முதல் டி20 ஆட்டம் அயர்லாந்து-இந்தியா மோதல்: கேப்டனாக களமிறங்கும் ஹர்திக்

தினகரன்  தினகரன்
முதல் டி20 ஆட்டம் அயர்லாந்துஇந்தியா மோதல்: கேப்டனாக களமிறங்கும் ஹர்திக்

டப்ளின்:  அயர்லாந்து சென்றுள்ள இந்திய கிரிக்கெட் அணி அங்கு 2  ஆட்டங்களை கொண்ட  டி20 தொடரில் விளையாடுகிறது.  முதல் முறையாக இன்று ஹர்திக் பாண்டியா தலைமையில் இந்திய அணி  சர்வதேச ஆட்டத்தில் களமிறங்குகிறது. ஐபிஎல் தொடரில் முதல்முறையாக கேப்டனாகி அசத்தியதால் ஹர்திக் மீது நம்பிக்கையுடன் பிசிசிஐ கேப்டன் பொறுப்பை வழங்கி உள்ளது.அந்த நம்பிக்கைக்கு வலு சேர்க்க அணியில் உள்ள 17 பேரில்  துணைக் கேப்டன் புவனேஸ்வர், ஹர்ஷல்,  அக்சர், இஷான், தினேஷ் கார்த்திக், ருதுராஜ், ஆவேஷ்கான் ஆகியோருக்கு ஆடும் அணியில்  வாய்ப்பு கிடைக்கும். ரிஷப்  டெஸ்ட் அணிக்கு மாறியிள்ளதால்  சஞ்சு சாம்சன் விக்கெட் கீப்பராக களம் காணுவார்.ஆந்த்ரே பால் பிரைன்  தலைமையிலான அயர்லாந்து தொடர்ந்து பல்வேறு நாடுகளுடன் கிரிக்கெட் தொடர்களில்  இடைவெளியின்றி விளையாடி வருகிறது. ஆனால் கடைசியாக விளையாடிய 5 தொடர்களையும்  அயர்லாந்து இழந்துள்ளது. அவற்றுக்கு முன் ஜிம்பாப்வே உடனான  தொடரை தான் வென்றுள்ளது. ஆனாலும்  அயர்லாந்தின்   லார்கன், கிரெய்க், மார்க் அடயர், ஹாரி டெக்டர், ஜோஷ் லிட்டில் ஆகியோர் இந்தியாவுக்கு கடும் சவாலாக இருப்பார்கள். சொந்த நாட்டில் விளையாடுவது அயர்லாந்துக்கு கூடுதல் பலமாக  இருக்கலாம். அதை புதிய கேப்டனாக ஹர்திக் பாண்டியா, புதிய  பயிற்சியாளராக விவிஎஸ் லட்சுமணனுக்கு எப்படி சமாளிக்கிறார்கள் என்பதில் இருக்கிறது முடிவு.மூன்றிலும் வெற்றிஇந்த 2 அணிகளும் இதுவரை மூன்றே 3 டி20 ஆட்டங்களில்தான் விளையாடி உள்ளன. அந்த 3 ஆட்டங்களிலும்  இந்திய அணிதான் வென்றுள்ளது. அதிலும் 143ரன், 76ரன், 8 விக்கெட்கள்  என பெரிய வித்தியாசத்தில்  அபார வெற்றிப் பெற்றுள்ளது.

மூலக்கதை