அருவருப்பான தலைவர்கள்:புடின் பதிலடி

தினமலர்  தினமலர்

மாஸ்கோ:''மேற்கத்திய நாடுகளின் தலைவர்கள் அளவுக்கதிகமாக குடிப்பதால், அரை நிர்வாணமாக நின்றாலும் அருவருப்பாகவே தோன்றுவர்,'' என, ரஷ்ய அதிபர் புடின் தெரிவித்து உள்ளார்.
கராத்தே வீரரான ரஷ்ய அதிபர் புடின், வெற்றுடம்புடன் அவ்வப்போது செய்யும் சாகசங்கள், ஊடகங்களில் வெளியாவது வழக்கம். இதை சில தினங்களுக்கு முன் ஜெர்மனியில் நடந்த 'ஜி-7' மாநாட்டில் மேற்கத்திய நாடுகளின் தலைவர்கள் கிண்டல் செய்தனர்.
இது பற்றி பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் கூறுகையில், 'நாங்களும் உடைகளை கழற்றினால் புடினை விட வலிமையானவர்கள் என்பது தெரியும்' என்றார். கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ பேசுகையில், 'மேற்கத்திய நாடுகளின் தலைவர்களும் புடின் போல வெற்றுடம்புடன் குதிரை சவாரி செய்யலாம்' என்றார்.
இது குறித்து செய்தியாளர்கள் கேட்டதற்கு புடின் கூறியதாவது:மேற்கத்திய நாடுகளின் தலைவர்கள் கழற்றப் போவது, கால் சட்டையையா அல்லது மேல் சட்டையையா என்பது எனக்கு தெரியாது. எதுவாக இருந்தாலும் அந்த தோற்றத்தில் அவர்களை பார்க்க அருவருப்பாகவே இருக்கும்.

ஏனெனில் அவர்களிடம் மது அருந்துவது உள்ளிட்ட கெட்ட பழக்கங்கள் உள்ளன. என்னைப் போல கட்டான உடற்கட்டுக்கு தினமும் உடற்பயிற்சியும், விளையாட்டுகளில் பங்கேற்பதும் முக்கியம். அது, மேற்கத்திய தலைவர்களிடம் இல்லையே என்பது தான் என் கவலை.இவ்வாறு அவர் கூறினார்.


மாஸ்கோ:''மேற்கத்திய நாடுகளின் தலைவர்கள் அளவுக்கதிகமாக குடிப்பதால், அரை நிர்வாணமாக நின்றாலும் அருவருப்பாகவே தோன்றுவர்,'' என, ரஷ்ய அதிபர் புடின் தெரிவித்து உள்ளார்.கராத்தே வீரரான

சமரசத்துக்கு இடமளிக்காமல்... அதிகாரத்துக்கு அடிபணியாமல்... நேர்மையான முறையில் துணிச்சலான செய்திகளை மக்களிடம் கொண்டு சேர்க்கும் இணையத்தள செய்தி ஊடகங்களுக்கு, விளம்பர வருவாயே உயிர்நாடி. அதுவே, நீங்கள் விரும்பி வா(நே)சிக்கும் தினமலர், இணையதளத்துக்கும்...

ஆகவே அன்பிற்கினிய வாசகர்களே,‘ஆட்பிளாக்கர்’ உபயோகிப்பதை தவிர்த்து, துணிச்சலான ஊடகத்தின் நேர்மைக்கு தோள் கொடுங்கள். உங்கள் பார்வைக்கு இடையூறாக வரக்கூடிய விளம்பரத்தை மட்டும், ’ஸ்கிரீன் ஷாட்’ எடுத்து எங்களுக்கு அனுப்புங்கள். உங்களின் சிரமத்துக்கு தீர்வு காணுகிறோம்.

நன்றி. தினமலர்

இங்கு வெளியாகும் விளம்பரங்கள், வாசகர்களுக்கு பயனளிக்கும் என்பதாலேயே சேர்க்கப்படுகின்றன. Ad blocker போடுவதன் மூலம், பயனுள்ள பல தகவல்களை நீங்கள் தவறவிடவும் வாய்ப்புண்டு. Ad blocker ஐ தவிருங்கள்.

You’ll usually find this icon in the upper right-hand corner of your screen. You may have more than one ad blocker installed.

You may have to select a menu option or click a button.

மூலக்கதை