷனர்கள் அன்பரசு, ராமர், துணைத் தலைவர் இந்திரா, கவுன்சிலர்கள், பணியாளர்கள் பங்கேற்றனர்.மதுரை பெருங்குடி சரஸ்வதி நாராயணன் கல்லூரியில் முதல்வர் கண்ணன் கொடி ஏற்றினார். என்.எஸ்.எஸ்., திட்ட அலுவலர் விஜயகுமார் வரவேற்றார். என்.சி.சி., அலுவலர் கார்த்திகேயன், மூத்த பேராசிரியர்கள் ராமகிருஷ்ணன், மோதிலால், ஜெயக்குமார், உடல் கல்வி இயக்குனர் யுவராஜ் பங்கேற்றனர். என்.சி.சி., வீரர்களின் அணிவகுப்பு நடந்தது போட்டிகளில் வென்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. மன்னர் திருமலை நாயக்கர் கல்லூரியில் தலைவர் ராஜகோபால் கொடி ஏற்றினார். செயலாளர் விஜயராகவன், முதல்வர் வெங்கடேஸ்வரன், உதவி செயலாளர் ராஜேந்திரபாபு பங்கேற்றனர். சவுராஷ்டிரா கல்லூரியில் ஓய்வு பெற்ற நீதிபதி மோகன் தலைமையில் தலைவர் மோதிலால் கொடி ஏற்றினார். செயலாளர் குமரேஷ், முதல்வர் சரவணன், உடற்கல்வி இயக்குனர் ரவீந்திரன், தேசிய மாணவர் படை ஒருங்கிணைப்பாளர் ஸ்ரீனிவாசன், சுயநிதி பிரிவு இயக்குனர் ராமலிங்கம் பங்கேற்றனர். போட்டிகளில் வென்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கினர்.திருப்பரங்குன்றம் அமிர்த வித்யாலயம் பள்ளியில் முதல்வர் சசிரேகா தலைமையில் திருநகர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜதுரை கொடி ஏற்றினார். ஹார்விப்பட்டி ஸ்ரீமான் எஸ்.ஆர்.வி., மக்கள் நல மன்ற தலைவர் காளிதாசன் தலைமையில் மக்கள் நல மைய தலைவர் செல்வராஜ் கொடி ஏற்றினார். நிர்வாகிகள் அண்ணாமலை, குலசேகரன், வேட்டையார், தங்கராஜ், ஆண்டவர் பங்கேற்றனர். பாண்டியன் நகரில் குடியிருப்போர் நலச் சங்க தலைவர் சண்முகசுந்தரம் கொடி ஏற்றி பாரதியார் சிலைக்கு மாலை அணிவித்தார். நிர்வாகிகள் கதிர்ராஜ், சந்தானம், குமரேசன், ஜான்சி, கிருஷ்ணமூர்த்தி, கணபதி, நாராயணன், பழனிச்சாமி, ஸ்ரீராம் விக்னேஷ் பங்கேற்றனர்.திருநகரில் தன்னார்வ நுகர்வோர் பாதுகாப்பு மைய செயலாளர் சீனிவாசன் தலைமையில் தலைவர் மணி கலையரசன் கொடி ஏற்றினார். நிர்வாகிகள் முத்து முருகன், கண்ணன், செல்வம், ஸ்ரீராம் சுந்தர், பாண்டித்துரை, ஐயப்பன், சண்முகம் பங்கேற்றனர். விளாச்சேரியில் காங்., சார்பில் தலைவர் தயாளன் கொடி ஏற்றினார். நிர்வாகிகள் நாகராஜன், ஆறுமுகம், சேக்அப்துல்லா கலந்து கொண்டனர்.

திருமங்கலம்
நகராட்சி அலுவலகத்தில் நகராட்சி தலைவர் ரம்யா கொடியேற்றினார். துணைத் தலைவர் ஆதவன், நகராட்சி ஆணையாளர் டெரன்ட்ஸ் லியோன் முன்னிலை வகித்தனர். ஆர்.டி.ஓ., அலுவலகத்தில் நேர்முக உதவியாளர் மூர்த்தி கொடியேற்றினார். தாலுகா அலுவலகத்தில் தாசில்தார் சிவராமன் கொடியேற்றினார். வருவாய் ஆய்வாளர்கள் சுமன் அருண் மற்றும் வி.ஏ.ஓ.,க்கள், தலையாரிகள் பங்கேற்றனர். நீதிமன்றத்தில் சார்பு நீதிபதி மாரிக்காளை கொடியேற்றினார். நீதிபதிகள் தினேஷ் குமார், ராமசங்கரன், சண்முகராஜ், வழக்கறிஞர் சங்க தலைவர் ராமசாமி, செயலாளர் அறிவொளி, மூத்த வழக்கறிஞர்கள் கன்னையா, முன்னாள் எம்.எல்.ஏ., சாமிநாதன், தி.மு.க., ஒன்றிய அவைத்தலைவர் சந்திரன் கலந்து கொண்டனர். அரசு மருத்துவமனையில் தலைமை டாக்டர் ராம்குமார் கொடியேற்றினார். டாக்டர்கள் பாலகுரு சஷ்டிகன், அமலா மற்றும் செவிலியர்கள் பங்கேற்றனர்.ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் தலைவர் லதா கொடி ஏற்றினார். துணைத் தலைவர் வளர்மதி, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சவுந்தரராஜன், சங்கக் கைலாசம் பங்கேற்றனர். டி.எஸ்.பி.,அலுவலகத்தில் டி.எஸ்.பி., வசந்தகுமார் கொடியேற்றினார். தீயணைப்பு நிலையத்தில் நிலைய அலுவலர் ஜெயராணி கொடியேற்றினார். சிறப்பு நிலைய அலுவலர் குமார் முன்னிலை வகித்தார். தாலுகா போலீஸ் ஸ்டேஷனில் இன்ஸ்பெக்டர் ராதாமகேஷ் கொடியேற்றினார். எஸ்.ஐ., லிங்கசாமி மற்றும் போலீசார் பங்கேற்றனர்.நகர் போலீஸ் ஸ்டேஷனில் எஸ்.ஐ., சங்கையா கொடியேற்றினார். அரசு ஆண்கள் பள்ளியில் தலைமை ஆசிரியர் பாஸ்கர் கொடியேற்றினார். பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் சுப்பையா உட்பட பலர் கலந்து கொண்டனர். ஓய்வு பெற்ற அலுவலர் சங்கத்தில் தலைவர் மகபூபாச்சா கொடியேற்றினார். துணைத் தலைவர் வெங்கிட கிருஷ்ணன், நிர்வாகிகள் நடராஜன், பாலகிருஷ்ணன், வையத்துரை கலந்து கொண்டனர். கிளை நூலகத்தில் தென்றல் அரிமா சங்க தலைவர் சசிகுமார் கொடியேற்றினார். பொருளாளர் சரவணகுமார், உறுப்பினர் குழந்தை வேலு, நூலக ஆய்வாளர் இளங்கோ, நூலகர் மலர்விழி கலந்து கொண்டனர்.பி.கே.என்., கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் தலைவர் கிருஷ்ணமூர்த்தி கொடியேற்றினார். செயலாளர் செல்வராஜ் பொருளாளர் ஜெயசீலன் முதல்வர் கணேசன் கலந்து கொண்டனர். ஆங்கில துறை உதவி பேராசிரியர் மணிகண்டன் நன்றி கூறினார். என்.சி.சி., மாணவர்களின் அணிவகுப்பு நடந்தது.பி.கே.என்., மெட்ரிக் பள்ளியில் பள்ளிச் செயலாளர் சக்திவேலு, தலைவர் விஜய ராஜன், பொருளாளர் அண்ணாமலை, முதல்வர் சுமதி பங்கேற்றனர்.பி.கே.என்., வித்யாலயா பள்ளியில் தலைவர் இமயபதி கொடியேற்றினார். செயலாளர் அசோக்குமார், இயக்குனர்கள் ஸ்ரீதர், சங்கர், நிர்வாக குழு உறுப்பினர்கள் பன்னீர்செல்வம், பழனி ராஜ், முதல்வர் காருண்யா சந்திரகலா கலந்து கொண்டனர்.அன்னை பாத்திமா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் தாளாளர் எம்.எஸ்.ஷா கொடியேற்றினார். பொருளாளர் சகிலா முன்னிலை வைத்தார். கல்லூரி முதல்வர் நயாஸ் வரவேற்றார். கல்வியியல் கல்லூரி முதல்வர் செல்வம், ஒருங்கிணைப்பாளர்கள் முனியாண்டி, நிர்மலா தேவி, என்.சி.சி., அலுவலர் நாராயண பிரபு கலந்து கொண்டனர். சாத்தங்குடி ஜோதி தர்மன் பள்ளியில் சட்டசபை எதிர்க்கட்சி துணைத் தலைவர் உதயகுமார் கொடியேற்றினார். மேலும் 50-க்கும் மேற்பட்ட முன்னாள் ராணுவ வீரர்களுக்கு சால்வை அணிவித்து கவுரவித்தார்.நெடுஞ்சாலைத் துறை அலுவலகத்தில் உதவி கோட்ட பொறியாளர் லாவண்யா கொடியேற்றினார். இளநிலை பொறியாளர் சுந்தரவடிவேல், பணியாளர்கள், சாலை ஆய்வாளர்கள கலந்து கொண்டனர்.ஆலம்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் தலைமை ஆசிரியர் அருள்ஞானராஜ் கொடியேற்றினார். ஆசிரியர்கள் ரமேஷ், சாரதா தேவி, மகேஸ்வரி, ஜெயந்தி, நந்தினி கலந்து கொண்டனர். விளையாட்டுப் போட்டிகள் நடத்தி பரிசு வழங்கினர். குராயூர் ஊராட்சி ஒன்றிய பள்ளியில் தலைமை ஆசிரியர் புஷ்பகுமாரி கொடியேற்றினார். ஊராட்சி தலைவர் வீரபத்திரன் தலைமை வகித்தார். வார்டு உறுப்பினர் சரவணன் நன்றி கூறினார். மேற்கு சர்வோதய சங்கம் சார்பில் சாஸ்திரிபுரம் அலுவலகத்தில் செயலாளர் ராஜு கொடியேற்றினார். தெற்கு தெருவில் உள்ள காந்தி சிலைக்கு மாலை அணிவித்தனர். கைத்தறி தொழிலாளர்கள் 50க்கும் மேற்பட்டோர் மதுரை ரோடு, விருதுநகர் ரோடு, முன்சீப் கோர்ட் ரோடு, உசிலம்பட்டி ரோடு வழியாக ஊர்வலம் சென்று உசிலம்பட்டி ரோடு அலுவலகத்திற்கு வந்தனர்.தெற்கு ஒன்றிய பா.ஜ., சார்பில் நடந்த விழாவிற்கு தலைவர் சரவணன் தலைமை வகித்தார்.. நடுகோட்டை ஊராட்சி கீரியகவுண்டன்பட்டியில் தெற்கு ஒன்றிய சிறுபான்மை பிரிவு மண்டல் தலைவர் சங்கர் கொடியேற்றினார். மாவட்ட துணைத் தலைவர் சரவணகுமார், பொருளாதார பிரிவு மாநில செயலாளர் நிரஞ்சன், இளைஞர் அணி மாவட்ட செயலாளர் சசிகுமார், ஒன்றிய பொதுச் செயலாளர்கள் நாகலிங்கம், சங்கரேஸ்வரன் பங்கேற்றனர். புளியங்குளத்தில் தலைவர் சிவகாமி தலைமையில் கிராம சபை கூட்டம் நடந்தது. பி.டி.ஓ., சங்கர் கைலாசம் முன்னிலை வகித்தார். மாணவர்களுக்கு விளையாட்டுப் போட்டி நடத்தி பரிசு வழங்கப்பட்டது.

மேலுார்
சார்பு நீதிமன்றத்தில் நீதிபதி கணேசன், குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் முத்துகிருஷ்ண முரளிதாஸ், வழங்கறிஞர் சங்க தலைவர் ஜெயராமன் கொடியேற்றினர். ஆர்.டி.ஓ., பிர்தவுஸ் பாத்திமா அலுவலகத்தில் கொடி ஏற்றி, மரக்கன்று ஊன்றினார். 15 பேருக்கு முதலமைச்சரின் விபத்து காப்பீடு தொகை வழங்கினார் தாலுகா அலுவலகத்தில் தாசில்தார் இளமுருகன், டி.எஸ்.பி. அலுவலகத்தில் ஆர்லியஸ் ரெபோனி, மேலூர் ஒன்றிய அலுவலகத்தில் தலைவர் பொன்னுச்சாமி, பி.டி.ஓ., ஜெயபாலன், நகராட்சியில் தலைவர் முகமது யாசின், கமிஷ்னர் ஆறுமுகம் கொடியேற்றினர்.


மதுரை-மதுரை மாவட்டத்தில் 75 வது சுதந்திர தின அமுதப்பெருவிழா பள்ளி, கல்லுாரிகள், பொது நல அமைப்புகள் சார்பில் நேற்று கோலாகலமாக கொண்டாடப்பட்டது.அலுவலகங்கள்மதுரை மாநகராட்சி மைய

சமரசத்துக்கு இடமளிக்காமல்... அதிகாரத்துக்கு அடிபணியாமல்... நேர்மையான முறையில் துணிச்சலான செய்திகளை மக்களிடம் கொண்டு சேர்க்கும் இணையத்தள செய்தி ஊடகங்களுக்கு, விளம்பர வருவாயே உயிர்நாடி. அதுவே, நீங்கள் விரும்பி வா(நே)சிக்கும் தினமலர், இணையதளத்துக்கும்...

ஆகவே அன்பிற்கினிய வாசகர்களே,‘ஆட்பிளாக்கர்’ உபயோகிப்பதை தவிர்த்து, துணிச்சலான ஊடகத்தின் நேர்மைக்கு தோள் கொடுங்கள். உங்கள் பார்வைக்கு இடையூறாக வரக்கூடிய விளம்பரத்தை மட்டும், ’ஸ்கிரீன் ஷாட்’ எடுத்து எங்களுக்கு அனுப்புங்கள். உங்களின் சிரமத்துக்கு தீர்வு காணுகிறோம்.

நன்றி. தினமலர்

இங்கு வெளியாகும் விளம்பரங்கள், வாசகர்களுக்கு பயனளிக்கும் என்பதாலேயே சேர்க்கப்படுகின்றன. Ad blocker போடுவதன் மூலம், பயனுள்ள பல தகவல்களை நீங்கள் தவறவிடவும் வாய்ப்புண்டு. Ad blocker ஐ தவிருங்கள்.

You’ll usually find this icon in the upper right-hand corner of your screen. You may have more than one ad blocker installed.

You may have to select a menu option or click a button.

மூலக்கதை