ஆயுத சட்ட வழக்கில் பாஜ அமைச்சருக்கு ஓராண்டு சிறை: தீர்ப்பு வெளியான உடனேயே ஜாமீன்

தினகரன்  தினகரன்
ஆயுத சட்ட வழக்கில் பாஜ அமைச்சருக்கு ஓராண்டு சிறை: தீர்ப்பு வெளியான உடனேயே ஜாமீன்

கான்பூர்: உத்தர பிரதேசத்தில் 30 ஆண்டுகளுக்கு முந்தைய ஆயுத சட்ட வழக்கில் அமைச்சர் ராகேஷ் சச்சானுக்கு ஓராண்டு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. உத்தர பிரதேசத்தில் யோகி ஆதித்யநாத் தலைமையிலான பாஜ கூட்டணி ஆட்சி நடந்து வருகிறது. இங்கு காதி மற்றும் கிராமத் தொழில்கள், பட்டு வளர்ப்பு, கைத்தறி மற்றும் ஜவுளித்துறை அமைச்சராக இருப்பவர் ராகேஷ் சச்சான். இவர் மீது ஆயுத சட்டத்தின் கீழ் வழக்கு ஒன்று கடந்த 30 ஆண்டுகளாக நிலுவையில் இருந்தது. இந்த வழக்கு கடந்த சனிக்கிழமை விசாரணை க்கு வந்த போது அமைச்சர் குற்றவாளி என்பது உறுதியானது. இதையடுத்து, தண்டனை உத்தரவுடன் நீதிமன்றத்தில் இருந்து தலைமறைவான அமைச்சர், நேற்று திங்கள்கிழமை தனது வக்கீல்களுடன் மெட்ரோபாலிட்டன் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் ஆஜரானார். அப்போது அவருக்கு ஓராண்டு சிறை தண்டனையும் ₹1,500 அபராதமும் விதிக்கப்பட்டது. அதே நேரம், அமைச்சருக்கு உடனடியாக பெயிலும் வழங்கப்பட்டது.

மூலக்கதை