மகளிர் ஹாக்கி அரையிறுதியில் இந்தியா

தினகரன்  தினகரன்
மகளிர் ஹாக்கி அரையிறுதியில் இந்தியா

காமன்வெல்த் மகளிர் ஹாக்கி அரையிறுதியில் விளையாட இந்திய அணி தகுதி பெற்றது. ஏ பிரிவில் இடம் பெற்றிருந்த இந்தியா, கடைசி லீக் ஆட்டத்தில் வெற்றி கட்டாயம் என்ற நெருக்கடியுடன் நேற்று கனடாவை எதிர்கொண்டது.தொடக்கத்தில் இருந்தே துடிப்புடன் விளையாடி கனடா கோல் பகுதியை முற்றுகையிட்ட இந்திய அணிக்கு 3வது நிமிடத்தில் சலிமா டெடே, 22வது நிமிடத்தில் நவ்னீத் கவுர் அபாரமாக கோல் அடித்து 2-0 என முன்னிலை கொடுத்தனர். இதைத் தொடர்ந்து பதில் தாக்குதலை தீவிரப்படுத்திய கனடா அணிக்கு ஸ்டேர்ஸ் 23வது நிமிடத்திலும், ஹன்னா 39வது நிமிடத்திலும் கோல் போட்டு 2-2 என சமநிலை ஏற்படுத்தினர்.பரபரப்பான கடைசி கட்டத்தில் கிடைத்த பெனால்டி கார்னர் வாய்ப்பில் (51வது நிமிடம்) லால்ரேம்சியாமி கோல் அடிக்க, இந்தியா 3-2 என்ற கோல் கணக்கில் வென்று அரையிறுதிக்கு முன்னேறியது. ஆண்கள் அணி அசத்தல்: பி பிரிவு லீக் ஆட்டத்தில் கனடா அணியுடன் நேற்று மோதிய இந்திய ஆண்கள் அணி 8-0 என்ற கோல் கணக்கில் அபாரமாக வென்று அரையிறுதி வாய்ப்பை தக்கவைத்தது. இந்திய வீரர்கள் ஹர்மன்பிரீத், ஆகாஷ்தீப் தலா 2, அமித் ரோகிதாஸ், லலித் உபாத்யாய், குர்ஜந்த் சிங், மன்தீப் சிங் தலா 1 கோல் போட்டனர். இந்தியா தனது கடைசி லீக் ஆட்டத்தில் இன்று வேல்ஸ் அணியுடன் மோதுகிறது.

மூலக்கதை