தமிழகத்தில் நடைபெற உள்ள 44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டியிலிருந்து விலகியது சீன அணி

தினகரன்  தினகரன்
தமிழகத்தில் நடைபெற உள்ள 44வது செஸ் ஒலிம்பியாட் போட்டியிலிருந்து விலகியது சீன அணி

சென்னை: தமிழகத்தில் நடைபெற உள்ள 44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டியிலிருந்து விலகுவதாக சீன அணி தெரிவித்துள்ளது. சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் வரும் ஜூலை 28-ஆம் தேதி செஸ் ஒலிம்பியாட் போட்டி தொடங்க உள்ளது.இத்தொடரில் பங்கேற்க 187 நாடுகள் பதிவு செய்திருக்கும் நிலையில், ஒலிம்பியாட் தொடர் வரலாற்றில் அதிக நாடுகள் பதிவு செய்துள்ள தொடராக இது அமைந்துள்ளது. இந்நிலையில் செஸ் ஒலிம்பியாட் தொடரிலிருந்து சீன அணி விலகியுள்ளது. செஸ் ஒலிம்பியாட் தொடரில் சீன அணி 2014, 2018 ஆம் ஆண்டுகளில் ஓபன் பிரிவில் தங்கம் வென்றது. சீன மகளிர் அணியினர் இதற்கு முன் நடந்த 2 தொடர்களிலும் தங்கம் வென்றனர்.உக்ரைன் மீது போர் தொடுத்ததன் காரணமாக ஏற்கனவே ரஷ்யா அணிக்கு செஸ் ஒலிம்பியாட்டியில் பங்கேற்க தடை விதிக்கப்பட்டுள்ளது. சீனா, ரஷ்ய அணிகள் பங்கேற்காததால் இந்தியாவுக்கு பதக்க வாய்ப்பு பிரகாசமாகியுள்ளது.

மூலக்கதை