ஜிப்மரில் டாக்டர் பற்றாக்குறை சரி செய்யப்பட வேண்டும்: தமிழிசை

தினமலர்  தினமலர்
ஜிப்மரில் டாக்டர் பற்றாக்குறை சரி செய்யப்பட வேண்டும்: தமிழிசை

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

புதுச்சேரி : புதுச்சேரியில் உள்ள ஆஷா பணியாளர்களின் சேவையை உலக சுகாதார நிறுவனம் பாராட்ட உள்ளது என கவர்னர் தமிழிசை பேசினார்.ஜிப்மர் வளாகத்தில் சர்வதேச பொது சுகாதாரக் கல்வி மையம் திறப்பு விழா நேற்று நடந்தது. மத்திய சுகாதாரம் மற்றும் ரசாயனம், உரங்கள் துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா கல்வி நிறுவனத்தை திறந்து வைத்தார்.கவர்னர் தமிழிசை, முதல்வர் ரங்கசாமி, சபாநாயகர் செல்வம், பொதுப்பணித் துறை அமைச்சர் லட்சுமிநாராயணன், எம்.பி., செல்வகணபதி, அரசு கொறடா ஆறுமுகம், ஜிப்மர் இயக்குநர் ராகேஷ் அகர்வால் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.




விழாவில் கவர்னர் தமிழிசை பேசியதாவது:சர்வதேச பொது சுகாதார கல்வி நிறுவனம், மருத்துவத் துறையில் நம் முயற்சிகளை மேலும் வளர்த்துக்கொள்ள உதவும். நம் கண்டுபிடிப்புகளும் புதுமையான அணுகுமுறைகளும் மக்களுக்கு இன்னும் சிறந்த முறையில் சேவை செய்ய உதவி செய்யும்.குறிப்பாக, பிரதமரின் ஆயுஷ்மான் பாரத் திட்டத்தை செயல்படுத்துவதற்கான ஒரு இணைப்புப் பாலமாக இருக்கும்.மருத்துவச் சிகிச்சை செலவிற்காக மக்கள் அவதிப்படுவதை நான் பார்த்திருக்கிறேன். நாட்டில் 50 கோடிக்கும் மேற்பட்ட மக்கள் பயனடையும் வகையில் உலகின் மிகப்பெரிய மருத்துவ காப்பீட்டு திட்டமான ஆயுஷ்மான் பாரத் திட்டத்தை பிரதமரின் அறிமுகப்படுத்தினார்.

இத்திட்டத்தில் 90 நாட்களுக்குள் 60 ஆயிரம் நோயாளிகள் இருதய சிகிச்சை பெற்றனர். பொதுவாக மகப்பேறு அறுவை சிகிச்சை மருத்துவக் காப்பீட்டிற்குள் வருவதில்லை. ஆனால் அதையும் இந்த காப்பீட்டு திட்டத்தில் கொண்டு வந்ததற்காக நன்றி கூறுகிறேன்.இந்த சர்வதேச பொது சுகாதாரக் கல்வி நிறுவனம் ஆயுஷ்மான் பாரத் திட்டம் மக்களை சென்றடைய உதவும்.ஜிப்மரில் சில குறைபாடுகள் இருக்கிறது. மருந்து கையிருப்பு, போதிய மருத்துவர்கள் போன்றவை சரி செய்யப்பட வேண்டும். நம் சேவை சிறப்பாக இருக்க வேண்டும். ஜிப்ரில் நடைபெற்று வரும் ஆராய்ச்சி பணிகளை பாராட்டுகிறேன்.நான் கவர்னராக புதுச்சேரிக்கு வந்தபோது வெறும் 4,000 தடுப்பூசிகள் மட்டுமே போடப்பட்டு இருந்தது. அது இன்றைக்கு 17 லட்சம் தடுப்பூசிகளாக உயர்ந்திருக்கிறது.

புதுச்சேரியில் உள்ள ஆஷா பணியாளர்களின் சேவையை உலக சுகாதார நிறுவனம் பாராட்டி உள்ளது.தடுப்பூசிகளையும் அது பற்றிய விழிப்புணர்வையும் மக்களிடம் கொண்டு சென்றதில் ஆஷா பணியாளர்கள் மிகச் சிறப்பாக பணியாற்றி உள்ளனர்.புதுச்சேரியில் தடுப்பூசியை மக்களிடம் கொண்டு செல்ல வீடு வீடாக சென்றோம். அப்போது கசப்பான அனுபவங்களையும் சந்தித்தோம். சிலர் வீடுகளை சாத்திக் கொண்டனர். சிலர் திட்டினர்.அதையும் தாண்டி தடுப்பூசியை மக்களுக்கு கொண்டு சென்றோம். அதன் விளைவாக இன்று நாடும் பாதுகாப்பாக இருக்கிறது. புதுச்சேரி மாநிலமும் பாதுகாப்பாக இருக்கிறது.இவ்வாறு கவர்னர் பேசினார்.


மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா பேசியதாவது:சிறந்த தலைமையான பிரதமர் மோடியின் கீழ் இந்திய நாடு சுகாதாரத் துறையில் வெற்றி கண்டு வருகிறது, குறிப்பாக கொரோனாவை சமாளித்து தடுத்ததில் நாடு வெற்றிகரமான பணியை செய்துள்ளது. ஜிப்மரில் உள்ள சர்வதேச பொது சுகாதார பள்ளி இந்தியாவின் சுகாதார திட்டங்களை அமல்படுத்துவது மட்டுமின்றி, உலகளாவிய பார்வையை பெறும். இது உலகம் ஒரு குடும்பம் என்பதை நினைவுப்படுத்துகிறது. இங்குள்ள சுகாதார நிபுணர்கள் மருத்துவ துாதுவர்களாக செயல்பட வேண்டும்.இவ்வாறு அவர் பேசினார்



புதுச்சேரி : புதுச்சேரியில் உள்ள ஆஷா பணியாளர்களின் சேவையை உலக சுகாதார நிறுவனம் பாராட்ட உள்ளது என கவர்னர் தமிழிசை பேசினார்.ஜிப்மர் வளாகத்தில் சர்வதேச பொது சுகாதாரக் கல்வி மையம்

சமரசத்துக்கு இடமளிக்காமல்... அதிகாரத்துக்கு அடிபணியாமல்... நேர்மையான முறையில் துணிச்சலான செய்திகளை மக்களிடம் கொண்டு சேர்க்கும் இணையத்தள செய்தி ஊடகங்களுக்கு, விளம்பர வருவாயே உயிர்நாடி. அதுவே, நீங்கள் விரும்பி வா(நே)சிக்கும் தினமலர், இணையதளத்துக்கும்...

ஆகவே அன்பிற்கினிய வாசகர்களே,‘ஆட்பிளாக்கர்’ உபயோகிப்பதை தவிர்த்து, துணிச்சலான ஊடகத்தின் நேர்மைக்கு தோள் கொடுங்கள். உங்கள் பார்வைக்கு இடையூறாக வரக்கூடிய விளம்பரத்தை மட்டும், ’ஸ்கிரீன் ஷாட்’ எடுத்து எங்களுக்கு அனுப்புங்கள். உங்களின் சிரமத்துக்கு தீர்வு காணுகிறோம்.

நன்றி. தினமலர்

இங்கு வெளியாகும் விளம்பரங்கள், வாசகர்களுக்கு பயனளிக்கும் என்பதாலேயே சேர்க்கப்படுகின்றன. Ad blocker போடுவதன் மூலம், பயனுள்ள பல தகவல்களை நீங்கள் தவறவிடவும் வாய்ப்புண்டு. Ad blocker ஐ தவிருங்கள்.

You’ll usually find this icon in the upper right-hand corner of your screen. You may have more than one ad blocker installed.

You may have to select a menu option or click a button.

மூலக்கதை