மழையால் அதிகரிக்கும் வைரஸ் காய்ச்சல்; சுகாதாரத்துறை அதிகாரிகள் 'அட்வைஸ்'

தினமலர்  தினமலர்
மழையால் அதிகரிக்கும் வைரஸ் காய்ச்சல்; சுகாதாரத்துறை அதிகாரிகள் அட்வைஸ்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

பொள்ளாச்சி : தென்மேற்கு பருவமழையால், பொள்ளாச்சிக்கு உட்பட்ட பகுதிகளில், 1 முதல் 10 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு வைரஸ் காய்ச்சல் பாதிப்பு அதிகரித்து வருகிறது. இதனால், பொதுமக்கள் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டுமென, சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

பொள்ளாச்சி வருவாய் கோட்டத்திற்கு உட்பட்ட பகுதிகளில், கடந்த, இரு மாதங்களுக்கு மேலாக தென்மேற்கு பருவமழை பெய்கிறது. ஒரு சில இடங்களில் மிதமான மழையும், வால்பாறை பகுதிகளில் கனமழையும் பெய்கிறது. மழை காரணமாக, இரவு மற்றும் காலை நேரங்களில் பனி பொழிவு அதிகம் காணப்படுகிறது.தொடர்ந்து, நகராட்சி பகுதிகளில் ஆங்காங்கே மழைநீர் குளம் போல் தேங்கி நிற்கிறது. இதனால், டெங்கு காய்ச்சல் பரப்பும், 'ஏடீஸ்' வகை கொசுக்கள் அதிகம் பெருக்கம் அடைகின்றன.

பருவநிலை மாற்றம் காரணமாக, ஒன்று முதல் 10 வயதுக்கு உட்பட்ட குழந்தைகள், பெரியவர்கள் வரை சாதாரண வைரஸ் காய்ச்சல் மற்றும் டெங்கு காய்ச்சல் பாதிப்புக்கு உள்ளாகி வருகின்றனர்.குறிப்பிட்ட சிலருக்கு அதிகப்படியான இருமல், சளி, காய்ச்சல் பாதிப்பு உள்ளது. இருமல், சளியுடன் ஏற்படும் இந்த வகையான காய்ச்சல் ஒரு வாரம் வரை குழந்தைகளுக்கு நீடிப்பதாக பெற்றோர்கள் தெரிவிக்கின்றனர். ஆகையால், ஆரம்ப சுகாதாரநிலையம், பொள்ளாச்சி அரசு மருத்துவமனை மற்றும் தனியார் மருத்துவமனைகளில் கூட்டம் அலைமோதுகிறது.


50 படுக்கைகள்


இதுகுறித்து, மாவட்ட தலைமை அரசு மருத்துவமனையில் இருப்பிட மருத்துவ அலுவலர் சரவணபிரகாஷ் கூறுகையில், ''பருவநிலை மாற்றத்தால் வைரஸ் காய்ச்சல் மட்டுமே அதிகம் ஏற்படுகிறது. பொள்ளாச்சி பகுதிகளில் டெங்கு பாதிப்பு குறைவு தான். காய்ச்சலுக்கு சிகிச்சை அளிக்க தேவையான பரிசோதனை 'கிட்', மருத்து பொருட்கள், காய்ச்சலுக்கென 50 படுகைகள் என, அனைத்தும் தயார் நிலையில் உள்ளன. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை காய்ச்சல் ஏற்பட்டால், சுயமாக மருத்துகளை உட்கொள்ளாமல், அருகில் உள்ள மருத்துவர்களை அணுக வேண்டும்.தொடர்ந்து காய்ச்சல் ஏற்பட்டால் ரத்த பரிசோதனை, டெங்கு மற்றும் கொரோனா பரிசோதனை மேற்கொள்வது நல்லது. மக்கள் அனைவரும் குடிநீரை காய்ச்சி குடிக்க வேண்டும்,'' என்றார்.


விழிப்புணர்வு


சுகாதாரத்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், ''மழை பொழிவு அதிகம் உள்ளதால், திறந்தவெளியில் நிற்கும் வாகனங்கள், தண்ணீர் தேங்கக்கூடிய பொருட்களில் 'ஏடீஸ்' கொசு லார்வாக்களின் முட்டைகள் இருக்க வாய்ப்புள்ளது. வீட்டை சுற்றி மழை நீர் தேங்காதவாறு மக்களும் பராமரிக்க வேண்டும்.குளிர்சாதன பெட்டியின் பின்பக்கத்தில் தேங்கும் நீரை அவ்வப்போது அகற்ற வேண்டும். டெங்கு தடுப்பு நடவடிக்கையாக மாவட்ட சுகாதார ஆய்வாளர்கள் மற்றும் பணியாளர்களுக்கு கூட்டம் நடத்தப்படுகிறது.விழிப்புணர்வு ஏற்படுத்துவது, டெங்கு தடுப்பு நடவடிக்கை பற்றி எடுத்துரைக்கப்படுகிறது. இது மட்டுமின்றி வீடுகளில் ஆய்வு, தொட்டிகள் மருத்து ஊற்றுதல் போன்ற பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்,'' என்றார்.

திடீரென காய்ச்சல், தலைவலி, கண்களுக்கு பின்பக்கம் வலி, மூட்டுகளில் வலி, அதீத உஷ்ணம் ஆகியவை டெங்கு காய்ச்சல் முக்கிய அறிகுறிகளாகும். குளிர், தலைவலி, கண்கள் சிவந்து காணப்படுவது, காய்ச்சலுடன் மூச்சு திறணல், கீழ் முதுகு பகுதிகளில் வலி போன்ற பாதிப்புகள் ஏற்பட்டால், உடனடியாக மருத்துவர்களை அணுக வேண்டும், என, சுகாதாரத்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.



பொள்ளாச்சி : தென்மேற்கு பருவமழையால், பொள்ளாச்சிக்கு உட்பட்ட பகுதிகளில், 1 முதல் 10 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு வைரஸ் காய்ச்சல் பாதிப்பு அதிகரித்து வருகிறது. இதனால், பொதுமக்கள்

சமரசத்துக்கு இடமளிக்காமல்... அதிகாரத்துக்கு அடிபணியாமல்... நேர்மையான முறையில் துணிச்சலான செய்திகளை மக்களிடம் கொண்டு சேர்க்கும் இணையத்தள செய்தி ஊடகங்களுக்கு, விளம்பர வருவாயே உயிர்நாடி. அதுவே, நீங்கள் விரும்பி வா(நே)சிக்கும் தினமலர், இணையதளத்துக்கும்...

ஆகவே அன்பிற்கினிய வாசகர்களே,‘ஆட்பிளாக்கர்’ உபயோகிப்பதை தவிர்த்து, துணிச்சலான ஊடகத்தின் நேர்மைக்கு தோள் கொடுங்கள். உங்கள் பார்வைக்கு இடையூறாக வரக்கூடிய விளம்பரத்தை மட்டும், ’ஸ்கிரீன் ஷாட்’ எடுத்து எங்களுக்கு அனுப்புங்கள். உங்களின் சிரமத்துக்கு தீர்வு காணுகிறோம்.

நன்றி. தினமலர்

இங்கு வெளியாகும் விளம்பரங்கள், வாசகர்களுக்கு பயனளிக்கும் என்பதாலேயே சேர்க்கப்படுகின்றன. Ad blocker போடுவதன் மூலம், பயனுள்ள பல தகவல்களை நீங்கள் தவறவிடவும் வாய்ப்புண்டு. Ad blocker ஐ தவிருங்கள்.

You’ll usually find this icon in the upper right-hand corner of your screen. You may have more than one ad blocker installed.

You may have to select a menu option or click a button.

மூலக்கதை