இது உங்கள் இடம்: விரைவில் விடை கிடைக்கும்!

தினமலர்  தினமலர்
இது உங்கள் இடம்: விரைவில் விடை கிடைக்கும்!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

உலக, நாடு, தமிழக வாசகர்கள் தினமலர் நாளிதழிற்கு எழுதிய கடிதம்

ஜெ.மனோகரன், மதுரையிலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்:தேர்தல் நேரத்தில், அரசியல் கட்சிகள் இலவசங்கள் குறித்த அறிவிப்புகளை வெளியிட தடை விதிக்க முடியாது என, உச்ச நீதிமன்றத்தில் தேர்தல் ஆணையம் தரப்பில், கருத்து தெரிவித்திருப்பது நம் அனைவருக்கும் நினைவிருக்கலாம்.

அதேபோல, தேர்தலில் அனைவரும் ஓட்டளிப்பதை கட்டாயமாக்க முடியாது என, பார்லிமென்டில் மத்திய அமைச்சர் கூறியிருப்பது, சமூக ஆர்வலர்களை மட்டுமின்றி, நாட்டு நலனில் அக்கறை கொண்ட அத்தனை பேரையும் கவலைப்பட வைத்துள்ளது.


பல்வேறு விஷயங்களில் அதிரடி நடவடிக்கைகளையும், முடிவுகளையும் எடுக்கும் தேர்தல் ஆணையமும், மத்திய அரசும், தேர்தல் தொடர்பான இரண்டு முக்கியமான விஷயங்களில் பின்வாங்குவது ஏன் என்று தெரியவில்லை.

தற்போது இலவசங்கள் அறிவிப்பதை கட்டுப்படுத்துவது தொடர்பான விவகாரத்தில், உச்ச நீதிமன்றம் சில உத்தரவுகளைப் பிறப்பித்துள்ளதன் வாயிலாக, பூனைக்கு மணி கட்டுவது யார் என்ற கேள்விக்கு விரைவில் விடை கிடைக்கும் என நம்பலாம்.

உலக, நாடு, தமிழக வாசகர்கள் தினமலர் நாளிதழிற்கு எழுதிய கடிதம்ஜெ.மனோகரன், மதுரையிலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்:தேர்தல் நேரத்தில், அரசியல் கட்சிகள் இலவசங்கள் குறித்த

சமரசத்துக்கு இடமளிக்காமல்... அதிகாரத்துக்கு அடிபணியாமல்... நேர்மையான முறையில் துணிச்சலான செய்திகளை மக்களிடம் கொண்டு சேர்க்கும் இணையத்தள செய்தி ஊடகங்களுக்கு, விளம்பர வருவாயே உயிர்நாடி. அதுவே, நீங்கள் விரும்பி வா(நே)சிக்கும் தினமலர், இணையதளத்துக்கும்...

ஆகவே அன்பிற்கினிய வாசகர்களே,‘ஆட்பிளாக்கர்’ உபயோகிப்பதை தவிர்த்து, துணிச்சலான ஊடகத்தின் நேர்மைக்கு தோள் கொடுங்கள். உங்கள் பார்வைக்கு இடையூறாக வரக்கூடிய விளம்பரத்தை மட்டும், ’ஸ்கிரீன் ஷாட்’ எடுத்து எங்களுக்கு அனுப்புங்கள். உங்களின் சிரமத்துக்கு தீர்வு காணுகிறோம்.

நன்றி. தினமலர்

இங்கு வெளியாகும் விளம்பரங்கள், வாசகர்களுக்கு பயனளிக்கும் என்பதாலேயே சேர்க்கப்படுகின்றன. Ad blocker போடுவதன் மூலம், பயனுள்ள பல தகவல்களை நீங்கள் தவறவிடவும் வாய்ப்புண்டு. Ad blocker ஐ தவிருங்கள்.

You’ll usually find this icon in the upper right-hand corner of your screen. You may have more than one ad blocker installed.

You may have to select a menu option or click a button.

மூலக்கதை