காமன் வெல்த் செல்லும் இந்திய ஹாக்கி அணிக்கு பயிற்சி முகாம்

தினகரன்  தினகரன்
காமன் வெல்த் செல்லும் இந்திய ஹாக்கி அணிக்கு பயிற்சி முகாம்

பெங்களூர்: காமன் வெல்த் போட்டிக்கு செல்லும் இந்திய ஆடவர் அணிக்கான 3வார பயிற்சி முகாம் பெங்களூரில் நேற்று தொடங்கியது. ஹாக்கி புரோ லீக்  தொடரில் விளையாட பெல்ஜியம் சென்றிருந்த இந்திய ஆடவர் 3வது இ டம் பிடித்து நாடு திரும்பியது. நாடு திரும்பிய வீரர்கள், சில நாட்கள் ஓய்வுக்கு பிறகு,   பெங்களூரில் உள்ள இந்திய விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின்(சாய்)  பயிற்சி மையத்துக்கு  வந்தனர்.காமன் வெல்த் போட்டியில் பங்கேற்கும் மன்பிரீத்  சிங் தலைமையிலான இந்திய அணிக்கு சாய் மையத்தில் 3வார பயிற்சி முகாம் நேற்று தொடங்கியது.  இந்த  முகாமில்  பவன், ஜேஷ், வருண்குமார், அபிஷேக், சஞ்ஜெய், விவேக் சாகர், ஹர்மன்பிரீத் என   31 வீரர்கள் பங்கேற்று உள்ளனர். காமன்வெல்த் விளையாட்டுப் போட்டி இங்கிலாந்தில் ஜூலை 28ம் தேதி தொடங்கிறது.   பயிற்சி முகாம் குறித்து  இந்திய ஆடவர் அணியின் தலைமைப் பயிற்சியாளர் கிரஹம் ரீட் நேற்று, ‘ஹாக்கி புரோ லீக் தொடரில் பங்கேற்று விட்டு நாடு திரும்பிய இந்திய வீரர்களுக்கு 6 நாட்கள் ஓய்வு வழங்கப்பட்டது.  இடையில் கிடைத்த 6 நாட்களை தங்கள் குடும்பத்தினருடன் செலவிட்டதால்,  வீரர்களுக்கு மனதளவிலும், உடலளவிலும்  புத்துணர்ச்சி கிடைத்திருக்கும்.இனி அடுத்த 3 வாரங்கள் இடைவிடாமல் பயிற்சி முகாம் நடைபெறும்.  கூடவே புரோ லீக் தொடரில் உலகின் த லைசிறந்த அணிகளுடன் விளையாட நமக்கு  வாய்ப்பு  கிடைத்தது. அணியில்  சில விஷயங்களை சரிசெய்ய வேண்டி உள்ளது.  அதனை  வரும் நாட்களில்  செய்து விடுவோம். அதன் மூலம்  காமன் வெல்த் போட்டியில் எங்களின் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவோம்’ என்றார்.

மூலக்கதை