10 விக்கெட் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா அபார வெற்றி

தினகரன்  தினகரன்
10 விக்கெட் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா அபார வெற்றி

காலே: இலங்கை அணியுடனான முதல் டெஸ்டில், ஆஸ்திரேலியா 10 விக்கெட் வித்தியாசத்தில் அபாரமாக வென்றது. இப்போட்டி 3வது நாளிலேயே முடிவுக்கு வந்தது. காலே சர்வதேச ஸ்டேடியத்தில் நடந்த இப்போட்டியில், டாஸ் வென்று பேட் செய்த இலங்கை முதல் இன்னிங்சில் 212 ரன்னுக்கு சுருண்டது. ஆஸ்திரேலியா முதல் இன்னிங்சில் 321 ரன் குவித்து ஆல் அவுட்டானது. கவாஜா 71, கிரீன் 77, அலெக்ஸ் கேரி 45 ரன் எடுத்தனர். 109 ரன் பின்தங்கிய நிலையில் 2வது இன்னிங்சை விளையாடிய இலங்கை அணி, 22.5 ஓவரில் 113 ரன்னுக்கு ஆட்டமிழந்தது.ஆஸி. பந்துவீச்சில் நாதன் லயன், டிராவிஸ் ஹெட் தலா 4, ஸ்வெப்சன் 2 விக்கெட் வீழ்த்தினர். அடுத்து 5 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய ஆஸி. 0.4 ஓவரில் விக்கெட் இழப்பின்றி 10 ரன் எடுத்து அபாரமாக வென்றது. வார்னர் 10* ரன் (4 பந்து, 1 பவுண்டரி, 1 சிக்சர்), கவாஜா (0) ஆட்டமிழக்காமல் இருந்தனர். கேமரான் கிரீன் ஆட்ட நாயகன் விருது பெற்றார். ஆஸி. 1-0 என முன்னிலை வகிக்க, 2வது மற்றும் கடைசி டெஸ்ட் இதே மைதானத்தில் ஜூலை 8ம் தேதி தொடங்குகிறது.

மூலக்கதை