ரஞ்சி பைனல் வெற்றி வாய்ப்பில் மபி

தினகரன்  தினகரன்
ரஞ்சி பைனல் வெற்றி வாய்ப்பில் மபி

பெங்களூர்: மத்திய பிரதேசம்(மபி)-மும்பை அணிகள் மோதும் ரஞ்சிக் கோப்பை இறுதி ஆட்டம் பெங்களூரில் நடக்கிறது. முதல் இன்னிங்சில்  மும்பை 127.4ஓவரில் 374ரன் குவித்தது. தொடர்நது முதல் இன்னிங்சை  விளையாடிய  மபி  3வது நாள்  நாள் ஆட்ட நேர முடிவில் 123ஓவருக்கு 3விக்கெட் இழந்து 368ரன் சேர்த்தது. களத்தில் இருந்த  ரஜத்  67*,  கேப்டன் ஆதித்யா 11*ரன்னுடன் 4வது நாளான நேற்று முதல் இன்னிங்சை தொடர்ந்தனர். ரஜத் பொறுப்புணர்ந்து விளையாட மற்றவர்கள் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். அடுத்து வந்த சரணஷ் கை கொடுக்க இன்னிங்சில் 3வது வீரராக ரஜத் சதம் விளாசினார். அவர் 122 ரன்னில் ஆட்டமிழந்தார். இடையில் அரைசதம் விளாசிய சரணஷ் 57 ரன்னில் ஆட்டமிழக்க மபி முதல் இன்னிங்சும் முடிவுக்கு வந்தது. அப்போது அந்த அணி 177.2ஓவரில் 536 ரன் குவித்து வெற்றி வாய்ப்பில் உள்ளது.  மும்பை தரப்பில்  ஷாம்ஸ் 5, துஷார் 3,  மோகித் 2 விக்கெட் எடுத்தனர். அதனையடுத்து மும்பை 162 பின்தங்கிய நிலையில் தனது 2வது இன்னிங்சை தொடங்கியது. கேப்டன்  பிரித்வி ஷா 44, ஹர்திக் 24 ரன்னில் வெளியேறினர். மும்பை 4வது நாள் ஆட்ட நேர முடிவில் 22ஓவருக்கு 2விக்கெட் இழப்புக்கு 113ரன் எடுத்திருந்தது. அதனால் 49ரன் பின்  தங்கிய நிலையில் களத்தில் உள்ள ஜாபர் 30*, சுவேத் 9*  ரன்னுடன் கடைசி நாளான இன்று மும்பையின் 2வது இன்னிங்சை தொடர்கின்றனர்.

மூலக்கதை