முல்லைப் பெரியாறில் மழை: ஸ்டாலினுக்கு பினராயி கடிதம்

தினமலர்  தினமலர்
முல்லைப் பெரியாறில் மழை: ஸ்டாலினுக்கு பினராயி கடிதம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

சென்னை-'முல்லைப் பெரியாறு அணை நீர்ப் பிடிப்பு பகுதிகளில், கன மழை பெய்துள்ளதால், அணைக்கு வரும் நீரின் அளவை விட, கூடுதல் நீரை வெளியேற்ற வேண்டும்' என, முதல்வர் ஸ்டாலினுக்கு, கேரள முதல்வர் பினராயி விஜயன் கடிதம் எழுதி உள்ளார்.




கடிதத்தில் அவர் கூறியிருப்பதாவது:கேரள மாநிலத்தில், கடந்த சில தினங்களாக கன மழை பெய்து வருகிறது. இந்திய வானிலை ஆய்வு மையம், இடுக்கி உட்பட பல மாவட்டங்களுக்கு, 'ரெட் அலெர்ட்' எச்சரிக்கை விடுத்துள்ளது. முல்லைப் பெரியாறு அணை நீர் மட்டம், 136 அடியை நெருங்கி உள்ளது. அணைக்கு அதிகப்படியான நீர் வரத்து உள்ளதால், அணை நீர் மட்டம் திடீரென உயர வாய்ப்புள்ளது.




எனவே, முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க வேண்டும்.அணையின் நீர் மட்டத்தை படிப்படியாக குறைக்க வேண்டும். நீர் வரத்தை விட அதிகப்படியான தண்ணீரை வெளியேற்ற, அலுவலர்களுக்கு அறிவுரை வழங்க வேண்டும்.ஏனெனில், முல்லைப் பெரியாறு அணை நீர்ப் பிடிப்பு பகுதிகளில், அதிக மழை பெய்து உள்ளது.

மேலும், முல்லைப் பெரியாறு அணை மதகுகளை திறப்பதற்கு, 24 மணி நேரத்துக்கு முன், கேரள அரசுக்கு தெரியப்படுத்தவும். அப்போது தான் அணையின் கீழ் பகுதியில் உள்ள மக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த, முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்க முடியும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

சென்னை-'முல்லைப் பெரியாறு அணை நீர்ப் பிடிப்பு பகுதிகளில், கன மழை பெய்துள்ளதால், அணைக்கு வரும் நீரின் அளவை விட, கூடுதல் நீரை வெளியேற்ற வேண்டும்' என, முதல்வர் ஸ்டாலினுக்கு, கேரள

சமரசத்துக்கு இடமளிக்காமல்... அதிகாரத்துக்கு அடிபணியாமல்... நேர்மையான முறையில் துணிச்சலான செய்திகளை மக்களிடம் கொண்டு சேர்க்கும் இணையத்தள செய்தி ஊடகங்களுக்கு, விளம்பர வருவாயே உயிர்நாடி. அதுவே, நீங்கள் விரும்பி வா(நே)சிக்கும் தினமலர், இணையதளத்துக்கும்...

ஆகவே அன்பிற்கினிய வாசகர்களே,‘ஆட்பிளாக்கர்’ உபயோகிப்பதை தவிர்த்து, துணிச்சலான ஊடகத்தின் நேர்மைக்கு தோள் கொடுங்கள். உங்கள் பார்வைக்கு இடையூறாக வரக்கூடிய விளம்பரத்தை மட்டும், ’ஸ்கிரீன் ஷாட்’ எடுத்து எங்களுக்கு அனுப்புங்கள். உங்களின் சிரமத்துக்கு தீர்வு காணுகிறோம்.

நன்றி. தினமலர்

இங்கு வெளியாகும் விளம்பரங்கள், வாசகர்களுக்கு பயனளிக்கும் என்பதாலேயே சேர்க்கப்படுகின்றன. Ad blocker போடுவதன் மூலம், பயனுள்ள பல தகவல்களை நீங்கள் தவறவிடவும் வாய்ப்புண்டு. Ad blocker ஐ தவிருங்கள்.

You’ll usually find this icon in the upper right-hand corner of your screen. You may have more than one ad blocker installed.

You may have to select a menu option or click a button.

மூலக்கதை