விமான போக்குவரத்து துறை முடிவால் கட்டணம் உயருமா?

தினமலர்  தினமலர்
விமான போக்குவரத்து துறை முடிவால் கட்டணம் உயருமா?

புதுடில்லி : மத்திய அரசு விமானக் கட்டண உச்சவரம்பை நீக்கி உள்ளதால் விமான கட்டணம் உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

கொரோனா பரவல் உச்சத்தில் இருந்த போது, விமானக் கட்டணத்தில் சில வரம்புகளை விதித்து மத்திய அரசு உத்தரவிட்டது. இதனால், விமான நிறுவனங்கள் பெருமளவு நஷ்டத்தை சந்தித்தன. இந்நிலையில், அந்த வரம்புகளை நீக்கி, விமானப் போக்குவரத்து நிறுவனங்களின் வர்த்தகத்தை அதிகரிக்க, தற்போது நடைமுறையில் இருக்கும் 72.5 சதவீத பயணிகள் எண்ணிக்கையை 85 சதவீதமாக உயர்த்த அரசு அனுமதி அளித்துள்ளது.




இதையடுத்து, வரும் 31 முதல் பயணியரிடம் என்ன கட்டணம் வசூலிக்க வேண்டும் என்பதை விமான நிறுவனங்கள் சுதந்திரமாக தீர்மானிக்கும். ஆனாலும், இது பயணியரை பெரிய அளவில் பாதிக்காது என விமானத்துறை நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.
இது குறித்து விமானப் போக்குவரத்து அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா, தன்னுடைய சமூக வலைதளத்தில், 'தினசரி தேவை மற்றும் விமான எரிபொருளின் விலைகளை கவனமாக ஆய்வு செய்த பிறகே விமான கட்டண உச்சவரம்பை நீக்க முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இது எதிர்காலத்தில் உள்நாட்டு விமானப் போக்குவரத்தின் வளர்ச்சிக்கு உதவும்' என, பதிவிட்டுள்ளார்.

புதுடில்லி : மத்திய அரசு விமானக் கட்டண உச்சவரம்பை நீக்கி உள்ளதால் விமான கட்டணம் உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளது. கொரோனா பரவல் உச்சத்தில் இருந்த போது, விமானக் கட்டணத்தில் சில வரம்புகளை

சமரசத்துக்கு இடமளிக்காமல்... அதிகாரத்துக்கு அடிபணியாமல்... நேர்மையான முறையில் துணிச்சலான செய்திகளை மக்களிடம் கொண்டு சேர்க்கும் இணையத்தள செய்தி ஊடகங்களுக்கு, விளம்பர வருவாயே உயிர்நாடி. அதுவே, நீங்கள் விரும்பி வா(நே)சிக்கும் தினமலர், இணையதளத்துக்கும்...

ஆகவே அன்பிற்கினிய வாசகர்களே,‘ஆட்பிளாக்கர்’ உபயோகிப்பதை தவிர்த்து, துணிச்சலான ஊடகத்தின் நேர்மைக்கு தோள் கொடுங்கள். உங்கள் பார்வைக்கு இடையூறாக வரக்கூடிய விளம்பரத்தை மட்டும், ’ஸ்கிரீன் ஷாட்’ எடுத்து எங்களுக்கு அனுப்புங்கள். உங்களின் சிரமத்துக்கு தீர்வு காணுகிறோம்.

நன்றி. தினமலர்

இங்கு வெளியாகும் விளம்பரங்கள், வாசகர்களுக்கு பயனளிக்கும் என்பதாலேயே சேர்க்கப்படுகின்றன. Ad blocker போடுவதன் மூலம், பயனுள்ள பல தகவல்களை நீங்கள் தவறவிடவும் வாய்ப்புண்டு. Ad blocker ஐ தவிருங்கள்.

You’ll usually find this icon in the upper right-hand corner of your screen. You may have more than one ad blocker installed.

You may have to select a menu option or click a button.

மூலக்கதை