மெல்ல மெல்ல குறையும் கொரோனா; உலக அளவில் பாதிப்பு எண்ணிக்கை 55.35 கோடியை தாண்டியது.! 63.59 லட்சம் பேர் உயிரிழப்பு

தினகரன்  தினகரன்
மெல்ல மெல்ல குறையும் கொரோனா; உலக அளவில் பாதிப்பு எண்ணிக்கை 55.35 கோடியை தாண்டியது.! 63.59 லட்சம் பேர் உயிரிழப்பு

சென்னை: உலகம் முழுவதும் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 52.83 கோடியாக அதிகரித்துள்ளது. ஜெனிவா, சீனாவின் வுகான் நகரில் கடந்த 2019-ம் ஆண்டு கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸ் தற்போது உலக நாடுகளில் பரவி கடுமையான பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. கொரோனாவை கட்டுப்படுத்தும் வகையில் தடுப்பூசி செலுத்தும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையிலும் கொரோனா வைரஸ் உருமாற்றமடைந்து தொடர்ந்து பாதிப்பு ஏற்படுத்தி வருகிறது. இந்நிலையில் உலகம் முழுவதும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 55.35 கோடியை தாண்டியுள்ளது. இதன்படி இதுவரை கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 55,35,66,290 ஆக அதிகரித்துள்ளது. கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை 52,83,44,169 பேர் குணமடைந்துள்ளனர். கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களில் 1,88,62,172 பேர் தற்போது சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் கொரோனா பாதிப்பு காரணமாக இதுவரை உலகம் முழுவதும் 63,59,949 பேர் உயிரிழந்துள்ளனர்.

மூலக்கதை