3 நாள் சண்டை ஓய்ந்தது; காசா முனையில் போர் நிறுத்தம்

தினகரன்  தினகரன்
3 நாள் சண்டை ஓய்ந்தது; காசா முனையில் போர் நிறுத்தம்

காசா: ஈரான் ஆதரவுடன் செயல்படும் பாலஸ்தீனின் ஐஜேவை (இஸ்லாமிக் ஜிகாத்) குறிவைத்து இஸ்ரேல் காசா பகுதியில் கடந்த 3 நாட்கள் நடத்திய தாக்குதலில் 15 குழந்தைகள், 4 பெண்கள் உள்பட 43 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டனர். மேலும், 311 பேர் காயமடைந்துள்ளனர் என்று பாலஸ்தீன் நாட்டின் சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.இந்நிலையில், இஸ்ரேல், காசா தீவிரவாதிகளுக்கு இடையே நேற்று போர் நிறுத்த ஒப்பந்தம் கையெழுத்தானது. இதில் இஸ்ரேல் ராணுவத்தினரால் கைது செய்யப்பட்டுள்ள ஐஜே அமைப்பின் 2 முக்கிய தலைவர்களை விடுவிப்பது தொடர்பாக எகிப்து பேச்சுவார்த்தை நடத்தும். ஆனால், அவர்களை விடுவிப்பது குறித்து எந்த உத்தரவாதமும் அளிக்க முடியாது என்று கூறப்பட்டுள்ளது.

மூலக்கதை