இந்திய பெண்கள் வெற்றி: முதல் ஒருநாள் போட்டியில் | ஜூலை 01, 2022

தினமலர்  தினமலர்
இந்திய பெண்கள் வெற்றி: முதல் ஒருநாள் போட்டியில் | ஜூலை 01, 2022

பல்லேகெலே: இலங்கைக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் அசத்திய இந்திய பெண்கள் அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இலங்கை சென்றுள்ள இந்திய பெண்கள் அணி, மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்கிறது. முதல் போட்டி பல்லேகெலேயில் நடந்தது.

‘டாஸ்’ வென்று முதலில் ‘பேட்’ செய்த இலங்கை பெண்கள் அணிக்கு கேப்டன் சமாரி (2), ஹன்சிமா (0), கவிஷா (0) ஏமாற்றினர். ஹாசினி (37), ஹர்ஷிதா (28), அனுஷ்கா சஞ்ஜீவனி (18), நிலாக்சி (43) ஓரளவு கைகொடுத்தனர். இலங்கை அணி 48.2 ஓவரில் 171 ரன்னுக்கு ‘ஆல்–அவுட்’ ஆனது. இந்தியா சார்பில் தீப்தி சர்மா, ரேனுகா சிங் தலா 3, பூஜா 2 விக்கெட் கைப்பற்றினர்.

 

எட்டக்கூடிய இலக்கை விரட்டிய இந்திய பெண்கள் அணிக்கு ஸ்மிருதி மந்தனா (4), யஸ்திகா பாட்யா (1) ஏமாற்றினர். ஷபாலி வர்மா (35), கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் (44), ஹர்லீன் தியோல் (34) கைகொடுத்தனர். தீப்தி சர்மா (22*), பூஜா (21*) ஜோடி அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றது. இந்திய அணி 38 ஓவரில் 6 விக்கெட்டுக்கு 176 ரன் எடுத்து வெற்றி பெற்றது.

 

3000 ரன்

இந்திய கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர், தனது 18வது ரன்னை எட்டிய போது, ஒருநாள் போட்டி அரங்கில் 3000 ரன் என்ற மைல்கல்லை அடைந்தார். இதுவரை 119 போட்டியில், 4 சதம், 15 அரைசதம் உட்பட 3026 ரன் எடுத்துள்ளார். இதன்மூலம் ஒருநாள் போட்டி வரலாற்றில் 3000 ரன்னை கடந்த 2வது இந்திய வீராங்கனையானார். ஏற்கனவே மிதாலி ராஜ் 7805 ரன் (232 போட்டி, 7 சதம், 64 அரைசதம்) குவித்துள்ளார்.

மூலக்கதை