பன்ட் - ஜடேஜா அபார ஆட்டம்

தினகரன்  தினகரன்
பன்ட்  ஜடேஜா அபார ஆட்டம்

பர்மிங்காம்: இங்கிலாந்து அணியுடனான 5வது டெஸ்டில், ரிஷப் பன்ட் - ஜடேஜா ஜோடியின் அபார ஆட்டத்தால் இந்தியா சரிவில் இருந்து மீண்டது. எட்ஜ்பாஸ்டன் மைதானத்தில் நேற்று தொடங்கிய இப்போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து முதலில் பந்துவீசியது. கில் 17, புஜாரா 13, விஹாரி 20, கோஹ்லி 11, ஷ்ரேயாஸ் 15 ரன் எடுத்து ஆண்டர்சன் - மேத்யூ பாட்ஸ் வேகக் கூட்டணி தாக்குதலில் விக்கெட்டை பறிகொடுக்க, இந்தியா 27.5 ஓவரில் 98 ரன்னுக்கு 5 விக்கெட் இழந்து திணறியது. இந்த நிலையில், பன்ட் - ஜடேஜா இணைந்து பொறுப்புடன் விளையாடி அணியை மீட்டனர். தேநீர் இடைவேளையின்போது இந்தியா 44 ஓவரில் 5 விக்கெட் இழப்புக்கு 174 ரன் எடுத்திருந்தது. பன்ட் 53, ஜடேஜா 32 ரன்னுடன் களத்தில் இருந்தனர்.

மூலக்கதை