எழுத்தாளரின் அனுபவங்கள்: ‛ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கரை கடத்த முயன்ற விடுதலைப்புலிகள்'

தினமலர்  தினமலர்
எழுத்தாளரின் அனுபவங்கள்: ‛ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கரை கடத்த முயன்ற விடுதலைப்புலிகள்

'வாழும் கலை' நிறுவனர் ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கரின் முக்கிய சீடர்களில் ஒருவர் சுவாமி விருபாக் ஷா; மனமாற்ற பயிற்சி நிபுணர். இலங்கையில் போர் நடந்த காலத்தில் அங்கு பணியாற்றியவர்.

தற்போது பெங்களூரில் 'வாழும் கலை' தலைமையகத்தில் தியானம் கற்பிக்கிறார். இவர் தனது இலங்கை அனுபவங்கள் குறித்து எழுதிய, 'தி டைகர்ஸ் பாஸ்' என்ற ஆங்கில புத்தகம், 'அமேசான்' விற்பனையில் 'நம்பர் - 1' இடத்தை பிடித்தது.

இந்த புத்தகத்தின் தமிழாக்கத்தை, வி.கதிர்வேல் எழுத, 'தாமரை பிரதர்ஸ் மீடியா பிரைவேட் லிமிடெட்' வெளியிட்டு உள்ளது. மூல நுாலின் ஆசிரியர் சுவாமி விருபாக் ஷாவுடன் ஒரு நேர்காணல்இந்த புத்தகம் எழுத எது உங்களைத் துாண்டியது?

இலங்கையில், 2009ல் முடிவடைந்த, 26 ஆண்டு கால உள்நாட்டு போரில் பல்வேறு தரப்பினர் மத்தியஸ்தம் செய்து சமாதானத்தை ஏற்படுத்த முயன்றனர். ஆனால், இந்தியாவில் இருந்து முதல், ஒரே ஆன்மிக தலைவராக 'வாழும் கலை' நிறுவனர் ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் முயற்சிகளை மேற்கொண்டது சிலருக்கு மட்டுமே தெரியும். இலங்கையில் நடந்த உண்மை சம்பவங்களை மக்களுக்கு எடுத்துச் சொல்லவும், தெரியாத விபரங்கள், ரகசியங்கள், சதி, குறிப்பாக இலங்கை உள்நாட்டுப் போரின் இறுதிக் கட்டத்தில் கற்றுக்கொண்ட பாடங்களை வெளிப்படுத்தவும் 'தி டைகர்ஸ் பாஸ்' புத்தகத்தை எழுதினேன். இது ஒரு த்ரில்லர் புத்தகம். ஆனால், நிஜமான சம்பவங்களை கொண்டது.

பல சொல்லப்படாத நிகழ்வுகளையும், விடுதலைப்புலிகள், அதன் மறைந்த தலைவர் பிரபாகரனுடனான நமது தொடர்புகளையும் வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது; 'புலியின் நிசப்தம்' நுால் இதன் தமிழாக்கம்.அந்த காலகட்டத்தில் நீங்கள் இலங்கையில் இருந்தீர்களா?ஒன்பது வருடங்கள் இருந்தேன். ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர்ஜியின் மத்தியஸ்த முயற்சியில் நான் அவருடன் மிக நெருக்கமாக பணியாற்றியிருக்கிறேன்.

இலங்கைத் தீவை 2004ல் மிக மோசமாக சுனாமி தாக்கியபோது, மக்களுக்கு உதவவும், சேவை செய்யவும் அவர் என்னை அனுப்பியிருந்தார்.சுனாமி நிவாரண பணிகளுக்கும், போருக்கும் நீங்கள் சாட்சியாக இருந்தீர்களா?

அதிர்ஷ்டவசமாக சுனாமியின் போது விடுதலைப் புலிகளுக்கும், இலங்கை அரசுக்கும் இடையே போர் நிறுத்த ஒப்பந்தம் ஏற்பட்டது.எனவே, அந்த நேரத்தில் முழு அளவிலான போர் இல்லை. சில வன்முறை சம்பவங்கள், குண்டுவெடிப்புகள், படுகொலை முயற்சிகள் 2007 வரை நடந்தன. இறுதி கட்ட போர் நிதானமாக, ஆனால் நிஜமாக துவங்கியது. போரின் சவால்கள் சிக்கலானவை; சமாதான முயற்சியிலும் சவால்கள் இருந்தன.

அமைதியை நிலைநாட்ட இருந்த சவால்கள் என்ன?

ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் விடுதலைப் புலிகளாலும், இலங்கை அரசாலும் முழுமையாக ஏற்றுக் கொள்ளப்பட்டு, மோதலுக்கு தீர்வு காண உதவுவதற்காக அழைக்கப்பட்டார். அந்த நேரத்தில், நிறைய அவநம்பிக்கை, பரஸ்பர சந்தேகம், இரு தரப்பினரிடையே தொடர்பின்மை ஆகியவை இருந்தன. இரண்டு கட்சிகளையும் பேச்சு நடத்த முன்வரும் படி செய்தார். ஒரு மோதலில் மத்தியஸ்தம் செய்யும் பணி என்பது நீடித்த அமைதியை கொண்டு வருவதற்கான நீண்ட, தொடர்ச்சியான செயல் முறை. இத்தகைய முறையில், அயோத்தியிலும் அவர் வெற்றி பெற்றுள்ளார். அமைதியான சூழலை உடனடியாக உருவாக்கும் மிகச் சிறந்த திறன் அவருக்கு உள்ளது.

இலங்கை இறுதிப்போரை நிறுத்தி, அமைதியை ஏற்படுத்த வாய்ப்பு இருந்ததாக நினைக்கிறீர்களா?

போரின் நான்காவது, இறுதி கட்டத்தை தவிர்க்க வாய்ப்பு இருந்தது; போரை தவிர்க்க கிடைத்த பல பொன்னான வாய்ப்புகளை, இரு தரப்பும் தவற விட்டு விட்டது.என் தனிப்பட்ட கருத்துப்படி, இது இலங்கை இழந்த, தவறவிட்ட வாய்ப்பு. புத்தகத்தில் பல திடுக்கிடும் தகவல்களை வெளியிட்டிருக்கிறேன்.

இலங்கைத் தமிழர்களுக்கு அன்றைய காங்.,- - தி.மு.க., கூட்டணி அரசு, இன்னும் அதிகமாக செய்திருக்க முடியும் என்று நினைக்கிறீர்களா?

நிச்சயமாக. 2006 ஏப்ரலிலேயே ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர்ஜிக்கு புலிகள் தலைவர் பிரபாகரனை சந்திக்க அனுமதி அளித்திருந்தால் கண்டிப்பாக முடிந்திருக்கும். போர் நிறுத்த ஒப்பந்தம் ஏற்கனவே செயல்பாட்டில் இருந்தது.நிரந்தர அமைதியை கொண்டு வர வாய்ப்பு திறக்கப்பட்டிருக்கும். துரதிர்ஷ்டவசமாக பிரபாகரனை சந்திக்க ரவிசங்கர்ஜி அனுமதிக்கப்படவில்லை. தமிழகத்தில் தேர்தல் நடந்து கொண்டிருந்ததால், அவரை சந்திக்க செல்ல முடியாது என, எங்களுக்கு சொல்லப்பட்டது.

ஐந்து மாதங்களுக்குப் பின், அந்த ஆண்டு செப்டம்பரில், கிளிநொச்சியில் ரவிசங்கரை சந்திக்க பிரபாகரன் ஒப்புக்கொண்டார்; மீதி அனைத்தும் வரலாறு. அதை நுாலில் படியுங்கள்.ரவிசங்கர்ஜியை புலிகள் கடத்த திட்டமிட்டு இருந்ததாக எழுதியுள்ளீர்களே...ஆம். அங்கு நான் இருந்த போது எனக்கு கிடைத்த ரகசிய தகவலை எழுதியிருக்கிறேன்.அப்படி கடத்தி இருந்தால், இலங்கை பிரச்னையில் என்ன மாற்றம் நிகழ்ந்திருக்கும். பிரபாகரன் மனநிலையை ரவிசங்கர்ஜி மாற்றி இருப்பாரா?

கடத்தி இருந்தால் இருவர் சந்திப்பும் நிகழ்ந்து, அவர்கள் பேசியிருக்க கூடும். என்றாலும் என்ன விளைவு ஏற்பட்டிருக்கும் என, யூகிக்க முடியாது. மாறாக நீங்கள் கேட்பது போல், பிரபாகரன் மனதில் சுவாமிஜி மாற்றம் ஏற்படுத்த வாய்ப்பு இருந்தது. ஏனெனில், பலருடைய எண்ணங்களில் மாற்றம் ஏற்படுத்தியவர் அவர்.இவ்வாறு கூறினார்.புத்தகம் பெற 1800 425 7700 என்ற டோல் பிரீ எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

- நமது நிருபர் -

'வாழும் கலை' நிறுவனர் ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கரின் முக்கிய சீடர்களில் ஒருவர் சுவாமி விருபாக் ஷா; மனமாற்ற பயிற்சி நிபுணர். இலங்கையில் போர் நடந்த காலத்தில் அங்கு பணியாற்றியவர். nsimg3062212nsimg

சமரசத்துக்கு இடமளிக்காமல்... அதிகாரத்துக்கு அடிபணியாமல்... நேர்மையான முறையில் துணிச்சலான செய்திகளை மக்களிடம் கொண்டு சேர்க்கும் இணையத்தள செய்தி ஊடகங்களுக்கு, விளம்பர வருவாயே உயிர்நாடி. அதுவே, நீங்கள் விரும்பி வா(நே)சிக்கும் தினமலர், இணையதளத்துக்கும்...

ஆகவே அன்பிற்கினிய வாசகர்களே,‘ஆட்பிளாக்கர்’ உபயோகிப்பதை தவிர்த்து, துணிச்சலான ஊடகத்தின் நேர்மைக்கு தோள் கொடுங்கள். உங்கள் பார்வைக்கு இடையூறாக வரக்கூடிய விளம்பரத்தை மட்டும், ’ஸ்கிரீன் ஷாட்’ எடுத்து எங்களுக்கு அனுப்புங்கள். உங்களின் சிரமத்துக்கு தீர்வு காணுகிறோம்.

நன்றி. தினமலர்

இங்கு வெளியாகும் விளம்பரங்கள், வாசகர்களுக்கு பயனளிக்கும் என்பதாலேயே சேர்க்கப்படுகின்றன. Ad blocker போடுவதன் மூலம், பயனுள்ள பல தகவல்களை நீங்கள் தவறவிடவும் வாய்ப்புண்டு. Ad blocker ஐ தவிருங்கள்.

You’ll usually find this icon in the upper right-hand corner of your screen. You may have more than one ad blocker installed.

You may have to select a menu option or click a button.

மூலக்கதை