ஆக., 5ல்? துணை ஜனாதிபதி தேர்தல்...

தினமலர்  தினமலர்
ஆக., 5ல்? துணை ஜனாதிபதி தேர்தல்...

துணை ஜனாதிபதி தேர்தல் ஆக., 5ல் நடக்க உள்ளதாக, தகவல் வெளியாகி உள்ளது. இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு, ஜூலை 4 அல்லது 5ம் தேதி வெளியிடப்பட வாய்ப்புள்ளது. ஜனாதிபதி ராம்நாத் கோவிந்தின் பதவிக்காலம் ஜூலை 25ம் தேதி முடிவடைவதை அடுத்து, புதிய ஜனாதிபதியை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் ஜூலை 18ல் நடக்கிறது.

ஆலோசனை



இதில், தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில், ஒடிசாவின் பழங்குடி இனத்தைச் சேர்ந்த திரவுபதி முர்முவும், எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளராக முன்னாள் மத்திய அமைச்சர் யஷ்வந்த் சின்ஹாவும் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர்.இதற்கிடையே, துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடுவின் பதவிக்காலம் ஆக., 10ல் முடிவுக்கு வருகிறது. அதற்கு முன் தேர்தல் நடத்தி, புதிய துணை ஜனாதிபதியை தேர்ந்தெடுக்க வேண்டும் என்பது விதி. தேர்தல் தேதிக்கான அறிவிப்பை, பதவிக்காலம் முடிவுக்கு வருவதற்கு, 60 நாட்கள் முன்னதாக அறிவிக்க வேண்டும் என்பது மரபு. இந்நிலையில், துணை ஜனாதிபதிக்கான தேர்தல் ஆக., 5ல் நடக்க உள்ளதாக தேர்தல் ஆணைய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.


இது தொடர்பாக, தலைமை தேர்தல் ஆணையர் ராஜிவ்குமார் இரண்டு சுற்று ஆலோசனை கூட்டத்தை நடத்தி முடித்துள்ளதாகவும், அனுப் பாண்டே உள்ளிட்ட தேர்தல் ஆணையர்கள் அதில் பங்கேற்றதாகவும் கூறப்படுகிறது.ஒருவேளை ஆக., 5ல் துணை ஜனாதிபதி தேர்தல் தேதி உறுதியானால், ஜூலை 18 அல்லது 19 வேட்பு மனு தாக்கலுக்கான கடைசி நாளாக அமையும். தேர்தல் ஆணைய அதிகாரிகள் அனைவரும் ஒன்றுகூடி ஆலோசனை நடத்திய பின் தேதி அறிவிக்கப்பட உள்ளது. வரும் 4 அல்லது 5ம் தேதிகளில் அறிவிப்பு வெளியாக வாய்ப்புள்ளதாக தேர்தல் ஆணைய அதிகாரி தெரிவித்தார். இரண்டு தேதிகள் பரிசீலனையில் இருப்பதாகவும் அவர் கூறினார்.

பா.ஜ.,வின் பலம்



லோக்சபா மற்றும் ராஜ்யசபாவின் நியமன எம்.பி.,க்கள் உட்பட அனைத்து எம்.பி.,க்களும் ஓட்டளித்து துணை ஜனாதிபதியை தேர்ந்தெடுப்பர். ராஜ்யசபாவில், தேர்ந்தெடுக்கப்பட்ட எம்.பி.,க்கள் 233 பேரும், நியமன எம்.பி.,க்கள் 12 பேரும் உள்ளனர்.

லோக்சபாவில் 543 தேர்ந்தெடுக்கப்பட்ட எம்.பி.,க்களும், இரண்டு நியமன எம்.பி.,க்களும் உள்ளனர். இரு சபைகளின் எம்.பி.,க்கள் எண்ணிக்கை 790 ஆக உள்ளது.லோக்சபாவில் பா.ஜ.,வுக்கு 303 எம்.பி.,க்களும், ராஜ்யசபாவில் 92 எம்.பி.,க்களும் சேர்த்து மொத்தம், 395 எம்.பி.,க்கள் உள்ளனர்.
கூட்டணி கட்சிகளையும் சேர்த்தால், பா.ஜ.,வின் பலம் 430க்கு மேல் உயரும். எதிர்க்கட்சிகளின் ஒட்டுமொத்த பலம் 360 ஆக உள்ளது. எனவே, துணை ஜனாதிபதியாக தே.ஜ., கூட்டணி வேட்பாளர் சுலபமாக வெல்லும் நிலையே உள்ளது. -- புதுடில்லி நிருபர் -

துணை ஜனாதிபதி தேர்தல் ஆக., 5ல் நடக்க உள்ளதாக, தகவல் வெளியாகி உள்ளது. இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு, ஜூலை 4 அல்லது 5ம் தேதி வெளியிடப்பட வாய்ப்புள்ளது. ஜனாதிபதி ராம்நாத் கோவிந்தின்

சமரசத்துக்கு இடமளிக்காமல்... அதிகாரத்துக்கு அடிபணியாமல்... நேர்மையான முறையில் துணிச்சலான செய்திகளை மக்களிடம் கொண்டு சேர்க்கும் இணையத்தள செய்தி ஊடகங்களுக்கு, விளம்பர வருவாயே உயிர்நாடி. அதுவே, நீங்கள் விரும்பி வா(நே)சிக்கும் தினமலர், இணையதளத்துக்கும்...

ஆகவே அன்பிற்கினிய வாசகர்களே,‘ஆட்பிளாக்கர்’ உபயோகிப்பதை தவிர்த்து, துணிச்சலான ஊடகத்தின் நேர்மைக்கு தோள் கொடுங்கள். உங்கள் பார்வைக்கு இடையூறாக வரக்கூடிய விளம்பரத்தை மட்டும், ’ஸ்கிரீன் ஷாட்’ எடுத்து எங்களுக்கு அனுப்புங்கள். உங்களின் சிரமத்துக்கு தீர்வு காணுகிறோம்.

நன்றி. தினமலர்

இங்கு வெளியாகும் விளம்பரங்கள், வாசகர்களுக்கு பயனளிக்கும் என்பதாலேயே சேர்க்கப்படுகின்றன. Ad blocker போடுவதன் மூலம், பயனுள்ள பல தகவல்களை நீங்கள் தவறவிடவும் வாய்ப்புண்டு. Ad blocker ஐ தவிருங்கள்.

You’ll usually find this icon in the upper right-hand corner of your screen. You may have more than one ad blocker installed.

You may have to select a menu option or click a button.

மூலக்கதை