கஞ்சா உற்பத்திக்கு முழு தடை: அமைச்சர் சுப்பிரமணியன் தகவல்

தினமலர்  தினமலர்
கஞ்சா உற்பத்திக்கு முழு தடை: அமைச்சர் சுப்பிரமணியன் தகவல்

சென்னை : ''தமிழகத்தில் கஞ்சா உற்பத்தி, 100 சதவீதம் தடை செய்யப்பட்டுள்ளது,'' என, மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் சுப்பிரமணியன் தெரிவித்தார்.

சென்னை, வளசரவாக்கம் மண்டலத்தில், வளசரவாக்கம் மற்றும் ராமாபுரம் பகுதிகளை இணைக்கும் வள்ளுவர் சாலையில், 20 கோடி ரூபாய் செலவில் மழை நீர் வடிகால் அமைக்க, அமைச்சர் சுப்பிரமணியன் தலைமையில் நேற்று பூஜை போடப்பட்டது. அதில், மதுரவாயல் எம்.எல்.ஏ., கணபதி, வளசரவாக்கம் மண்டல குழு தலைவர் ராஜன் மற்றும் அதிகாரிகள் பங்கேற்றனர்.

பின், சுப்பிரமணியன் அளித்த பேட்டி: சென்னையில் இந்தாண்டு பருவ மழையின்போது பாதிப்பு ஏற்படாமல் இருக்க, மழை நீர் வடிகால் அமைக்கும் பணிகள் நடக்கின்றன. தி.மு.க., ஆட்சி அமைந்து, 15 மாதங்களில் அதிக வழக்குகளை பதிவு செய்து, போதை பொருட்களை பறிமுதல் செய்திருக்கிறோம். இது, கடந்த ஒன்பது ஆண்டுகளில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகளை விட ஐந்து மடங்கு அதிகம்.


தமிழகத்தில் கஞ்சா உற்பத்தி, 100 சதவீதம் தடை செய்யப்பட்டுள்ளது. ஆனால் ஆந்திரா, கேரளா, தெலுங்கானா போன்ற மாநிலங்களில் இருந்து வருகிறது. குறிப்பாக, ஆந்திராவில் இருந்து அதிகம் வருவதால், தமிழக போலீசார், அம்மாநிலத்திற்கு சென்று ஆய்வு செய்தனர். அதில், 6,500 ஏக்கரில் கஞ்சா உற்பத்தி செய்வதை கண்டறிந்து, தென் மாநில டி.ஜி.பி.,க்கள் கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.

ஆந்திர அரசு உடனே, 4,000 கோடி ரூபாய் மதிப்புள்ள கஞ்சா செடிகளை அழித்தது. இதுபோன்று அ.தி.மு.க., ஆட்சியில் செய்யப்படவில்லை. இவ்வாறு அவர் பேசினார்.

சென்னை : ''தமிழகத்தில் கஞ்சா உற்பத்தி, 100 சதவீதம் தடை செய்யப்பட்டுள்ளது,'' என, மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் சுப்பிரமணியன் தெரிவித்தார்.சென்னை, வளசரவாக்கம் மண்டலத்தில்,

சமரசத்துக்கு இடமளிக்காமல்... அதிகாரத்துக்கு அடிபணியாமல்... நேர்மையான முறையில் துணிச்சலான செய்திகளை மக்களிடம் கொண்டு சேர்க்கும் இணையத்தள செய்தி ஊடகங்களுக்கு, விளம்பர வருவாயே உயிர்நாடி. அதுவே, நீங்கள் விரும்பி வா(நே)சிக்கும் தினமலர், இணையதளத்துக்கும்...

ஆகவே அன்பிற்கினிய வாசகர்களே,‘ஆட்பிளாக்கர்’ உபயோகிப்பதை தவிர்த்து, துணிச்சலான ஊடகத்தின் நேர்மைக்கு தோள் கொடுங்கள். உங்கள் பார்வைக்கு இடையூறாக வரக்கூடிய விளம்பரத்தை மட்டும், ’ஸ்கிரீன் ஷாட்’ எடுத்து எங்களுக்கு அனுப்புங்கள். உங்களின் சிரமத்துக்கு தீர்வு காணுகிறோம்.

நன்றி. தினமலர்

இங்கு வெளியாகும் விளம்பரங்கள், வாசகர்களுக்கு பயனளிக்கும் என்பதாலேயே சேர்க்கப்படுகின்றன. Ad blocker போடுவதன் மூலம், பயனுள்ள பல தகவல்களை நீங்கள் தவறவிடவும் வாய்ப்புண்டு. Ad blocker ஐ தவிருங்கள்.

You’ll usually find this icon in the upper right-hand corner of your screen. You may have more than one ad blocker installed.

You may have to select a menu option or click a button.

மூலக்கதை