பிராத்வைட் அரைசதம் | ஜூன் 25, 2022

தினமலர்  தினமலர்
பிராத்வைட் அரைசதம் | ஜூன் 25, 2022

செயின்ட் லுாசியா: வங்கதேசத்துக்கு எதிரான 2வது டெஸ்டில் விண்டீஸ் கேப்டன் கிரெய்க் பிராத்வைட் அரைசதம் அடித்தார்.

விண்டீஸ், வங்கதேசம் அணிகள் மோதும் 2வது டெஸ்ட் செயின்ட் லுாசியாவில் நடக்கிறது. வங்கதேச அணிக்கு கேப்டன் சாகிப் அல் ஹசன் (8) ஏமாற்றினார். லிட்டன் தாஸ் (53), தமிம் இக்பால் (46) கைகொடுக்க, வங்கதேச அணி முதல் இன்னிங்சில் 234 ரன்னுக்கு ‘ஆல்–அவுட்’ ஆனது. விண்டீஸ் சார்பில் ஜெய்டன் சீல்ஸ், அல்சாரி ஜோசப் தலா 3 விக்கெட் கைப்பற்றினர். பின் முதல் இன்னிங்சை துவக்கிய விண்டீஸ் அணி, முதல் நாள் முடிவில் விக்கெட் இழப்பின்றி 67 ரன் எடுத்திருந்தது. பிராத்வைட் (30), கேம்ப்பெல் (32) அவுட்டாகாமல் இருந்தனர்.

 

பிராத்வைட் அரைசதம்: இரண்டாம் நாள் ஆட்டத்தில் முதல் விக்கெட்டுக்கு 100 ரன் சேர்த்த போது ஜான் கேம்ப்பெல் (45) அவுட்டானார். பொறுப்பாக ஆடிய கேப்டன் கிரெய்க் பிராத்வைட் (51), தனது 27வது டெஸ்ட் அரைசதமடித்தார். கலீத் அகமது பந்தில் ரேமன் ரெய்பர் (22), பானர் (0) போல்டாகினர்.

 

உணவு இடைவேளையின் போது விண்டீஸ் அணி முதல் இன்னிங்சில் 4 விக்கெட்டுக்கு 137 ரன் எடுத்திருந்தது. பிளாக்வுட் (2), கைல் மேயர்ஸ் (4) அவுட்டாகாமல் இருந்தனர். வங்கதேசம் சார்பில் கலீத் அகமது 2 விக்கெட் வீழ்த்தினார்.

மூலக்கதை