தெலுங்கு சினிமாவில் நடிக்கும் மிஸ் கனடா

CANADA MIRROR  CANADA MIRROR
தெலுங்கு சினிமாவில் நடிக்கும் மிஸ் கனடா

மிஸ் கனடாவாக தேர்ந்தெடுக்கப்பட்ட கனடாவின் அல்பெர்ட்டா மாகாணத்தை சேர்ந்த Priya Banerjee என்பவர் தெலுங்கு சினிமா ஒன்றில் நடிப்பதற்காக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.  மேற்கு வங்க மாநிலத்தின் வம்சாவழியில் பிறந்த Priya Banerjee சிறுவயது முதலே கனடாவில் வளர்ந்து வந்தார். கனடாவின் Calgary பல்கலைக்கழகத்தில் சர்வதேச மார்க்கெட்டிங் துறையில் பட்டப்படிப்பு படித்த இவர்,  மாடலிங் துறையில் ஈடுபட சமீபத்தில் இந்தியா வந்தார்.

பாலிவுட்டின் அனுபவம் மிக்க அனுபம்கேர் உதவியால், நடிப்புப் பயிற்சியில் ஈடுபட்ட பிரியா பானர்ஜிக்கு, தெலுங்கு சினிமா வாய்ப்பு ஒன்று வந்துள்ளது. Saikiran Adivi என்ற தெலுங்கு படத்தயாரிப்பாளர் தயாரிக்கும் கிஸ் என்ற படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியிருக்கும், பிரியா தனது முதல்படமே தனது நடிப்புக்கு சவால்விடும்படியான கேரக்டர் கிடைத்துள்ளதாக கூறியுள்ளார்.

இப்படத்தை ட்ரீம் சினிமா பிரைவைட் லிமிடெட் நிறுவனம் தயாரிக்கின்றது. ஷானியெல் தியோ ஒளிப்பதிவு செய்ய, அடிவி ஷே என்பவர் முக்கிய வேடத்தில் இப்படைத்தையும் இயக்குகிறார்.

3,551 total views, 19 views today

மூலக்கதை