மாவீரன் படப்பிடிப்பு தொடங்கியது

தினமலர்  தினமலர்
மாவீரன் படப்பிடிப்பு தொடங்கியது

சிவகார்த்திகேயன் நடிக்கும் மாவீரன் படத்தை மண்டேலா படத்தை இயக்கிய மடோன் அஷ்வின் இயக்குகிறார். சாந்தி டாக்கீஸ் சார்பில் அருண் விஸ்வா தயாரிக்கிறார். பரத் சங்கர் இசை அமைக்கிறார். விது அய்யனா ஒளிப்பதிவு செய்கிறார். சிவகார்த்திகேயன் ஜோடியாக அதிதி சங்கர் நடிக்கிறார். இவர்கள் தவிர மிஷ்கின், சரிதா, யோகி பாபு ஆகியோரும் நடிக்கிறார்கள்.

இந்த நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கியது. இயக்குனர் ஷங்கர் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு படப்பிடிப்பை துவக்கி வைத்து மகள் அதிதி மற்றும் படக்குழுவினரை வாழ்த்தினார்.

படப்பிடிப்புகள் 3 கட்டமாக நடக்கிறது. அடுத்த ஆண்டு பொங்கல் பண்டிகையில் படத்தை வெளியிட திட்டமிட்டிருக்கிறார்கள். அதற்கு முன்னதாக சிவகார்த்திகேயன் நடித்துள்ள அயலான், பிரின்ஸ் படங்கள் திரைக்கு வரும் என்று தெரிகிறது. இதற்கு இடையில் கமல் தயாரிப்பில் சிவகார்த்திகேயன் நடிக்கும் படங்களின் பணியும் தொடங்க இருக்கிறது.

மூலக்கதை