தொழில் அதிபர் அம்பானிக்கு கொலை மிரட்டல் விடுத்தவர் கைது

தினமலர்  தினமலர்
தொழில் அதிபர் அம்பானிக்கு கொலை மிரட்டல் விடுத்தவர் கைது

மும்பை :ரிலையன்ஸ் நிறுவன தலைவர் முகேஷ் அம்பானிக்கு கொலை மிரட்டல் விடுத்த நபரை மும்பை போலீசார் கைது செய்தனர்.


'ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ்' நிறுவன தலைவர் முகேஷ் அம்பானி, பல்வேறு தொழில் நிறுவனங்களை நடத்தி வருகிறார். மஹாராஷ்டிர மாநிலம் மும்பையில் முகேஷ் அம்பானியின் அறக்கட்டளைக்கு சொந்தமான மருத்துவமனை உள்ளது. இந்த மருத்துவமனைக்கு நேற்று தொலைபேசி அழைப்பு வந்தது. அதில் பேசிய நபர், முகேஷ் அம்பானிக்கும், அவரது குடும்பத்தினருக்கும் கொலை மிரட்டல் விடுத்தார். நான்கு முறை தொடர்ச்சியாக தொடர்பு கொண்டு, அவர் மிரட்டல் விடுத்தார்.





இது குறித்து போலீசில் புகார் தெரிவிக்கப்பட்டது. விசாரணையை துவக்கிய போலீசார், மிரட்டல் விடுத்த நபரின் போன் எண்ணை கண்டுபிடித்து, அவரை கைது செய்தனர். அவர் பெயர் அப்சல் என தெரியவந்துள்ளது. மனநிலை பாதிக்கப்பட்டவராக இருக்கலாம் என்றும் போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவரிடம் தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.

கடந்தாண்டு முகேஷ் அம்பானியின் வீட்டுக்கு அருகில், வெடி பொருட்கள் நிரப்பப்பட்ட
கார் நிறுத்தப்பட்டிருந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதையடுத்து, அம்பானியின் குடும்பத்தினருக்கு, மஹாராஷ்டிரா போலீசார் பாதுகாப்பு அளித்து வருகின்றனர்.

மும்பை :ரிலையன்ஸ் நிறுவன தலைவர் முகேஷ் அம்பானிக்கு கொலை மிரட்டல் விடுத்த நபரை மும்பை போலீசார் கைது செய்தனர். 'ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ்' நிறுவன தலைவர் முகேஷ் அம்பானி, பல்வேறு தொழில்

சமரசத்துக்கு இடமளிக்காமல்... அதிகாரத்துக்கு அடிபணியாமல்... நேர்மையான முறையில் துணிச்சலான செய்திகளை மக்களிடம் கொண்டு சேர்க்கும் இணையத்தள செய்தி ஊடகங்களுக்கு, விளம்பர வருவாயே உயிர்நாடி. அதுவே, நீங்கள் விரும்பி வா(நே)சிக்கும் தினமலர், இணையதளத்துக்கும்...

ஆகவே அன்பிற்கினிய வாசகர்களே,‘ஆட்பிளாக்கர்’ உபயோகிப்பதை தவிர்த்து, துணிச்சலான ஊடகத்தின் நேர்மைக்கு தோள் கொடுங்கள். உங்கள் பார்வைக்கு இடையூறாக வரக்கூடிய விளம்பரத்தை மட்டும், ’ஸ்கிரீன் ஷாட்’ எடுத்து எங்களுக்கு அனுப்புங்கள். உங்களின் சிரமத்துக்கு தீர்வு காணுகிறோம்.

நன்றி. தினமலர்

இங்கு வெளியாகும் விளம்பரங்கள், வாசகர்களுக்கு பயனளிக்கும் என்பதாலேயே சேர்க்கப்படுகின்றன. Ad blocker போடுவதன் மூலம், பயனுள்ள பல தகவல்களை நீங்கள் தவறவிடவும் வாய்ப்புண்டு. Ad blocker ஐ தவிருங்கள்.

You’ll usually find this icon in the upper right-hand corner of your screen. You may have more than one ad blocker installed.

You may have to select a menu option or click a button.

மூலக்கதை