இந்தியாவுடன் டி20 தொடர்; விலகினார் ஸ்டோக்ஸ்

தினகரன்  தினகரன்
இந்தியாவுடன் டி20 தொடர்; விலகினார் ஸ்டோக்ஸ்

லண்டன்: இந்திய அணியுடன் நடக்க உள்ள டி20 தொடரில் இருந்து இங்கிலாந்து டெஸ்ட் அணி கேப்டன் பென் ஸ்டோக்ஸ் விலகி உள்ளார். இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி தற்போது டெஸ்ட் போட்டியில் விளையாடி வருகிறது. அடுத்து 3 டி20 மற்றும் 3 ஒருநாள் போட்டிகளில் விளையாட உள்ளது. ஜூலை 7ம் தேதி முதல் டி20 போட்டி நடக்க உள்ள நிலையில், டி20 தொடரில் இருந்து ஆல் ரவுண்டரும் டெஸ்ட் அணி கேப்டனுமான ஸ்டோக்ஸ் விலகியுள்ளார். அவர் ஒருநாள் போட்டித் தொடரில் களமிறகுவார் என்று இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது. நிர்ணயிக்கப்பட்ட ஓவர்கள் போட்டிக்கான கேப்டன் இயான் மோர்கன் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றுவிட்டதால், அவருக்கு பதிலாக ஜானி பேர்ஸ்டோ புதிய கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். இங்கிலாந்து டி20 அணி: ஜாஸ் பட்லர் (கேப்டன்), மொயீன் அலி, ஹாரி புரூக், சாம் கரன், ரிச்சர்ட் கிலீசன், கிறிஸ் ஜார்டன், லயம் லிவிங்ஸ்டன், டேவிட் மலான், தைமல் மில்ஸ், மேத்யூ பார்கின்சன், ஜேசன் ராய், பில் சால்ட், ரீஸ் டாப்லி, டேவிட் வில்லி. இங்கிலாந்து ஒருநாள் அணி: ஜாஸ் பட்லர் (கேப்டன்), மொயீன் அலி, ஜொனாதன் பேர்ஸ்டோ, ஹாரி புரூக், பிரைடன் கார்ஸ், சாம் கரன், லயம் லிவிங்ஸ்டன், கிரெய்க் ஓவர்ட்டன், மேத்யூ பார்கின்சன், ஜோ ரூட், ஜேசன் ராய், பில் சால்ட், பென் ஸ்டோக்ஸ், ரீஸ் டாப்லி, டேவிட் வில்லி.

மூலக்கதை