'பாலிவுட்' நடிகைக்கு எதிரான வழக்கு: ம.பி., அரசை இணைத்து கோர்ட் உத்தரவு

தினமலர்  தினமலர்
பாலிவுட் நடிகைக்கு எதிரான வழக்கு: ம.பி., அரசை இணைத்து கோர்ட் உத்தரவு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

ஜபல்பூர்-'பாலிவுட்' நடிகை கரீனா கபூர் கானுக்கு எதிரான வழக்கில், மத்திய பிரதேச அரசையும் இணைக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.பாலிவுட் நடிகை கரீனா கபூர் கான், 41, குழந்தை பெற்ற பின், தன் கர்ப்ப கால அனுபவங்களை புத்தகமாக எழுதினார்.





மேல்முறையீடு

அந்த புத்தகத்துக்கு, 'கரீனா கபூர் கான்ஸ் ப்ரெக்னன்சி பைபிள்' என பெயரிட்டார். இவரது கர்ப்பத்தை கிறிஸ்துவர்களின் புனித நுாலான பைபிளுடன் ஒப்பிடுவது, மத உணர்வை புண்படுத்துவதாக குற்றச்சாட்டு எழுந்தது. நடிகை கரீனா கபூர் மீது வழக்கு பதிவு செய்யுமாறு, ம.பி.,யின் ஜபல்பூர் காவல் நிலையத்தில் வழக்கறிஞர் ஆன்டனி என்பவர் புகார் அளித்தார்.

போலீசார் நடவடிக்கை எடுக்காததை அடுத்து, ஜபல்பூர் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். புத்தகத்தின் தலைப்பு மத உணர்வை எவ்வாறு புண்படுத்துகிறது என்பதை மனுதாரர் தெளிவுபடுத்த தவறியதை அடுத்து, மனு தள்ளுபடி செய்யப்பட்டது.இதையடுத்து, செஷன்ஸ் கோர்ட்டை நாடினார். அங்கு மனு நிராகரிக்கப்பட்டது. எனவே, ம.பி., உயர் நீதிமன்றத்தில் ஆன்டனி மேல்முறையீடு செய்தார். இந்த வழக்கில் புத்தகத்தின் இணை ஆசிரியர் ஷா பிம்ஜ்யானி, 'ஜக்கர்னாட் புக்ஸ், அமேசான் ஆன்லைன் ஷாப்பிங்' நிறுவனங்கள் பிரதிவாதியாக சேர்க்கப்பட்டுஉள்ளனர்.

ஜபல்பூர்-'பாலிவுட்' நடிகை கரீனா கபூர் கானுக்கு எதிரான வழக்கில், மத்திய பிரதேச அரசையும் இணைக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.பாலிவுட் நடிகை கரீனா கபூர் கான், 41, குழந்தை பெற்ற பின், தன்

சமரசத்துக்கு இடமளிக்காமல்... அதிகாரத்துக்கு அடிபணியாமல்... நேர்மையான முறையில் துணிச்சலான செய்திகளை மக்களிடம் கொண்டு சேர்க்கும் இணையத்தள செய்தி ஊடகங்களுக்கு, விளம்பர வருவாயே உயிர்நாடி. அதுவே, நீங்கள் விரும்பி வா(நே)சிக்கும் தினமலர், இணையதளத்துக்கும்...

ஆகவே அன்பிற்கினிய வாசகர்களே,‘ஆட்பிளாக்கர்’ உபயோகிப்பதை தவிர்த்து, துணிச்சலான ஊடகத்தின் நேர்மைக்கு தோள் கொடுங்கள். உங்கள் பார்வைக்கு இடையூறாக வரக்கூடிய விளம்பரத்தை மட்டும், ’ஸ்கிரீன் ஷாட்’ எடுத்து எங்களுக்கு அனுப்புங்கள். உங்களின் சிரமத்துக்கு தீர்வு காணுகிறோம்.

நன்றி. தினமலர்

இங்கு வெளியாகும் விளம்பரங்கள், வாசகர்களுக்கு பயனளிக்கும் என்பதாலேயே சேர்க்கப்படுகின்றன. Ad blocker போடுவதன் மூலம், பயனுள்ள பல தகவல்களை நீங்கள் தவறவிடவும் வாய்ப்புண்டு. Ad blocker ஐ தவிருங்கள்.

You’ll usually find this icon in the upper right-hand corner of your screen. You may have more than one ad blocker installed.

You may have to select a menu option or click a button.

மூலக்கதை