இலங்கைக்கு எதிரான டி20 இந்திய மகளிர் தொடர் வெற்றி

தினகரன்  தினகரன்
இலங்கைக்கு எதிரான டி20 இந்திய மகளிர் தொடர் வெற்றி

தம்புல்லா:  இலங்கைச் சென்றுள்ள இந்திய மகளிர் அணி அங்குள்ள  தம்புல்லாவில் நடக்கும் டி20 தொடரில் விளையாடி வருகிறது. முதல் ஆட்டத்தில் வென்ற இந்தியா  தொடரிலும் 1-0 என்ற கணக்கில் முன்னிலைப் பெற்றது.தொடர்நது 2வது டி20 ஆட்டம்  நேற்று நடந்தது. டாஸ் வென்ற இலங்கை மகளிர் முதலில் களமிறங்கினர். சிறப்பாக விளையாடிய தொடக்க வீராங்கனைகள்  விஸ்மி 45, கேப்டன் சமரி  43ரன்  குவித்து முதல் விக்கெட்டுக்கு 87ரன்  சேர்த்தனர். அடுத்து வந்தவர்கள் இந்திய பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் ஒற்றை இலக்கில் ஆட்டமிழந்தனர். அதனால் இலங்கை 20ஓவர் முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு 125ரன் எடுத்தது.  இந்திய தரப்பில் தீப்தி சர்மா 2 விக்கெட் எடுத்தார். எனவே 126ரன் எடுத்தால்  வெற்றி என்ற இலக்குடன்  களமிறங்கிய இந்தியாவும் தட்டுதடுமாறி, கடைசி ஓவரில்தான் இலக்கை எட்டியது. அதனால்  இந்தியா 19.1ஒவரில்  5 விக்கெட்களை இழந்து  127ரன் எடுத்து 5 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது. இந்திய அணியில் அதிகபட்சமாக மந்தனா 39, கேப்டன் ஹர்மன் 31* ரன் எடுத்தனர். இலங்கை தரப்பில்  இனோகா, ஒஷாடி தலா 2 விக்கெட் எடுத்தனர்.இந்த வெற்றியின் மூலம் 3 ஆட்டங்கள் கொண்ட தொடரை 2-0 என்ற கணக்கில் இந்திய மகளிர் கைப்பற்றி உள்ளனர். இந்த 2 அணிகளும் விளையாடும் கடைசி டி20 ஆட்டம் நாளை நடக்கிறது.

மூலக்கதை