செஸ் ஒலிம்பியாட் வீரர்களுக்கான கால்பந்து: ஆப்ரோ - அமெரிக்கா வெற்றி

தினகரன்  தினகரன்
செஸ் ஒலிம்பியாட் வீரர்களுக்கான கால்பந்து: ஆப்ரோ  அமெரிக்கா வெற்றி

சென்னை: செஸ் ஒலிம்பியாட் போட்டியில் பங்கேற்றுள்ள வீரர், வீராங்கனைகளுக்கான நட்பு கால்பந்துப் போட்டியில் ஆப்ரோ-அமெரிக்க அணி சாம்பியன் பட்டம் வென்றது. சென்னையில் நடந்து வரும் 44வது செஸ் ஒலம்பியாட் போட்டியில் இதுவரை 6 சுற்றுகள் முடிந்துள்ள நிலையில் நேற்று ஓய்வு நாள். அந்த ஓய்வு நாளை சிறப்பாக கழிக்க செஸ் வீரர்கள், வீராங்கனைகள்  மாமல்லபுரம், காஞ்சிபுரம், சென்னை என அருகில் உள்ள சுற்றுலாத் தலங்களை பார்க்க சென்று விட்டனர். எஞ்சியவர்களுக்கு இடையே  நட்புரீதியிலான கால்பந்து போட்டி சென்னை நேரு விளையாட்டு அரங்கில் நேற்று நடந்தது. ஐரோப்பிய வீரர்கள், வீராங்கனைகள் ஒரு அணியாகவும், ஆப்ரிக்கா-அமெரிக்காவைச் சேர்ந்தவர்கள் ஒரு அணியாகவும்,  சர்வதேச சதுரங்க கூட்டமைப்பு நிர்வாகிகள் ஒரு அணியாகவும், இந்திய சதுரங்க கூட்டமைப்பு நிர்வாகிகள் ஒரு அணி என மொத்தம் 4 அணிகள் களமிறங்கின. ஒவ்வொரு ஆட்டத்துக்கும் தலா 13 நிமிடங்கள் கொண்ட 2 பகுதிகள் மற்றும்  இடைவேளை 5 நிமிடம் என நிர்ணயிக்கப்பட்டது. ஆடுகளத்தின் அளவும் நான்கில் ஒரு பகுதியாக குறைக்கப்பட்டு இருந்தது. ஒவ்வொரு அணியிலும் 10 பேர் விளையாடினர். ரவுண்டு ராபின் முறையில் நடந்த போட்டியில் அதிக வெற்றிகளை பெறும் அணிக்கு  சாம்பியன் பட்டத்துடன் கோப்பையும் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. போட்டியை தமிழ் நாடு விளையாட்டுத் துறை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் தொடங்கி வைத்தார். சர்வதேச சதுரங்க கூட்டமைப்பு அணி, ஐரோப்பியா அணிகளுக்கு இடையே நடந்த ஆட்டம் 1-1 என்ற கோல் கணக்கில் டிராவில் முடிந்தது.  சதுரங்க கூட்டமைப்பு அணியில் கூட்டமைப்பு தலைவர் அர்காடி துவரகோவிச், விஸ்வநாதன் ஆனந்த் ஆகியோர் விளையாடினர். ஐரோப்பிய அணியில் நார்வேயை சேர்ந்த இரட்டைச் சகோதரிகளான 10ம் வகுப்பு மாணவிகள் மச்சலிக் மோனிகா, மச்சலிக் எடிட், ஆப்ரோ அமெரிக்கா அணியில் ஹோண்டுராஸ் வீராங்கனை மெஜியா கமிலா ஆகியோர் விளையாடினர். அரங்கில் கூடி இருந்த உள்ளூர் ரசிகர்களும், வெளிநாட்டு வீரர், வீராங்கனைகளும் தங்களுக்கு பிடித்த அணிகளை உற்சாகப்படுத்தி ஆரவாரம் செய்தனர். ஆப்ரோ அமெரிக்க அணி தான் விளையாடி 3 ஆட்டங்களில் 2 வெற்றி, ஒரு டிராவுடன் முதலிடம் பிடித்து சாம்பியன் ஆனது. ஒரு வெற்றி, 2 டிரா செய்த  சர்வதேச  சதுரங்க கூட்டமைப்பு 2வது இடத்தையும், ஐரோப்பா, இந்திய சதுரங்க கூட்டமைப்பு அணிகள் தலா ஒரு வெற்றி, தோல்வி, டிராவுடன்  முறையே 3வது, 4வது இடங்களை பிடித்தன. வெற்றி பெற்ற அணிகளுக்கு அமைச்சர் மெய்யநாதன் கோப்பைகளை வழங்கி கவுரவித்தார். தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய உறுப்பினர் செயலர் டாக்டர் கே.பி. கார்த்திகேயன் உடனிருந்தார்.* வீரர்கள் வேதனை...மாமல்லபுரம் புராதன சின்னங்களை சுற்றிப் பார்க்க, தொல்லியல் துறை நிர்வாகத்தால் உள்நாட்டவருக்கு ரூ.40, வெளிநாட்டினருக்கு ரூ.600 கட்டணமாக வசூலிக்கப்பட்டு வருகிறது. செஸ் ஒலிம்பியாடில் ஓய்வு நாளான நேற்று காலை முதலே வீரர், வீராங்கனைகள் மாமல்லபுரம் வந்தனர். அனைவரும் தலா ரூ.600 கவுண்டரில் செலுத்தி நுழைவுச்சீட்டு பெற்று புராதன சின்னங்களை கண்டு ரசித்தனர். இதுகுறித்து, வெளிநாட்டு வீரர் ஒருவர் கூறுகையில், ‘சர்வதேச செஸ் போட்டியில் பங்கேற்க வந்த எங்களை தமிழக அரசு, மிகுந்த மரியாதை கொடுத்து, தம்பி சின்னத்துடன் வரவேற்றது. ஆனால், இங்கு ரூ.600 செலுத்தி நுழைவுச்சீட்டு வாங்கினால் மட்டுமே உள்ளே செல்ல அனுமதிக்கப்படும் என இந்திய தொல்லியல் துறையினர் நெருக்கடி கொடுத்தனர். வேறு வழியின்றி, கட்டணம் செலுத்தி சுற்றிப் பார்த்தோம். எங்களை ஒன்றிய அரசு மரியாதைக் குறைவாக நடத்தியது வேதனை அளிக்கிறது. மீண்டும், தமிழகத்திற்கு வருவோமா இல்லையா தெரியாது. ஒரு நாள் இலவசமாக அனுமதித்தால் ஒன்றிய அரசுக்கு நஷ்டம் ஏற்பட்டு விடுமா’ என வேதனை தெரிவித்தார். எங்களை, சிரித்த முகத்துடன் வரவேற்று உபரித்த பெருமை தமிழக அரசையும், தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலினை மட்டுமே சாரும். தமிழக அரசிடம், இருந்து ஒன்றிய அரசு நிறைய கற்றுக் கொள்ள வேண்டும் என்றனர்.செஸ் ஒலிம்பியாட் மகளிர் பிரிவு தரவரிசைரேங்க்    அணி    சுற்று    புள்ளி1    இந்தியா ஏ    6    122    அஜர்பைஜான்    6    113    ருமேனியா    6    114    போலாந்து    6    105    உக்ரைன்    6    106    ஆர்மினியா    6    107    பல்கேரியா    6    108    இஸ்ரவேல்    6    109    ஜார்ஜியா    6    1010    வியட்நாம்    6    1015    இந்தியா-பி    6    919    இந்தியா-சி    6    9பொதுப் பிரிவு தரவரிசைரேங்    அணி    சுற்று    புள்ளி1    ஆர்மினியா    6    122    அமெரிக்கா    6    113    இந்தியா-பி    6    104    உஸ்பெகிஸ்தான்    6    105    பிரான்ஸ்    6    106    இந்தியா-ஏ    6    107    நெதர்லாந்து    6    108    கியூபா    6    109    இந்தியா-சி    6    1010    ஜெர்மனி    6    10

மூலக்கதை