அம்மம்மா... முடியலைம்மா

தினமலர்  தினமலர்
அம்மம்மா... முடியலைம்மா


மதுரை : மதுரை புது நத்தம் ரோடு ஆத்திக்குளம் சந்திப்பில் உணவகம் முன்பு மெயின் ரோட்டை ஆக்கிரமித்து டூவீலர்களை நிறுத்தி போக்குவரத்துக்கு பெரும் இடையூறு செய்கின்றனர்.



ஆத்திக்குளம் சந்திப்பில் நடிகரின் உணவகம் உட்பட பல கடைகளுக்கும் வருவோர் ரோட்டை ஆக்கிரமித்து டூவீலர்களை நிறுத்துகின்றனர்.

பறக்கும் பாலம் கட்டியதால் சென்டர் மீடியன் அமைந்ததும் ரோடு குறுகிவிட்டது. இதனால் அந்த ரோட்டில் எப்போதும் போக்குவரத்து நெரிசல் உள்ளது. ஏற்கனவே மதுரையில் அம்மா உணவகங்கள் இருட்டடிப்பு செய்யப்படுகின்றன. இது அரசு மருத்துவமனையில் கடந்த வாரம் நடிகரின் புதிய உணவகம் துவங்கியது மூலமும் தொடர்கிறது.

சேவை கட்டணத்தில் உணவு தருகிறோம், அதை செய்கிறோம், இதை செய்கிறோம் என திறப்பு விழாவிற்கு வந்த அமைச்சரும், நடிகரும் பேசினர். சமூகத்தின் மீது இத்தனை அக்கறை கொண்டுள்ள நடிகர், தன் உணவகம் வரும் வாகனங்கள் போக்குவரத்துக்கு இடையூறு செய்வது குறித்து கவலைப்பட்டதாக தெரியவில்லை.

ஆத்திக்குளம் தவிர தெப்பக்குளம், ஊமச்சிக்குளம் போன்ற இடங்களிலும் இவரது உணவகம் உட்பட பல கடைகளின் முன்பு வாகனங்கள் ரோட்டை ஆக்கிரமித்துள்ளன. நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் கொஞ்சம் கவனித்து நடவடிக்கை எடுப்பது நல்லது.

மதுரை : மதுரை புது நத்தம் ரோடு ஆத்திக்குளம் சந்திப்பில் உணவகம் முன்பு மெயின் ரோட்டை ஆக்கிரமித்து டூவீலர்களை நிறுத்தி போக்குவரத்துக்கு பெரும் இடையூறு செய்கின்றனர்.ஆத்திக்குளம்

சமரசத்துக்கு இடமளிக்காமல்... அதிகாரத்துக்கு அடிபணியாமல்... நேர்மையான முறையில் துணிச்சலான செய்திகளை மக்களிடம் கொண்டு சேர்க்கும் இணையத்தள செய்தி ஊடகங்களுக்கு, விளம்பர வருவாயே உயிர்நாடி. அதுவே, நீங்கள் விரும்பி வா(நே)சிக்கும் தினமலர், இணையதளத்துக்கும்...

ஆகவே அன்பிற்கினிய வாசகர்களே,‘ஆட்பிளாக்கர்’ உபயோகிப்பதை தவிர்த்து, துணிச்சலான ஊடகத்தின் நேர்மைக்கு தோள் கொடுங்கள். உங்கள் பார்வைக்கு இடையூறாக வரக்கூடிய விளம்பரத்தை மட்டும், ’ஸ்கிரீன் ஷாட்’ எடுத்து எங்களுக்கு அனுப்புங்கள். உங்களின் சிரமத்துக்கு தீர்வு காணுகிறோம்.

நன்றி. தினமலர்

இங்கு வெளியாகும் விளம்பரங்கள், வாசகர்களுக்கு பயனளிக்கும் என்பதாலேயே சேர்க்கப்படுகின்றன. Ad blocker போடுவதன் மூலம், பயனுள்ள பல தகவல்களை நீங்கள் தவறவிடவும் வாய்ப்புண்டு. Ad blocker ஐ தவிருங்கள்.

You’ll usually find this icon in the upper right-hand corner of your screen. You may have more than one ad blocker installed.

You may have to select a menu option or click a button.

மூலக்கதை