கிரீஸில் அகதிகள் படகு மூழ்கியதில் பலர் மாயம்

தினமலர்  தினமலர்
கிரீஸில் அகதிகள் படகு மூழ்கியதில் பலர் மாயம்

ஏதென்ஸ்:அகதிகளை ஏற்றிச் சென்ற படகு ஒன்று, தென்கிழக்கு ஐரோப்பிய நாடான கிரீஸ் அருகே கடலில் மூழ்கியதில் பலர் மாயமாகினர்; 29 பேர் மீட்கப்பட்டனர்

சிரியா, லிபியா ஆகிய நாடுகளில் ஏற்பட்டுள்ள உள்நாட்டு போர் காரணமாக, அங்கிருந்து பலர் புகலிடம் தேடி ஐரோப்பிய நாடுகளுக்கு செல்கின்றனர். அதற்காக, அவர்கள் சட்டவிரோதமாக கடத்தல்காரர்கள் உதவியுடன் படகுகளில் செல்கிறார்கள்.

இதுபோல, 80 அகதிகளை ஏற்றிக்கொண்டு, படகு ஒன்று துருக்கி, கிரீஸ் கடல் மார்க்கமாக இத்தாலி நோக்கி புறப்பட்டது. ஆனால், கடல் சீற்றம், பேரலை காரணமாக அந்த படகு, கிரீஸின் கர்பதோஸ் தீவு அருகே நேற்று முன்தினம் இரவு கடலில் கவிழ்ந்தது.

இதில் தத்தளித்த 29 பேரை கிரீஸ் கடற்படையினர் மீட்டனர். மற்றவர்களை தேடும் பணி நடைபெறுகிறது. இது குறித்து, கிரீஸ் கடலோர காவல் படை அதிகாரி கூறியதாவது:இந்த விபத்தில் மாயமானவர்களை, மூன்று கடற்படை கப்பல்கள், ஹெலிகாப்டர் உதவியுடன் தேடும் பணியில் ஈடுபட்டிருக்கிறோம். மீட்கப்பட்டவர்கள் ஆப்கானிஸ்தான், ஈராக் மற்றும் ஈரானைச் சேர்ந்தவர்கள். இவ்வாறு அவர் கூறினார்.

ஏதென்ஸ்:அகதிகளை ஏற்றிச் சென்ற படகு ஒன்று, தென்கிழக்கு ஐரோப்பிய நாடான கிரீஸ் அருகே கடலில் மூழ்கியதில் பலர் மாயமாகினர்; 29 பேர் மீட்கப்பட்டனர்சிரியா, லிபியா ஆகிய நாடுகளில் ஏற்பட்டுள்ள

சமரசத்துக்கு இடமளிக்காமல்... அதிகாரத்துக்கு அடிபணியாமல்... நேர்மையான முறையில் துணிச்சலான செய்திகளை மக்களிடம் கொண்டு சேர்க்கும் இணையத்தள செய்தி ஊடகங்களுக்கு, விளம்பர வருவாயே உயிர்நாடி. அதுவே, நீங்கள் விரும்பி வா(நே)சிக்கும் தினமலர், இணையதளத்துக்கும்...

ஆகவே அன்பிற்கினிய வாசகர்களே,‘ஆட்பிளாக்கர்’ உபயோகிப்பதை தவிர்த்து, துணிச்சலான ஊடகத்தின் நேர்மைக்கு தோள் கொடுங்கள். உங்கள் பார்வைக்கு இடையூறாக வரக்கூடிய விளம்பரத்தை மட்டும், ’ஸ்கிரீன் ஷாட்’ எடுத்து எங்களுக்கு அனுப்புங்கள். உங்களின் சிரமத்துக்கு தீர்வு காணுகிறோம்.

நன்றி. தினமலர்

இங்கு வெளியாகும் விளம்பரங்கள், வாசகர்களுக்கு பயனளிக்கும் என்பதாலேயே சேர்க்கப்படுகின்றன. Ad blocker போடுவதன் மூலம், பயனுள்ள பல தகவல்களை நீங்கள் தவறவிடவும் வாய்ப்புண்டு. Ad blocker ஐ தவிருங்கள்.

You’ll usually find this icon in the upper right-hand corner of your screen. You may have more than one ad blocker installed.

You may have to select a menu option or click a button.

மூலக்கதை