மதுபான பாரில் தீ; 13 பேர் கருகி பலி

தினகரன்  தினகரன்
மதுபான பாரில் தீ; 13 பேர் கருகி பலி

பாங்காக்,: தாய்லாந்தில் உள்ள மதுபான விடுதியில் ஏற்பட்ட தீ விபத்தில் 13 பேர் உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்தனர். தாய்லாந்தில் சோன்புரி மாகாணத்தின் சத்தாஹிப் மாவட்டத்தில் உள்ள இரவு நேர மதுபான விடுதி ஒன்றில் நேற்று திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இதில், 13 பேர் உடல் கருகி பலியாகினர். 40க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். தீ விபத்து ஏற்பட்ட காட்சிகள் அங்கிருந்த சிசிடிவி கேமராக்களில் பதிவாகி உள்ளன. அதில், பலரது ஆடைகள் தீப்பிடித்த நிலையில் அலறியடித்துக் கொண்டு ஓடும் காட்சிகள் இடம் பெற்றுள்ளன. தீயணைப்பு துறையினர் இரண்டு மணி நேர போராட்டத்துக்கு பின்னர் தீயை அணைத்தனர்.

மூலக்கதை