நேதாஜி அஸ்தியை இந்தியா எடுத்துவர கோரிக்கை

தினமலர்  தினமலர்
நேதாஜி அஸ்தியை இந்தியா எடுத்துவர கோரிக்கை

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

புதுடில்லி : ''நேதாஜி சுபாஷ் சந்திர போஸின் அஸ்தியை இந்தியாவுக்கு எடுத்து வர, மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்,'' என, அவரது மகள் அனிதா போஸ் தெரிவித்துள்ளார்.

நேதாஜியின் மரணம் குறித்து தற்போது வரை பல தகவல்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றன. கடந்த 1945 ஆகஸ்ட் 18ல் தைவானில் நடந்த விமான விபத்தில், நேதாஜி இறந்தார் என்று நம்பப்பட்டாலும், அவரது மரணம் இன்று வரை மர்மமாகவே உள்ளது.

இந்நிலையில், அவரது ஒரே மகளான அனிதா போஸ், டோக்கியோவில் உள்ள ரென்கோஜி கோவிலில் வைக்கப்பட்டுள்ள நேதாஜியின் அஸ்தியை இந்தியாவுக்கு கொண்டுவந்து மரபணு சோதனைக்கு உட்படுத்த வேண்டும் எனக் கூறியுள்ளார்.

அப்போது தான், ''என் தந்தையின் மரணம் குறித்து இன்னும் சந்தேகம் உள்ளவர்களுக்கு, உண்மையான விபரம் தெரிய வரும்,'' என்றார்.



இது தொடர்பாக, அனிதா போஸ் மேலும் கூறியதாவது: என் தந்தைக்கு நம் நாட்டின் சுதந்திரத்தை விட அவரது வாழ்க்கையில் எதுவும் முக்கியமாக இருந்ததில்லை. அன்னிய ஆட்சி இல்லாத இந்தியாவில் வாழ அவர் ஏங்கினார். ஆனால், சுதந்திரத்தின் மகிழ்ச்சியை அவரால் அனுபவிக்க முடியவில்லை.அதனால், குறைந்தபட்சம் அவரது அஸ்தியையாவது இந்திய மண்ணுக்கு எடுத்து வர வேண்டிய நேரம் இது.

அவரது அஸ்தியை தர ரென்கோஜி கோவில் நிர்வாகமும், ஜப்பானிய அரசும் ஒப்புக் கொண்டுள்ளன. எனவே, இந்த விஷயத்தில் மத்திய அரசு, உடனடியாக நல்ல முடிவெடுத்து, அவரது அஸ்தியை எடுத்துவர நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறினார்.

புதுடில்லி : ''நேதாஜி சுபாஷ் சந்திர போஸின் அஸ்தியை இந்தியாவுக்கு எடுத்து வர, மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்,'' என, அவரது மகள் அனிதா போஸ் தெரிவித்துள்ளார்.நேதாஜியின் மரணம்

சமரசத்துக்கு இடமளிக்காமல்... அதிகாரத்துக்கு அடிபணியாமல்... நேர்மையான முறையில் துணிச்சலான செய்திகளை மக்களிடம் கொண்டு சேர்க்கும் இணையத்தள செய்தி ஊடகங்களுக்கு, விளம்பர வருவாயே உயிர்நாடி. அதுவே, நீங்கள் விரும்பி வா(நே)சிக்கும் தினமலர், இணையதளத்துக்கும்...

ஆகவே அன்பிற்கினிய வாசகர்களே,‘ஆட்பிளாக்கர்’ உபயோகிப்பதை தவிர்த்து, துணிச்சலான ஊடகத்தின் நேர்மைக்கு தோள் கொடுங்கள். உங்கள் பார்வைக்கு இடையூறாக வரக்கூடிய விளம்பரத்தை மட்டும், ’ஸ்கிரீன் ஷாட்’ எடுத்து எங்களுக்கு அனுப்புங்கள். உங்களின் சிரமத்துக்கு தீர்வு காணுகிறோம்.

நன்றி. தினமலர்

இங்கு வெளியாகும் விளம்பரங்கள், வாசகர்களுக்கு பயனளிக்கும் என்பதாலேயே சேர்க்கப்படுகின்றன. Ad blocker போடுவதன் மூலம், பயனுள்ள பல தகவல்களை நீங்கள் தவறவிடவும் வாய்ப்புண்டு. Ad blocker ஐ தவிருங்கள்.

You’ll usually find this icon in the upper right-hand corner of your screen. You may have more than one ad blocker installed.

You may have to select a menu option or click a button.

மூலக்கதை