நுபுர் சர்மா விவகாரத்திற்குப் பின் யுஏஇ சென்ற பிரதமருக்கு சிறப்பான வரவேற்பு

தினமலர்  தினமலர்
நுபுர் சர்மா விவகாரத்திற்குப் பின் யுஏஇ சென்ற பிரதமருக்கு சிறப்பான வரவேற்பு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

அபுதாபி: நுபுர் சர்மா விவகாரத்திற்குப் பிறகு, ஒரு நாள் பயணமாக ஐக்கிய அரபு எமீரேட்ஸ்(யுஏஇ) வந்த பிரதமர் மோடியை அந்நாட்டு அதிபர் ஷேக் முகமது பின் ஜயித் அல் நயான் விமான நிலையத்திற்கு வந்து வரவேற்றார்.

ஜி7 மாநாட்டில் பங்கேற்க ஜெர்மனி சென்ற பிரதமர் மோடி, அதனை முடித்து கொண்டு அங்கிருந்து கிளம்பினார். வழியில், ஐக்கிய அரபு எமீரேட்ஸ் முன்னாள் அதிபராக இருந்த ஷேக் காலிபா பின் சயித் அல் நஹ்யான் மறைவுக்கு, இரங்கல் தெரிவிக்க அபுதாபி சென்றடைந்தார்.

விமான நிலையத்தில் மோடியை, யுஏஇ அதிபர் ஷேக் முகமது பின் ஜயீத் அல் நஹ்யான் நேரில் வந்து கட்டியணைத்து வரவேற்று அழைத்து சென்றார்.

இது தொடர்பாக வெளியுறவு அமைச்சகத்தின் செய்தி தொடர்பாளர் அரிந்தம் பக்சி கூறுகையில், இது சிறப்பான வரவேற்பு. அதிபர் மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்கள் விமான நிலையத்திற்கு வந்து அங்கேயே ஆலோசனை நடத்தினர் என்றார்.

இந்த சந்திப்பின் போது, அதிபராக இருந்த ஷேக் காலிபா பின் சயித் அல் நஹ்யான் மறைவுக்கு மோடி, தனது இரங்கலை தெரிவித்து கொண்டார். பின்னர், இரு தரப்பு உறவுகள், வர்த்தகம், பாதுகாப்பு ஒத்துழைப்பு உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து இரு தலைவர்களும் ஆலோசனை நடத்தினர்.

அபுதாபி: நுபுர் சர்மா விவகாரத்திற்குப் பிறகு, ஒரு நாள் பயணமாக ஐக்கிய அரபு எமீரேட்ஸ்(யுஏஇ) வந்த பிரதமர் மோடியை அந்நாட்டு அதிபர் ஷேக் முகமது பின் ஜயித் அல் நயான் விமான நிலையத்திற்கு

சமரசத்துக்கு இடமளிக்காமல்... அதிகாரத்துக்கு அடிபணியாமல்... நேர்மையான முறையில் துணிச்சலான செய்திகளை மக்களிடம் கொண்டு சேர்க்கும் இணையத்தள செய்தி ஊடகங்களுக்கு, விளம்பர வருவாயே உயிர்நாடி. அதுவே, நீங்கள் விரும்பி வா(நே)சிக்கும் தினமலர், இணையதளத்துக்கும்...

ஆகவே அன்பிற்கினிய வாசகர்களே,‘ஆட்பிளாக்கர்’ உபயோகிப்பதை தவிர்த்து, துணிச்சலான ஊடகத்தின் நேர்மைக்கு தோள் கொடுங்கள். உங்கள் பார்வைக்கு இடையூறாக வரக்கூடிய விளம்பரத்தை மட்டும், ’ஸ்கிரீன் ஷாட்’ எடுத்து எங்களுக்கு அனுப்புங்கள். உங்களின் சிரமத்துக்கு தீர்வு காணுகிறோம்.

நன்றி. தினமலர்

இங்கு வெளியாகும் விளம்பரங்கள், வாசகர்களுக்கு பயனளிக்கும் என்பதாலேயே சேர்க்கப்படுகின்றன. Ad blocker போடுவதன் மூலம், பயனுள்ள பல தகவல்களை நீங்கள் தவறவிடவும் வாய்ப்புண்டு. Ad blocker ஐ தவிருங்கள்.

You’ll usually find this icon in the upper right-hand corner of your screen. You may have more than one ad blocker installed.

You may have to select a menu option or click a button.

மூலக்கதை