கவுன்டி அணியில் குர்னால் | ஜூலை 01, 2022

தினமலர்  தினமலர்
கவுன்டி அணியில் குர்னால் | ஜூலை 01, 2022

பர்மிங்காம்: இந்தியாவின் குர்னால் பாண்ட்யா, இங்கிலாந்தின் கவுன்டி அணிக்காக முதன்முறையாக விளையாட உள்ளார்.

இங்கிலாந்தில், கவுன்டி அணிகள் பங்கேற்கும் ராயல் லண்டன் கோப்பை ஒருநாள் போட்டி சாம்பியன்ஷிப் தொடர் வரும் ஆக. 2–23ல் நடக்கிறது. இதில் இடம் பெற்றுள்ள வார்விக் ஷயர் அணியில் இந்திய ‘ஆல்–ரவுண்டர்’ குர்னால் பாண்ட்யா 31, ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். இதுவரை 5 ஒருநாள் (130 ரன், 2 விக்கெட்), 19 சர்வதேச ‘டி–20’ (124 ரன், 15 விக்கெட்) என, 76 ‘லிஸ்ட் ஏ’ (2231 ரன், 89 விக்கெட்) போட்டிகளில் விளையாடி உள்ளார். கடந்த ஆண்டு இங்கிலாந்துக்கு எதிரான போட்டியில் 26 பந்தில் அரைசதம் அடித்த இவர், அறிமுக ஒருநாள் போட்டியில் அதிவேக அரைசதமடித்த வீரரானார். இவருக்கு, இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள், ‘டி–20’ தொடரில் பங்கேற்கும் இந்திய அணியில் இடம் கிடைக்கவில்லை. இதன்மூலம் இத்தொடரில் பங்கேற்கவுள்ள 3வது இந்திய வீரரானார் குர்னால். ஏற்கனவே வாஷிங்டன் சுந்தர் (லங்காஷயர்), புஜாரா (சசக்ஸ்) ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளனர்.

மூலக்கதை