யுஜிசி நெட் 2-ம் கட்ட தேர்வு ஒத்திவைப்பு

தினகரன்  தினகரன்
யுஜிசி நெட் 2ம் கட்ட தேர்வு ஒத்திவைப்பு

புதுடெல்லி: வரும் 12ம் தேதி முதல் நடக்கவிருந்த யுஜிசி நெட் 2ம் கட்ட தகுதி தேர்வு செப்.20ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது என்று யுஜிசி தலைவர் தெரிவித்தார். கல்லூரிகளில் உதவிப் பேராசிரியர் பணியிடங்களுக்கான நெட் தகுதித் தேர்வு ஆண்டுதோறும் நடைபெற்று வருகிறது.  தேர்வில் வெற்றி பெறுபவர்கள், கல்லூரி, பல்கலைக்கழகங்களில் உதவிப் பேராசிரியராக நியமிக்கப்படுவர். இந்த ஆண்டு 2021 டிசம்பர் மற்றும் 2022 ஜூன் ஆகிய 2 வருட தேர்வுகளை ஒருங்கே நடத்தப்படும் என்று தேசிய தேர்வு முகமை(என்டிஏ) அறிவித்திருந்தது. அதன்படி கடந்த மாதம் 9,11,12 ஆகிய தேதிகளில்  33 பாடங்களுக்கான முதல் கட்ட தேர்வுகள் நடந்தன.  நாடு முழுவதும் 225 நகரங்களில் 310 தேர்வு மையங்களில் தேர்வு நடந்தது. இரண்டாம் கட்ட தேர்வுகள்  வரும் 12,13,14 ஆகிய தேதிகளில் நடக்கவிருந்த நிலையில் தேர்வு தேதி மாற்றப்பட்டுள்ள. இது குறித்து யுஜிசி தலைவர் ஜெகதீஷ் குமார் கூறுகையில்,‘‘இம்மாதம் 12,13, 14 ஆகிய தேதிகளில் நடக்கவிருந்த இரண்டாம் கட்ட நெட் தேர்வுகள் செப்டம்பர் 20ம் தேதியில் இருந்து 30ம் தேதிக்குள் நடத்தப்படும்’’என்றார்.

மூலக்கதை