நியூசிலாந்து அசத்தல் வெற்றி: வெஸ்ட் இண்டீஸ் ஏமாற்றம் | ஆகஸ்ட் 11, 2022

தினமலர்  தினமலர்
நியூசிலாந்து அசத்தல் வெற்றி: வெஸ்ட் இண்டீஸ் ஏமாற்றம் | ஆகஸ்ட் 11, 2022

கிங்ஸ்டன்: முதல் ‘டி–20’ போட்டியில் அசத்திய நியூசிலாந்து அணி 13 ரன் வித்தியாசத்தில் வெஸ்ட் இண்டீசை வீழ்த்தியது.

வெஸ்ட் இண்டீஸ் சென்றுள்ள நியூசிலாந்து அணி, மூன்று போட்டிகள் கொண்ட ‘டி–20’ தொடரில் பங்கேற்கிறது. முதல் போட்டி கிங்ஸ்டனில் நடந்தது. ‘டாஸ்’ வென்ற வெஸ்ட் இண்டீஸ் ‘பீல்டிங்’ தேர்வு செய்தது.

 

நியூசிலாந்து அணிக்கு மார்டின் கப்டில் (16) சுமாரான துவக்கம் தந்தார். டேவன் கான்வே (43), கேப்டன் கேன் வில்லியம்சன் (47) நம்பிக்கை அளித்தனர். பிலிப்ஸ் (17), டேரில் மிட்சல் (16) சோபிக்கவில்லை. அபாரமாக ஆடிய ஜேம்ஸ் நீஷம் 15 பந்தில் 33* ரன் (2 சிக்சர், 3 பவுண்டரி) விளாசினார்.

நியூசிலாந்து அணி 20 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 185 ரன் குவித்தது. வெஸ்ட் இண்டீஸ் சார்பில் ஓடியன் ஸ்மித் 3 விக்கெட் கைப்பற்றினார்.

 

சான்ட்னர் அசத்தல்: கடின இலக்கை விரட்டிய வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு கைல் மேயர்ஸ் (1) ஏமாற்றினார். கேப்டன் நிக்கோலஸ் பூரன் (15) நிலைக்கவில்லை. டேவன் தாமஸ் (1), ஷிம்ரன் ஹெட்மயர் (2) சொற்ப ரன்னில் அவுட்டாகினர். ஷமர் புரூக்ஸ் (42), ஜேசன் ஹோல்டர் (25), ராவ்மன் பாவெல் (18) ஓரளவு கைகொடுத்தனர்.

 

கடைசி ஓவரில் வெற்றிக்கு 26 ரன் தேவைப்பட்டன. சவுத்தீ வீசிய 20வது ஓவரில் 12 ரன் மட்டும் கிடைத்தன. வெஸ்ட் இண்டீஸ் அணி 20 ஓவரில் 7 விக்கெட்டுக்கு 172 ரன் மட்டும் எடுத்து தோல்வியடைந்தது. ஷெப்பர்டு (31), ஓடியன் ஸ்மித் (27) அவுட்டாகாமல் இருந்தனர். நியூசிலாந்து சார்பில் 3 விக்கெட் வீழ்த்திய மிட்சல் சான்ட்னர் ஆட்ட நாயகன் விருது வென்றார்.

மூலக்கதை