மத உணர்வுகளை புண்படுத்தியதாக கைதான ஜூபைருக்கு 4 நாள் போலீஸ் காவல்; டெல்லி நீதிமன்றம் உத்தரவு

தினகரன்  தினகரன்
மத உணர்வுகளை புண்படுத்தியதாக கைதான ஜூபைருக்கு 4 நாள் போலீஸ் காவல்; டெல்லி நீதிமன்றம் உத்தரவு

புதுடெல்லி: செய்திகளின் உண்மைத் தன்மையை ஆய்வு செய்யும் ஆல்ட் நியூஸ் இணையதளத்தின் இணை நிறுவனர் முகமது ஜூபைர், கடந்த 2018ம் ஆண்டு டிவிட்டரில் குறிப்பிட மதக் கடவுளை இழிவுபடுத்தும் விதமாக டிவிட் செய்ததாக டெல்லி போலீசில் டிவிட்டர் பயனாளர் ஒருவர் புகார் அளித்தார். டிவிட்டரில் செய்யப்பட்ட இந்த புகாரில், ஜூபைதரின் சர்ச்சைக்குரிய டிவிட்டும் இணைக்கப்பட்டு இருந்தது. இதன் அடிப்படையில், டெல்லி போலீசார் நேற்று முன்தினம் ஜூபைரை கைது செய்தனர்.  காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி உள்ளிட்ட தலைவர்கள் இதற்கு கண்டனம் தெரிவித்தனர். இந்நிலையில், ஜூபைதரின் ஒருநாள் போலீஸ் காவல் முடிந்த நிலையில் அவர் டெல்லி மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் நேற்று ஆஜர்படுத்தப்பட்டார்.  அவரை 7 நாள் காவலில் எடுத்து விசாரிக்க போலீஸ் தரப்பில் வலியுறுத்தப்பட்டது. ஆனால், 4 நாள் மட்டுமே காவலில் வைத்து விசாரிக்க நீதிபதி அனுமதி அளித்தார்.

மூலக்கதை