ராஜஸ்தான் கோயிலில் நெரிசலில் சிக்கி 3 பெண்கள் பலி

தினகரன்  தினகரன்
ராஜஸ்தான் கோயிலில் நெரிசலில் சிக்கி 3 பெண்கள் பலி

சிகார்: ராஜஸ்தானில் கோயிலில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 3 பெண்கள் பலியாயினர். 4 பேர் படுகாயமடைந்தனர். ராஜஸ்தான் மாநிலம் சிகார் மாவட்டத்தில்  காடு ஷியாம்ஜி கோயில் உள்ளது. சிராவண மாதத்தின் கடைசி திங்கட்கிழமையை வடமாநிலங்களில் மக்கள் புனித நாளாக கொண்டாடி வருகின்றனர். இதையொட்டி ஷியாம்ஜி கோயிலில் நேற்று அதிகாலை சிறப்பு பூஜைகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதற்காக ஆயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர். அதிகாலை  4.30 மணிக்கு கோயில் நடைதிறக்கப்பட்டபோது நீண்ட வரிசையில் காத்திருந்த பக்தர்கள் ஒருவரை ஒருவர் முந்திக்கொண்டு கோயிலுக்குள் நுழைய முற்பட்டனர். அப்போது   சாந்தி தேவி(63) என்ற பெண் கீழே விழுந்தார். அவரது அருகே நின்ற 2 பெண்களும் நெரிசலை தாக்குப்பிடிக்க முடியாமல், கீழே சரிந்து விழுந்தனர். இந்த சம்பவத்தில், மூவரும் பலியாயினர். 4 பேருக்கு காயம் ஏற்பட்டது. நெரிசலில் சிக்கி 3 பேர் உயிரிழந்ததற்கு பிரதமர் மோடி, காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி உள்ளிட்ட தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

மூலக்கதை