நெல்லை அணி மீண்டும் வெற்றி: சேலத்தை சுலபமாக வீழ்த்தியது | ஜூன் 25, 2022

தினமலர்  தினமலர்
நெல்லை அணி மீண்டும் வெற்றி: சேலத்தை சுலபமாக வீழ்த்தியது | ஜூன் 25, 2022

திருநெல்வேலி: நெல்லைக்கு எதிரான டி.என்.பி.எல்., லீக் போட்டியில் டேரில் பெராரியோ அரைசதம் கடந்து கைகொடுக்க சேலம் அணி 20 ஓவரில் 149 ரன் எடுத்தது.

தமிழக பிரிமியர் லீக் (டி.என்.பி.எல்.,) கிரிக்கெட் 6வது சீசன் நடக்கிறது. திருநெல்வேலியில் நடந்த லீக் போட்டியில் சேலம், நெல்லை அணிகள் மோதின. ‘டாஸ்’ வென்ற நெல்லை அணி ‘பீல்டிங்’ தேர்வு செய்தது.

 

சேலம் அணிக்கு ஜாபர் ஜமால் (11), கோபிநாத் (10) ஜோடி சுமாரான துவக்கம் தந்தது. பின் இணைந்த கவின், டேரில் பெராரியோ ஜோடி ரன் மழை பொழிந்தது. மூன்றாவது விக்கெட்டுக்கு 91 ரன் சேர்த்த போது ஹரிஷ் பந்தில் கவின் (48 ரன், 3 சிக்சர், 3 பவுண்டரி) அவுட்டானார். அடுத்து வந்த ரவி கார்த்திகேயன் (0), அபிஷேக் (1), கேப்டன் முருகன் அஷ்வின் (5), பிரானேஷ் (3) ஏமாற்றினர். தனிநபராக அசத்திய டேரில் பெராரியோ அரைசதம் கடந்தார்.

 

சேலம் அணி 20 ஓவரில் 7 விக்கெட்டுக்கு 149 ரன் எடுத்தது. பெராரியோ (60 ரன், 2 சிக்சர், 4 பவுண்டரி), கணேஷ் மூர்த்தி (1) அவுட்டாகாமல் இருந்தனர். நெல்லை அணி சார்பில் அதிசயராஜ் டேவிட்சன், ஹரிஷ் தலா 2 விக்கெட் கைப்பற்றினர்.

 

 

நெல்லை அணி 17.4 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 152 ரன் எடுத்து வெற்றி பெற்றது. அஜிதேஷ் (48 ரன், 5 சிக்சர்), ஜிதேந்திர குமார் (10) அவுட்டாகாமல் இருந்தனர். சேலம் சார்பில் கிஷோர் 2 விக்கெட் வீழ்த்தினார்.

மூலக்கதை