5வது நாளாக தொடரும் போர் பயிற்சி தைவான் ஜலசந்தியில் சீனா அடாவடி

தினமலர்  தினமலர்
5வது நாளாக தொடரும் போர் பயிற்சி தைவான் ஜலசந்தியில் சீனா அடாவடி

பீஜிங்-நம் அண்டை நாடான சீனா, தைவான் ஜலசந்தியில், நான்கு நாட்களுக்கு அறிவித்திருந்த போர் பயிற்சியை ஐந்தாவது நாளாக நேற்றும் நடத்தியது.

தென்கிழக்கு ஆசிய நாடான தைவானை, தங்கள் நாட்டுடன் இணைக்க, நம் அண்டை நாடான சீனா முயற்சித்து வருகிறது. ஆனால், தைவானுக்கு ஆதரவாக அமெரிக்கா உள்ளது. சமீபத்தில், அமெரிக்க பார்லி., சபாநாயகர் நான்சி பெலோசி தைவானுக்கு வந்தார். இவரது வருகைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக, கடந்த 4ம் தேதி முதல், 7ம் தேதி வரை, தைவான் ஜலசந்தியில் சீன ராணுவம் போர் பயிற்சி செய்வதாக அறிவித்து, ஏவுகணைகளை ஏவி தைவானை அச்சுறுத்தியது.

இதற்கு, அமெரிக்கா உட்பட பல்வேறு நாடுகள் கடும் கண்டனம் தெரிவித்தன. ஆனால், சீனா கண்டுகொள்ளவில்லை.இந்நிலையில், தைவான் ஜலசந்தியில், ஐந்தாவது நாளாக நேற்றும் சீன ராணுவத்தினர் போர் பயிற்சியில் ஈடுபட்டனர். இதையடுத்து, அமெரிக்க தேசிய பாதுகாப்பு செயலர் ஜான் கிர்பி, “அடுத்த வாரத்தில், தைவான் ஜலசந்தியில் எங்களுடைய போர் விமானங்கள் மற்றும் போர்க் கப்பல்களை நிறுத்துவோம்,” என எச்சரித்துள்ளார்.இந்நிலையில், சீன வெளியுறவுத் துறை அமைச்சர் வாங் யீ, “தைவான் கடல் பகுதிக்கு போர் விமானங்கள் மற்றும் போர்க் கப்பல்களை அனுப்பி, நெருக்கடியை துாண்ட வேண்டாம்,” என தெரிவித்துள்ளார்.


பீஜிங்-நம் அண்டை நாடான சீனா, தைவான் ஜலசந்தியில், நான்கு நாட்களுக்கு அறிவித்திருந்த போர் பயிற்சியை ஐந்தாவது நாளாக நேற்றும் நடத்தியது.தென்கிழக்கு ஆசிய நாடான தைவானை, தங்கள் நாட்டுடன்

சமரசத்துக்கு இடமளிக்காமல்... அதிகாரத்துக்கு அடிபணியாமல்... நேர்மையான முறையில் துணிச்சலான செய்திகளை மக்களிடம் கொண்டு சேர்க்கும் இணையத்தள செய்தி ஊடகங்களுக்கு, விளம்பர வருவாயே உயிர்நாடி. அதுவே, நீங்கள் விரும்பி வா(நே)சிக்கும் தினமலர், இணையதளத்துக்கும்...

ஆகவே அன்பிற்கினிய வாசகர்களே,‘ஆட்பிளாக்கர்’ உபயோகிப்பதை தவிர்த்து, துணிச்சலான ஊடகத்தின் நேர்மைக்கு தோள் கொடுங்கள். உங்கள் பார்வைக்கு இடையூறாக வரக்கூடிய விளம்பரத்தை மட்டும், ’ஸ்கிரீன் ஷாட்’ எடுத்து எங்களுக்கு அனுப்புங்கள். உங்களின் சிரமத்துக்கு தீர்வு காணுகிறோம்.

நன்றி. தினமலர்

இங்கு வெளியாகும் விளம்பரங்கள், வாசகர்களுக்கு பயனளிக்கும் என்பதாலேயே சேர்க்கப்படுகின்றன. Ad blocker போடுவதன் மூலம், பயனுள்ள பல தகவல்களை நீங்கள் தவறவிடவும் வாய்ப்புண்டு. Ad blocker ஐ தவிருங்கள்.

You’ll usually find this icon in the upper right-hand corner of your screen. You may have more than one ad blocker installed.

You may have to select a menu option or click a button.

மூலக்கதை