பழனிசாமி கையில் வேலுடன் 'சூரசம்ஹாரம்!' : சேலத்தில் போஸ்டர்களால் பரபரப்பு

தினமலர்  தினமலர்
பழனிசாமி கையில் வேலுடன் சூரசம்ஹாரம்! : சேலத்தில் போஸ்டர்களால் பரபரப்பு


சேலம் : அ.தி.மு.க.,வில் ஒற்றைத் தலைமை விவகாரம் விஸ்வரூபம் எடுத்துள்ள நிலையில், சேலத்தில், பழனிசாமி கையில் வேலுடன், 'சூரசம்ஹாரம் ஸ்டார்ட்' என்ற வாசகங்களுடன் ஒட்டப்பட்டுள்ள போஸ்டரால், கட்சியினரிடையே பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
அ.தி.மு.க.,வில் எழுந்துள்ள ஒற்றை தலைமை கோஷத்தின் வெளிப்பாடாக, தென் மாவட்டங்களில் பன்னீர்செல்வத்துக்கும், கொங்கு மண்டலத்தில் பழனிசாமிக்கும் ஆதரவாக போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன.




இந்நிலையில், சேலத்தில் மலர் கிரீடம், கழுத்தில் மாலையுடன், பழனிசாமி கையில் வேல் வைத்திருக்கும் படத்துடன், 'சூரசம்ஹாரம் ஸ்டார்ட்' என்ற வாசகங்களுடன் போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன.
இதை மாநகராட்சி அ.தி.மு.க., கொறடா செல்வராஜ், மாவட்ட செயலர் வெங்கடாசலம் ஒட்டியுள்ளனர். அவர்களின் பெயர் போஸ்டரில் உள்ளது.

நேற்று முன்தினம் ஒட்டப்பட்ட போஸ்டரை, சில இடங்களில் இரவோடு இரவாக சிலர் கிழித்துள்ளனர்.இது குறித்து, அ.தி.மு.க.,வினர் கூறியதாவது:ஜெ., மறைவுக்கு பின், முதல்வர் பொறுப்பை ஏற்ற பழனிசாமி, முதல் கட்ட போரில் பன்னீர்செல்வத்தை வென்றார். இரண்டாவது கட்டமாக கட்சியை பன்னீர்செல்வத்திடம் இருந்து முழுமையாக மீட்க 'சூரசம்ஹாரத்தை' கையில் எடுத்துள்ளார்.
அதை குறிப்பிடும் வகையில் தான் போஸ்டர் ஒட்டி உள்ளோம். ஒற்றை தலைமை விவகாரத்தில் வெற்றி பெற்று, விரைவில் பொதுச்செயலர் பதவியில் பழனிசாமி அமர்த்தப்படுவார்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.

சேலம் : அ.தி.மு.க.,வில் ஒற்றைத் தலைமை விவகாரம் விஸ்வரூபம் எடுத்துள்ள நிலையில், சேலத்தில், பழனிசாமி கையில் வேலுடன், 'சூரசம்ஹாரம் ஸ்டார்ட்' என்ற வாசகங்களுடன் ஒட்டப்பட்டுள்ள போஸ்டரால்,

சமரசத்துக்கு இடமளிக்காமல்... அதிகாரத்துக்கு அடிபணியாமல்... நேர்மையான முறையில் துணிச்சலான செய்திகளை மக்களிடம் கொண்டு சேர்க்கும் இணையத்தள செய்தி ஊடகங்களுக்கு, விளம்பர வருவாயே உயிர்நாடி. அதுவே, நீங்கள் விரும்பி வா(நே)சிக்கும் தினமலர், இணையதளத்துக்கும்...

ஆகவே அன்பிற்கினிய வாசகர்களே,‘ஆட்பிளாக்கர்’ உபயோகிப்பதை தவிர்த்து, துணிச்சலான ஊடகத்தின் நேர்மைக்கு தோள் கொடுங்கள். உங்கள் பார்வைக்கு இடையூறாக வரக்கூடிய விளம்பரத்தை மட்டும், ’ஸ்கிரீன் ஷாட்’ எடுத்து எங்களுக்கு அனுப்புங்கள். உங்களின் சிரமத்துக்கு தீர்வு காணுகிறோம்.

நன்றி. தினமலர்

இங்கு வெளியாகும் விளம்பரங்கள், வாசகர்களுக்கு பயனளிக்கும் என்பதாலேயே சேர்க்கப்படுகின்றன. Ad blocker போடுவதன் மூலம், பயனுள்ள பல தகவல்களை நீங்கள் தவறவிடவும் வாய்ப்புண்டு. Ad blocker ஐ தவிருங்கள்.

You’ll usually find this icon in the upper right-hand corner of your screen. You may have more than one ad blocker installed.

You may have to select a menu option or click a button.

மூலக்கதை