ஷங்கர் படத்தில் சூர்யா

தினமலர்  தினமலர்
ஷங்கர் படத்தில் சூர்யா

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல் நடித்திருந்த விக்ரம் படத்தில் ரோலக்ஸ் என்ற ஒரு கேமியோ ரோலில் நடித்திருந்தார் சூர்யா. ஐந்து நிமிடம் மட்டுமே விக்ரம் படத்தில் இடம் பெற்ற அந்த கேரக்டர் பெரிய அளவில் ரசிகர்களை கவர்ந்தது. அதையடுத்து சுதா இயக்கத்தில் அக்ஷய்குமார் நடித்து வரும் சூரரைப் போற்று ஹிந்தி ரீமேக் படத்திலும் கேமியோ ரோலில் நடிக்கிறார் சூர்யா. இந்த நிலையில் தற்போது ராம்சரண் நடிப்பில் ஷங்கர் இயக்கி வரும் ஆர்சி -15 என்ற படத்திலும் சூர்யா ஒரு கேமியோ ரோலில் நடிக்க இருப்பதாக புதிய தகவல் வெளியாகியிருக்கிறது. இப்படத்தில் சூர்யா நடிக்கும் வேடம் 10 நிமிடங்கள் வரை இடம் பெறுகிறதாம். விக்ரம் படத்தை விட சூர்யா நடிக்கும் இந்த வேடம் மிகப் பெரிய அளவில் ரசிகர்கள் மத்தியில் பேசப்படக் கூடியதாக இருக்கும் என்றும் கூறப்படுகிறது.

மூலக்கதை