டிஎன்பிஎல் கிரிக்கெட்; சேலத்தை வீழ்த்தியது நெல்லை.! கோவை-திண்டுக்கல் இன்று மோதல்

தினகரன்  தினகரன்
டிஎன்பிஎல் கிரிக்கெட்; சேலத்தை வீழ்த்தியது நெல்லை.! கோவைதிண்டுக்கல் இன்று மோதல்

நெல்லை:நெல்லை சங்கர்நகரில் நடைபெற்று வரும் டிஎன்பிஎல் கிரிக்கெட் தொடரில் நேற்றிரவு சேலம் ஸ்பார்டன்ஸ்-நெல்லை ராயல் கிங்ஸ் அணிகள் மோதின. முதலில் ஆடிய சேலம் அணியில் கவின் 48, டேரில் பெராரியா 60 ரன்கள் விளாச, அந்த அணி 20 ஓவரில் 7 விக்கெட் இழப்பிற்கு 149 ரன்கள் சேர்த்தது. நெல்லை அணியில் அதிசயராஜ் டேவிட்சன், ஹரிஷ் தலா 2 விக்கெட் எடுத்தனர். இதையடுத்து களமிறங்கிய நெல்லை ராயல் கிங்ஸ் அணியின் துவக்க வீரர் பிரதோஷ் ரஞ்சன் பால் ஒரு ரன்னில் ஆட்டமிழந்தார். மற்றொரு துவக்க வீரர் சூரிய பிரகாஷ் 35 ரன், அபராஜித் 32 ரன், பாபா இந்திரஜித் 15 ரன் எடுத்தனர். அதன்பின்னர் அஜிதேஷ் அதிரடியாக 25 பந்துகளில் 1 பவுண்டரி, 5 சிக்சர்களுடன் 48 ரன்கள் (நாட் அவுட்), ஜிதேந்திர குமார் ஆட்டமிழக்காமல் 10 ரன்கள் சேர்த்தார். இதனால் நெல்லை அணி 152 ரன்கள் எடுத்து, 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. இந்த தொடரில் நெல்லை அணிக்கு இது 2வது வெற்றியாகும். டிஎன்பிஎல் தொடரில் இன்று இரவு 7.15 மணிக்கு கோவை கிங்ஸ்-திண்டுக்கல் டிராகன்ஸ் அணிகள் மோதுகின்றன.

மூலக்கதை